Sunday, March 24, 2013

சேதுபதி (அ ) சேது காவலர் பட்டம் கொண்ட வன்னியர்கள் :


சேதுகாவலர் என்னும் பட்டம் "பொறையர் " களுக்கும் இருந்துள்ளது என்பது செவலூர்ச் செப்பு பட்டயத்தால் புலனாகிறது . பொறையர் என்பார் சேர மன்னர் கிளைவழியினர் .

அவர்களில் ஒரு பிரிவினர் பின்னாளில் தமிழ்நாட்டின் கீழைக்கடற்கரை ஓரப்பகுதிகளில் ("திருத்துறைப்பூண்டி ") அதிகாரம் பெற்றவர்களாக இருந்துள்ளனர் . ஆதலால் இவர்களுக்கு "சேதுகாவலர் (அ ) சேதுபதி " பட்டம் உள்ளது .

இவர்கள் வன்னியர்கள் ஆவர் .

ஆதாரம் :
========
நூல் : தொன்மைத் தமிழும் தொன்மைத் தமிழரும்
பக்கம் : 118
தலைப்பு : இலங்கையின் வடபகுதியில் வன்னியர் ஆட்சி

வன்னியர்களை பற்றிய சீனாபுரம் பட்டயம் :


இந்த செப்பு பட்டயத்தில் வன்னியர் விருது

"வாடாத மாலையும் வர்ணத் தடுக்கும் பெற்றவரான ,
பூணூல் மார்பும் புலிகொடிப் பதாகையும் பெற்ற பெரியோர்களான ,
சேரநாட்டுக் கதிபதியான , பயனாட்டுக் கதிபதியான (வயநாடு )"

என்று பேசப்பட்டுள்ளது .


நூல் : வன்னியர் மாட்சி 
பக்கம் : 149

Friday, March 22, 2013

கேரள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள வன்னியர்களை பற்றிய ஓலைசுவடியில் "அரியலூர்ப் பள்ளி வில்லிப் படையாண்டவர் கதை " பற்றிய செய்தி :


இதில் வழக்கம் போல வன்னியர் புராணத்தை பற்றிய செய்திகளை சொல்லிவிட்டு பிறகு சில சுவையான செய்திகளை அந்த ஆவணம் கூறுகிறது.

அதாவது வன்னியர்கள் சிலர் சந்திரகிரியில் இருந்து காஞ்சிபுரம் சென்றதையும் , அங்கு காஞ்சிபுர மன்னர் தங்களிடம் பெண் கேட்டதால் அவரை சிரத்சேதம் செய்துவிட்டு வேலூருக்கு சென்று தங்கிய போது ,

அப்பொழுது அங்கு ஆட்சி செய்த மன்னர் இவர்களுக்கு

“சந்திரபதி பள்ளி வில்லி படையாண்டவர்கள் ”
என்றும்
“அரியகுல மழுவெறி ராயர் ”

எனவும் விருதுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது . சில காலம் அங்கு வாழ்ந்தனர் .

பிறகு பாண்டிய நாடு சென்று , பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியனுக்கு சேவை செய்து வாழும் நாளில் , அப்பகுதியில் தொல்லை தந்து வந்த ஒரு புலியைக் கொன்று , மற்றொரு புலியை வளைத்து பிடித்து வீரச் செயல் புரிந்த செய்தி அந்த சுவடியில் உள்ளது . அங்கு பண்ணை அமைத்து , புதிய நகரம் ஏற்ப்படுத்தி அதில் விநாயகர் கோவில் உண்டாக்கி மற்றவர் துதிக்கும் நிலையில் வாழ்ந்து மேற்கூறப்பெற்ற தென்காசி பாண்டியனுக்கு உதவி வந்திருக்கின்றனர் .

புலியைக் கொன்றதால் பெற்ற விருது :
=======================================
பாண்டிய நாட்டில் தொல்லை தந்த புலிகளை கொன்றதால் இவர்களுக்கு

மகாபெரும் சேனை பள்ளி வில்லி படையாண்ட பராக்கிரமர் ”

என்ற விருதை பாண்டிய மன்னன் வழங்கி சிறப்பித்துள்ளார் . மேலும்

மீன்கொடி , கானக் கவரி , கனகத் தண்டிகை , வெற்றி சங்கம் (சங்கு ) ஆகிய வரிசைகள கொடுத்ததோடு  தேவநல்லூர் மற்றும் கயத்தாறு ஆகிய சீமைகளை காவல் காத்து வரும்படியும் உரைத்திருக்கிறார் .

காசி விசுவநாதர் கோவிலில் மடம் கட்டுதல் :
=============================================

அப்போது செகமெல்லாம் புகழும் , உண்மை உபதேசம் செய்த சற்குருவாம் தேசிகருக்கு (காஞ்சி சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் ) தென்காசி காசி விசுவலிங்கேசர் ஆலயத்ததில் மடாலயம் ஒன்று ஏற்ப்படுத்தி தந்துள்ளனர்.

இந்த சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் வன்னியர்களின் குருவாக காஞ்சியில் வாழ்ந்து , பின்பு பாண்டிய நாட்டில் தென்காசியில் வாழ்ந்த செய்தி வரகுண பாண்டிய வன்னியர் வெளியிட்ட தென்காசி செப்பேட்டின் வாயிலாகத் தெரிகிறது . ஒலைசுவடியின் மூலம் முதன்முதலாக இச்சுவடியில் தான் காண முடிகிறது .

குலசேகர பாண்டியனின் பகைவரை வெல்லுதல் :
==============================================

பிறகு வள்ளியூரில் ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் பகைவரான மன்னன் , மதிப்பன் என்ற இருவரை வதைத்து அவர்களின் தலைகளை கொய்து , மன்னன் முன்பாக கொண்டு சென்று வைத்திருக்கின்றனர் .

மன்னன் மகிழ்ந்து பலவித வரிசைகளை இவர்களுக்கு அளித்திருக்கிறார் .

ஆழ்வார்குறிச்சியில் ஆட்சி புரிதல் :
===============================
இறுதியாக தென்காசிக்கு தெற்க்கே உள்ள ஆழ்வார் குறிச்சி என்னும் திருத்தலத்துக்கு வந்து தங்கி ஆட்சி புரிந்துள்ளனர் . இச்செய்தியை ஓலையில்

“ஆள்வார் குறிச்சியதி பண்ணையம் பதியாள் வீரர்களான வன்னிய குலத்தோர் பொன்போலுலகில் பொலிந்து வாழ்ந்துயர்ந்தோராகிய சந்திரபதி அரியலூர் பள்ளி வில்லி படையாண்டவர்கள் ”

என்று குறிப்பிட்டுள்ளது .

வன்னியர்களின் அறக்கொடைகளையும் புலவர்களை போற்றியமையும் புகழ்ந்து கூறும் “திருக்கை வளம் ” என்னும் நூல் பன்னீராயிரம் பண்ணையை ஆட்சி செய்து வந்த வன்னிய பாளையக்காரர் பற்றி கூறும்போது

“-------------- மெச்சு பண்ணை
பன்னிரண்டாயிரத்தோன் மேற்பகருங் கட்டியகொத்துக்
கின்ன லிலாமற் சொர்ன மிசையுங் கை

என்பது அதிலுள்ள பாடல் வரிகள் .

அதாவது பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு வந்த அரசன் மீது 'கட்டிய கொத்து ' என்னும் நூலை பாடிய புலவருக்கு மன்னர் தங்கங்களை பரிசளித்தான் என்பது பொருள் .

திருக்கை வள உரையாசிரியர் பிரசங்க பூஷணம் குக ஸ்ரீ.பு.பா.ரத்தினசபாபதி நாயகர் அவர்கள்

"பாண்டிய நாட்டில் பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு கொண்டிருந்த அக்னி வம்ச சத்திரிய வன்னிய மகாராஜாவாகிய, கட்டிய நயினார் வம்சத்திலவதரித்து , காரைக்கால் அக்னி வம்ச சத்திரிய மகா சபையில் அக்ராசனாதிபதியாயிருந்த ஆ.வை.தசவீர பூபதி நாயகர்வர்களால் கடந்த பவள ஆண்டு (கி .பி . 1873 ) பங்குனி மாதம் அச்சிட்டு முதன்முதலில் திருக்கை வளம் வெளிவந்தது "

என்று எழுதிருக்கிறார் .

தென்காசி வன்னியர் செப்பு பட்டயமும் இவோலைச் சுவடியும் :
=====================================================================

தமிழ்நாட்டரசு தொல்லியல் ஆய்வாளர் திரு.நடன காசிநாதன் அவர்கள் எழுதிய வன்னியர் என்னும் நூலில் செப்பு பட்டயம் எண் 21 ஆக தென்காசி திரு.முனிசாமி நாயுடுவிடமிருந்து தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆயுவுத்துறை வாங்கி , குற்றாலம் அகழ்வைப்பகத்தில் வைத்து பாதுக்காக்கபெரும் செப்பேட்டில் கூறியிருக்கிறவாறே, இந்த ஒலைசுவடியிலும் வன்னியரின் பிறப்பும், அசுரர்களை வதைத்து இலங்கை சென்று அரசனை வென்று ஐந்து கன்னிகளை , ஐந்து வன்னிய குமாரர்கள் மணந்ததும் , பின்பு அவர்கள் எந்தெந்த பகுதியில் ஆட்சி செலுத்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது .

ஆதலால் இவ்வோலைச்சுவடி 18-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் .

ஆனால் இவ்வோலைச்சுவடியில் , செப்பு பட்டயத்தில் கூறப்படாத சில அரிய செய்துகளும் உள்ளன .

மேலே கூறப்பட்டுள்ள வரகுணராம பாண்டிய வன்னியனார் செப்புப்பட்டயத்தில் (வன்னியர் , செப்புபட்டயம் எண் - 9) மன்னர் விருதுகளில் ஒன்றாக “சந்திரபதி அரசுபதி வில்லி வன்னியகுலாதிபதி ” என்பதும் இவ்வோலைச் சுவடியில் காணப்பெறும் விருதும் ஒன்று போல உள்ளன .

ஆகவே , இவ்வோலைச் சுவடியின் கூற்றால் , பன்னீராயிர பண்ணையை ஆண்டு வந்த கட்டிய நயினார் வம்சத்தினர் , அரியலூர் மழவராய நயினார் வழி வந்தவர்கள் என்று உணரமுடிகிறது .

ஆதாரம் :
========

நூல் :பெரம்பலூர் மாவட்ட தடயங்கள்
பக்கம் :43

Monday, February 4, 2013

மயிலாடுதுறை அஞ்சாத சிங்கங்கள் (நாகை மாவட்ட மயிலாடுதுறை "அஞ்சாத சிங்கம்" பட்டம் பெற்ற வன்னியர் குல க்ஷத்ரியர் சமூக ஆட்சியாளர்கள் ) :



மயிலாடுதுறை அஞ்சாத சிங்கங்கள் (நாகை மாவட்ட மயிலாடுதுறை "அஞ்சாத சிங்கம்" பட்டம் பெற்ற வன்னியர் குல க்ஷத்ரியர் சமூக ஆட்சியாளர்கள் ) :
===============================================

“திருக்கைவளம் ” நூலின் 61 ஆம் பாடல்

“அஞ்சாத சிங்கர் தம்மேலருநாம மாலை சொல யெஞ்சலிலாப் பொன் கொடுத்த இன்பக்கை ” 

என்று காணப்பெறுகிறது . 

இப்பாடலுக்கு உரை எழுதிய பெரும் புலவர் குக.ஸ்ரீ.பு.பா.இரத்தின சபாபதி நாயகர் அவர்கள் .

“எவரையும் வெற்றி கொண்ட அஞ்சாத சிங்கர் மேல் அருமையான பிரபந்தம் பாட , பாடிய புலவருக்கு எண்ணிறந்த பொன் கொடுத்த இன்பத் திருக்கரம் “ 

என்று பொருள் எழுதியுள்ளார் .

அஞ்சாத சிங்கம் பட்டம் ஏற்ப்பட்ட வரலாறு :
=====================================

“வட நாட்டில் கொள்ளுதேசம் என்ற பகுதியிலிருந்து வீரசாமி என்றவர் தம் குடும்பத்துடனும் சேனைகளுடனும் ராமேஸ்வரம் செல்லும் வழியில் , மாயூரத்தையடுத்துள்ள சித்த காட்டில் , இரவு நேரமாகி விட்டபடியால் தங்கியிருக்கின்றனர் . 

இரவில் இவர்களது பொருட்களை கொள்ளையிடக் கொள்ளை கூட்டம் வந்திருக்கிறது . அக்கூட்டத் தலைவனை வீரசாமி வெட்டி வீழ்த்தி விட்டார் . ஆதலால் கொள்ளைக் கூட்டம் ஓடி விட்டது .

இதனைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய மன்னர் வீரசாமியை அழைத்து அவரது வீரத்தை பாராட்டி அவருக்கு “அஞ்சாத சிங்கம் ” என்ற பட்டத்தையளித்து , “ நீங்கள் உங்கள் தேசத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டாம் . சித்தக்காட்டிலேயே அரண்மனைக் அமைத்துக்கொண்டு அப்பகுதியை ஆட்சி செய்யுங்கள் என்று ஆணையிட்டார் ... வீரசாமி இறப்புக்குப்பின்னர் , தம்பிக்கு நல்லான் பட்டணத்தில் அரண்மனை அமைத்துக்கொண்டு , 250 கிராமங்களில் இருந்த 300 வேலி நிலங்களை நிர்வகித்து கொண்டு ராஜ மரியாதையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் “.

பெரிய வகுப்பு சிறிய வகுப்புப் பாகப்பிரிவினை விவரம் :
========================================
பெரிய வகுப்புக்கு 
1. தம்பிக்கு நல்லான் பட்டணத்தில் பெரிய வகுப்புத் தெற்கு அரண்மனை
2. பெரிய மாரியம்மன் கோயில் 
3. மூங்கில் தோட்டம் , காத்தாயி அம்மன் கோயில் 
4. நெடுந்திடல் கிராமம் , விநாயகர் கோயில் 
5. நலத்துக்குடி கிராமம் 
6. குழிச்சர் கிராமம் 

சிறிய வகுப்புக்கு 
1. குமர கட்டளைத் தெருவில் சிறிய வகுப்பு வடக்கு அரண்மனை 
2. சிறிய மாரியம்மன்
3. விளநகர் கிராமம் மற்றும் காத்தாயி அம்மன் கோயில் 
4. அச்சந்தாபுரம் கிராமம் 
5. வாத்தி கட்டளை கிராமம் 

இந்த ஆட்சியாளர்கள் சிலரது கடன் தொகைக்கு தாங்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் 60 வேலி நிலங்களை அவர்களிடமிருந்து அரசு கைப்பற்றிக் கொண்டது .

இவ்வாட்சியாளர்களின் சில வேலி நிலங்கள் தருமபுர ஆதீன மடத்துக்குக் கொடையாக வழங்க பெற்றுருகிறது . தருமபுர மடத்தில் தற்பொழுதும் இவர்களுக்கு உரிய மரியாதை செய்யப்படுகிறது .

அஞ்சாத சிங்கம் ஆட்சியாளர்களின் வம்சாவழி :
======================================
1. வீரசாமி துரை அஞ்சாத சிங்கம் , இவரது மகன்கள் 
2. தம்புசாமி துரை அஞ்சாத சிங்கம்
3. துரைசாமி துரை அஞ்சாத சிங்கம்
4. 4.மூன்றாமவரின் மகன் வெள்ளிவேலாயுதசாமி துரை அஞ்சாத சிங்கம்
5. நான்காமவரின் மகன்கள் நால்வர் .அவர்களில் மூன்றாமவர் 
6. தம்புசாமி துரை அஞ்சாத சிங்கம். அவரது மகன் 
7. முத்துகுமாரசாமி துரை அஞ்சாத சிங்கம்

இதே போன்று சிறிய வகுப்பு அரண்மனையிலும் க.ராஜகேசர துரை அஞ்சாத சிங்கம் அவரது உடன் பிறப்பு க.ராஜமூர்த்தி துரை அஞ்சாத சிங்கம் ஆகியோர் உள்ளனர் .

இவர்களது ஆவணங்களில் தங்களை “க்ஷத்திரிய ஜாதி” என்றும் “இராஜ வன்னியர்” என்றும் எழுதியிருக்கின்றனர் .




Reference:
=========

தமிழ்நாட்டரசு தொல்லியல் துரை மேனாள் இயக்குனர் திரு.நடன காசிநாதன் அவர்கள் எழுதிய வன்னியர் மாட்சி . .. பக்கம் - 136
 

Tuesday, November 6, 2012

பாதி சிதம்பரத்தையே அடைத்து கொண்டிருக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் எப்படி வந்தது தெரியுமா ?



சிதம்பரத்தில் பாதி நிலம் பிச்சாவரம் மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் குடும்பத்திற்கு சொந்தமாக இருந்தது . செட்டியார் நடத்தும் அந்த அண்ணாமலை பல்கலைகழகம் நிலம் கூட இந்த சோழனார் குடும்பத்திடம் தான் இருந்தது .

இவரின் மூதாதையர் ஒரு திருமணத்திற்க்காக முகையூர் சுப்ரமணிய பிள்ளையிடம் அறுபதாயிரம் ரூபாய் கடன் வாங்கினார்கள் .அந்த பணத்தை திருப்பி தர இயலாத நிலைமை வந்ததால் நிலத்தை ஏலமிடும் நிலைமைக்கு வந்தார்கள் . அப்போது ராமநாதபுரம் கானாடுகாத்தானை சேர்ந்த அண்ணாமலை செட்டியார் அவர்கள் அந்த நிலத்தை ஏலம் எடுத்தார் .அந்த நிலம்தான் இன்று அண்ணாமலை பல்கலைகழகம் .

---- நக்கீரன்

வன்னியர்களுக்கு நன்றியாக படையல் போடும் செங்குந்த முதலியார் சமூகத்தினர்

தமிழ்நாட்டில் இடங்கை வலங்கை தகராறு நடந்த சமயத்தில் பிராமணர், வன்னியர் தவிர மற்ற சமூகங்கள் அனைத்தும் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவரோடு ஒருவர் மோதி கொண்டனர். அப்போது சிதம்பரம் பகுதியில் வேளாளர் சமூகத்தினர் செங்குந்தர் சமூகத்தினரை மிக கடுமையாக தாக்கினர். அது வரை இடங்கை வலங்கை சண்டையில் பங்கேற்காத வன்னியர்கள், செங்குந்தர் சமூக மக்களை காக்க வேளாளர்களோடு சண்டையிட்டனர். 

அந்த சண்டையில் பல உயிர் சேதம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியை ஆட்சி செய்து வந்த தில்லை சோழர்களான பிச்சாவரம் ஜமீனுக்கு கொடுக்கப்பட்டு வந்த மானியத்தை ஆங்கிலேய அரசு நிறுத்தி கொண்டது. அது முதலே அந்த சோழர் குடும்பம் வறுமையில் விழுந்தது. இருபினும் அவர்களுக்குரிய உரிமைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.

வன்னியர்களின் இந்த தியாகத்திற்கு நன்றியாக இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழும் செங்குந்த முதலியார் சமூகத்தினர் சாமிக்கு படையல் போடும் போது வன்னியர்களுக்கும் ஒரு படையல் போட்டு தங்கள் நன்றியை தெரிவிகின்றனர் .

வன்னியர்கள் இடங்கை சாதி தலைவனாக அறியப்பட்டனர் . இதனால் அவர்கள்  இடங்கைப் பெரியோன், இடங்கையாதிபர் என்று அழைக்க பட்டனர்

குறிப்பு : இடங்கை வலங்கை தகராறு புத்தகம்.

நன்றி : கார்த்திக் சம்புவராயர் 

Monday, November 5, 2012

மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் , சோழ அரசராக தில்லை நடராஜர் கோவிலில் முடிசூட்ட பெற்ற 34-ஆம் ஆட்சி ஆண்டில் (2012) அவரை வாழ்த்திய செய்தி மாலைமலரில் (05-11-2012)


மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் , சோழ அரசராக தில்லை நடராஜர் கோவிலில் முடிசூட்ட பெற்ற 34-ஆம் ஆட்சி ஆண்டில் (2012) அவரை வாழ்த்திய செய்தி மாலைமலரில் (05-11-2012) .........................

 "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் "


=============