Saturday, January 11, 2014

சிதம்பரத்தில் வன்னியர் வேளாளர் யுத்தம் :



வலங்கை இடங்கை என்ற பிரிவு தென்னகத்தில் தோன்றியது .

""வேளாளர் , வடுகர் ஆகிய சில சாதியர்கள் ஒன்று சேர்ந்து தங்களை வலங்கையினர் என்று வைத்துகொண்டு , கம்மியர் முதலிய சில சாதிகளை எதிர்த்து அழிக்க தலைப்பட்டனர் . கம்மியர் முதலிய 9 சாதிகள் தங்களை இடங்கை என்று கூறி வலங்கையினரை எதிர்த்தனர் .......

வன்னியர்களும் பார்ப்பனர்களும் அக்கட்சிகளில் கலக்காமல் நடுநிலைமை வகித்தனர் .ஆனால் பலமுள்ள வலங்கை வகுப்பார்கள் இடங்கைலார்களை அழிக்க ஆரம்பித்த காலத்தில் , இடங்கை சாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வீரமும் ஆண்மையும் உள்ள வன்னியர்கள் வலங்கையாளர்களை அடக்கி , இடங்கையாளர்களை  காப்பாற்றினர் .

இக்கலகம் நூறு வருடத்திற்கும் மேலாக நடந்தது . பலமுறை வலங்கையினர், வன்னியர்களால் படுகொலையடைந்தனர் .

"பரம்பரை விவசாய வகுப்பினராகிய வேளாளர்களுக்கு உதவி செய்யும் குடிகள் 18 வகுப்பாளர்கள் .அவர்களில் கம்மாளர் 5 பிரிவுகளும் அடங்கியுள்ளனர் . அராஜக காலத்தில் கம்மியர்கள் தங்கள்  எஜமானர்களாகிய வேளாளர்கள் கட்டளைகளை மீறியதால் வழக்கு நேர்ந்தது .

06.07.1819 ஆம் ஆண்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரி துக்கடி , கஸ்பா , முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வலங்கை இடங்கை கலகங்கள் நடைப்பெற்றன ,

1844 வது ஆண்டில் சிதம்பரம் நகரத்தில் வன்னியர்களுக்கும் வேளாளர்களுக்கும் நடைபெற்றது பெரும் கலகம். மேற்ப்படி சிதம்பரம் பகுதியில்  கலகங்கள்  பரவின .

இதைப்பற்றி நாம் இப்போது தெளிவாக பார்ப்போம் .

1844 வது ஆண்டில் சிதம்பரம் நகரத்தில் வன்னியர்களுக்கும் வேளாளர்களுக்கும் நடைபெற்ற கலகம் ஒரு பெரும் யுத்தத்தை போல நடந்தது . பல உயிர்சேதங்கள் நிகழ்ந்தன . இடையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் குறுக்கிட்டு இரு தரப்பாரையும் சமாதானபடுத்தியுள்ளனர் .

1844  வது ஆண்டில் தில்லைவாழ் நடராஜர் வசிக்கும் சிதம்பரம் நகரத்தில் கைகோளர் எனப்படும் செங்குந்தர் வகுப்பில் , ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது . அவருடைய பெயர் சரவணா முதலி . அன்னவருடைய திருமண ஊர்வலம் பல வீதிகளை கடந்து வெள்ளாளர் வாழும் வீதிக்கு வரும்பொழுது , இதை வெள்ளாளர்கள் ஆட்சேபித்து ஊர்வலத்தின் மீது கல்லெறிந்தனர் . வீண் சண்டைக்கு நின்றனர் .

நீதிக்காக வன்னியர்கள் செங்குந்தர்களுக்கு உதவி செய்தனர் :

பிற்ப்படுத்தப்பட்ட சமூகமான செங்குந்தர்கள் , இதை பஞ்சாயாத்தாரிடம் முறையிட்டனர் . பஞ்சாயத்து தலைவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்த "குப்பு நாயகர் " அவர்கள் . இதை ஆலோசிக்க சபையை கூட்டினார் . முடிவில் வேளாளர் செய்தது தவறு என்று சபையினர் முடிவு செய்து , வெள்ளாளர் செய்கையை கண்டித்தனர் .

இதனால் வெள்ளாளர்களுக்கு ஆத்திரம் அதிகம் ஆயிற்று . இவர்கள் மீண்டும் செங்குந்தர் வீடுகளையும், அவர்களுக்கு பரிந்து பேசிய வன்னியர் வீடுகளையும் தாக்க முனைந்தனர் . வெள்ளாளர் கொடுமைகள் எல்லை மீறி சென்றது .


இந்நிலையில் சிதம்பரத்தில் உள்ள வன்னியர் பலர் , சோழ பரம்பரையின் பிற்கால வம்சத்தை சேர்ந்த மன்னனும் ,வன்னியகுல திலக மணியுமான பிச்சாவரம் மன்னரிடம் சென்று நடந்த விஷயங்களை  கூறி, இவ்விஷயத்தில் அவரை தலையிட்டு உதவிட கோரினர் .

இந்நிகழ்வை கேள்வியுற்ற அரசர் கடும் கோவமுற்றார். உடனே சிதம்பரம் அடுத்த திருபோர்களம் என்னும் ஊரில் உடனே ஒரு வன்னியர் மாநாட்டை கூட்டினார் .

வன்னியர் படை திரண்டனர் ..ஒன்று கூடி பேசினர் . முதலில் நீதி கேட்பது ! மறுப்பின் போராடுவது என்று முடிவு செய்தனர் .

இதற்க்கு "வடமலை " என்ற வன்னிய வீரனிடம் பொறுப்பை ஒப்படைத்தனர் . வடமலை தலைமையில் வெள்ளாளர் இருக்கும் திசை நோக்கி வன்னியர்கள் சென்றனர் .

இதை அறிந்த வெள்ளாளர்கள் சூழ்ச்சியை கையாள முற்ப்பட்டனர் ..

வெள்ளாளர் சூழ்ச்சி :

தளபதியான வடமலையிடம் தாங்கள் சமாதானம்  பேச விரும்புவதாகவும் , ஆகவே பொன்னம்பலன் என்பவர் இல்லத்தில் விருந்துக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர் .இதை ஏற்ற வடமலை அவர்கள் விருந்துக்கு சென்றார் ..அங்கே திரைமறைவில் சதி வேலை நடந்தது .. விருந்திற்கு வந்த வடமலையை வெள்ளாளர்கள் ஆதி திராவிட உதவியுடன் கொலை செய்தனர் .

இச்சேதியை கேள்வியுற்ற பிச்சாவரம் சோழகனார் , சினம் கொண்டார் .. உடனடியாக சிதம்பரம் வந்தார் . சுற்றுபுறத்தில் உள்ள தங்கள் குலத்தவர்களை அழைத்தார் .. சுமார் 6000 பேர் ஒன்று கூடினர் .. வடமலையை கொன்ற வெள்ளாளர்கள் மற்றும் ஆதி திராவிடர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்குங்கள் ... அவர்களின் திமிரும் ஆணவமும் இன்றோடு அழியட்டும் என்றார் .

இதற்க்கு தலைவனாக வன்னியர் பூங்காவனம் அவர்களும், துணை தலைவராக வன்னியர் சமூகத்து ராமசாமி அவர்களும் தலைமை  ஏற்று யுத்தத்தை மேற்கொள்ள ஆயுத்தமானார் ..

இச்சமயத்தில் சிதம்பரம் தாசில்தார் ரெங்க ராயர் பிச்சாவரம் மன்னரை கண்டார் .எதிரி தரப்பையும் கண்டு பேசினார் .. சமாதானம் ஏற்ப்படவில்லை .

முடிவில் தன்னிடம் உள்ள காவல்துறையை கொண்டு கஜானாவிற்கு காவல் போட்டார் .அரசாங்க கட்டிடங்களும் பொருள்களும் சேதம் வராத வண்ணம் காவல்துறையை காவலுக்கு போட்டார் . கலவரத்தை தடுக்க காவல்துறை இல்லாததால் , தனது மேல் அதிகாரியான கலெக்டர் அர்ஜி அவர்களுக்கு அவசர கடிதம் எழுதினார்.


இதற்குள் யுத்தம் மூண்டது .. எதிரிகளின் அனேக வீடுகள் இடிக்க பட்டன .பல உயிர் சேதம் நிகழ்ந்தது .  வெள்ளாளர்கள் தோற்று ஓடினர் ..
ஆணவத்தை அழித்த பிச்சாவரம் மன்னர் தங்கள் குல கொடியான புலி கொடியை பறக்க விட்டார் .

இதன்மூலம் செங்குந்தர்கள் , வன்னியர்களுக்கும் பிச்சாவரம் மன்னருக்கும் நன்றி தெரிவித்தனர் ..

இந்நிகழ்ச்சியின் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது :

1. வன்னியராகிய நாம் நமது முன்னேற்றத்திற்கு மட்டும் அல்லாது , ஏனைய பிற்ப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும் இன்று பாடுபடுவது போலதான் சென்ற காலத்திலும் நம் முன்னோர்கள் பாடுபட்டுள்ளனர் .

2. வன்னியர் அக்காலத்திலும் நீதிக்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டுதான் எப்போதும் வாழ்ந்து வந்துள்ளனர் .

3. வன்னியர் தங்களை பிறர் இழிவுபடுத்தியதை தடுக்க தங்கள் உயிரையும் கொடுத்து போராடியுள்ளனர் .

என்பதை நாம் நினைவில் கொள்வோம் .


ஆண்ட பரம்பரை
பல்லவ நாடு இதழ் ஆசிரியர்
வ.செயச்சந்திரன் .

(கந்தசாமி கண்டர் வரலாறு நூல் : பக்கம் - 232)

Wednesday, January 1, 2014

வன்னியர் நாள்காட்டி 2014 - Vanniyar Calendar 2014

அன்பு உறவினர்களுக்கு வணக்கம்,

வன்னிய குல க்ஷத்ரியர்களின் வரலாற்றை பறைசாற்றும் வண்ண காலண்டர் மிக அழகிய முறையில் வெளிவந்துள்ளது. இது நம் சொந்தங்கள் அனைவரின் வீட்டிலும் நிச்சயமாக இருக்கவேண்டியது. இதன் விலை ரூ.200. தபால் செலவு தனி. காலண்டர் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :-

ஆறு. அண்ணல் கண்டர்

செல் : 9381039035 

ஈமெயில் - aruannal@gmail.com











Saturday, December 28, 2013

சிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் இளவரசி

சிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் (சிங்கம்பட்டி ) இளவரசியார் .




வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் சிவகிரியின் கடைசி ஜமீனாக இருந்தவர் .இவர் 16-8-1955 இல் காலமானார் .

இவரது மகனான "சிவகிரி ராஜா" என்ற "செந்தட்டி காளை பாண்டியன் "1952 ஆம் வாக்கில் முதன் முதலில் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார் .

இந்த செந்தட்டி காளை பாண்டியன் மறவர் சமூகத்தின் சிங்கம்பட்டி ஜமீன் மகளான "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியாரை " காதல் திருமணம் செய்து கொண்டார் ..

அதன் பிறகு இவரது மகன்களும் சேத்தூர் ஜமீனுடன் உறவு வைத்து கொண்டனர் ...

இதுவே சிவகிரி வன்னியர் ஜமீனில் மறவர் சமூகம் கலந்த தொடக்கம் .

இருப்பினும் சிவகிரியின் கிளைவழி ஜமீன்களான தென்மலை ,சமுசிகாபுரம் மற்றும் சிவகிரியோடு மணஉறவு வைத்திதிருந்த ஏழாயிரம் பண்ணை ஆகியோர் இன்றும் அக்மார்க் வன்னியர்களாகவும், வடதமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்துடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர் .

சிவகிரி ஜமீன் மறவரில் தாய் வழி உறவு வைத்துகொண்டாலும் , இவர்களது சாதி சான்றிதழ் , பத்திரங்கள் போன்றவை தங்களை வன்னியர் சாதி என்பதை தெரிவிக்கின்றன ..

1. இந்த புகைப்படத்தில் கையில் குழந்தையுடன் இருப்பவரே "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியார் " அவர்கள் .


                                

2. கீழே கையை கட்டி அமர்ந்திருக்கும் சிறுவன் ,இன்றைய சிவகிரி ஜமீனாக உள்ள விக்னேஷ்வர ராஜாவின் தந்தையார் அவர்கள் ..


நன்றி : புகைப்படம் தந்து உதவிய திரு. அண்ணல் கண்டர் மற்றும் திரு . முரளி நாயகர் ஆகியோருக்கு நன்றி

Thursday, December 26, 2013

புதுகோட்டை கள்ளர் - வன்னியர் பட்டம்

புதுகோட்டை மாவட்டத்தில் வ.சூரக்குடி என்ற ஊர் உள்ளது .. இது வன்னிய சூரகுடி என்று அழைக்க பட்டது .. இப்போது இங்கு சேதுபதி , கிருஷ்ணதேவராயர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் இருந்து கள்ளர்கள் குடியமர்த்தப்பட்டு , ஏற்க்கனவே அங்கு ஆட்சி செய்த வன்னியர் சாதியான அறந்தாங்கி தொண்டைமான் அழிந்த பிறகு , கள்ளர்கள் தொண்டைமான் பட்டம் சூடி புதுகோட்டை பகுதியை ஆட்சி செய்தனர் என்பது நாம் அறிந்தது ..

இந்த சூரக்குடியில் இப்போது கள்ளர்கள் வன்னியர் பட்டம் சூடியுள்ளனர் என்பது சமீபத்தில் நான் கேள்வி பட்டது .. அதற்க்கான காரணம் இதோ கீழே ... இந்த இடத்தில் ஆட்சி செய்தவன் ஒரு வன்னியன் .. கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் , வன்னிய சிற்றரசுகள் அழித்தொழிக்க பட்டன .. இதற்கான ஆதாரம் கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டிலே வருகிறது ..

பின்பு இங்கு கள்ளர்கள் குடியமர்த்த பட்டதால் , அந்த வன்னியர் பட்டம் இந்த ஊரில் வாழும் கள்ளர்களுக்கு உரித்தானது ..


சோழன் பாண்டியனை சிறைப்பிடித்தாள் , எப்படி பாண்டிய பட்டம் சூடி கொள்வானோ , கட்டபொம்மன் பாண்டிய நாட்டில் பாளையம் அமைத்ததால் எப்படி பாண்டியர் பட்டம் சூடிகொண்டானோ , அதே போல வன்னியர் நிலம் கள்ளர் கைக்கு போன பொது , இவர்களுக்கு அந்த இடங்களில் வன்னியர் பட்டம் உரித்தானது ...அல்லது சூடி கொண்டார்கள் ..

ஆதாரம் :

"பதினைந்தாம். பதினாறாம் நு}ற்றாண்டுகளில் தென்னாட்டை ஆண்ட சில குறுநில மன்னரின் ஆவணங்களில் வன்னியர்பற்றிக் குறிப்புக்கள் வருகின்றன. சூரைக் குடியை ஆண்ட சூரைக்குடி யரசு பள்ளிகொண்ட பெருமாள் என வழங்கிய அச்சுதராய விஜயாலய முதுகு புறங் கண்டான் என்ற வாசகம் வருகின்றது. திருவரங்குளத்தைச் சேர்ந்த ஆலங்குடியில் உள்ள கல்வெட்டொன்றில் அழுந்து}ரரசு திருமலைராசப் பல்லவராயர் பதினெட்டு வன்னியர் கண்டன் எனக் கூறப்பட்டுள்ளான். இராமநாதபுரத்துச் சேதுபதிகளின் பட்டயங்களிலும் இதேபோன்ற குறிப்புக்கள் வழமையாக வருகின்றன. எனினும் இக் குறு நில மன்னர்களின் மெய்க்கீர்த்திகளிற் கூறப்படுவன ஆதார பூர்வமானவையென்று கொள்ளமுடியாது. விஜய நகர மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் வருகின்ற வன்னியர் பற்றிய வாசகங்களை இராமநாதபுரத்துச் சேதுபதிகள், சூரைக்குடி அரசர் முதலானோர் தத்தம் ஆவணங்களிலே சேர்த்துக் கொண்டார்கள். கிருஷ்ண தேவராயரின் காலமளவிலே தொண்டை மண்டலத்து வன்னிமைகள் அழிந்துபட்டன."

இலங்கைப்பல்கலைக்கழக வரலாற்று விரிவுரையாளர்.
கலாநிதி சி. பத்மநாதன்

சோழர்களின் வாரிசு "சிதம்பரநாத சூரப்ப சோழனார் " அவர்களின் மறைவிற்கு கடலூர் மாவட்ட பாமக செயலாளர் "ஜெகன் " அவர்கள் இரங்கல் தெரிவித்தல்




சோழர்களின் வாரிசு "சிதம்பரநாத சூரப்ப சோழனார் " அவர்களின் மறைவிற்கு கடலூர் மாவட்ட பாமக செயலாளர் "ஜெகன் " அவர்கள் இரங்கல் தெரிவித்தல்







சோழர்களின் வாரிசு சிதம்பர நாத சூரப்ப சோழனாரின் படத்திறப்பு :



கடலூர் பாமக செயலாளர் "ஜெகன் " அவர்களால் சோழர்களின் வாரிசு சிதம்பர நாத சூரப்ப சோழனாரின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது .


சோழர்களின் வாரிசு சிதம்பரநாத சோழனார் மரணம்: டாக்டர் ராமதாஸ் இரங்கல் - மாலைமலர் செய்தி




நன்றி : http://www.maalaimalar.com/2013/12/09112606/Chidamparanata-Cholar-death-Ra.html