Saturday, December 17, 2011

கூவாகம் - அலிகள் திருவிழா எனும் கட்டுக்கதை.


கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் இந்தியா முழுவதும்
உள்ள அரவாணிகளின் சாமி எனவும், அங்கு நடைபெரும் சித்திரை மாதத்திருவிழாதான் அரவாணிகளின் மிக முக்கிய திருவிழா
எனவும் எல்லோராலும் பேசப்படுகிறது.
 இந்திய ஊடகங்களும்
 பல்வேறு அமைப்புகளும் கூத்தாண்டவரை அலிகளின்
குலதெய்வம் ஆக்கிவிட்டனர். ஆனால், அது உண்மை அல்ல.

"மகாபாரதப் போர் தொடங்கும் முன் பாண்டவர்கள் போரில் 
வெற்றிபெற 32 லட்சணங்களும் முழுமையாகக் கொண்ட 
ஆண்மகன் ஒருவன் பலியிடப்பட வேண்டும். இதற்காக
 தெரிவு செய்யப்பட்டவன் தான் அரவான். ஆனால் 
அவனுக்குத் திருமணமாகாத குறை இருக்கிறது. 
 இதனைப் போக்கினால்தான் அவன் முழு 
ஆண்மகன் ஆவான். அடுத்த நாள் சாகப் பொகிறவனுக்கு
 யார் பெண் தருவார்கள். எனவே கண்ணனே பெண்ணாக 
உருமாறி அரவானைத் திருமணம் செய்துகொள்கிறான்" 
என்று போகிறது கதை.
 இதில் உள்ள ஆண் பெண்ணாக மாறும் கதையை வைத்து 
கூத்தாண்டவரை அரவான் எனவும் அலிகளின் தெய்வம்
 எனவும் ஆக்கிவிட்டனர்.

கூத்தாண்டவர் - ஒரு விளக்கம்.

தலையை அறுத்து பலிகொடுப்பது என்பது பழங்காலத்தில் ஒரு
 வீரச்செயலாக கருதப்பட்டது. அவ்வாறு தலையை அறுத்துக் 
கொள்பவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக ஆயினர். இந்த
 நாட்டார் கதைகள் மகாபாரதக் கதையிலும் இணைக்கப்பட்டது. 
இந்தியா முழுவதுமே பல்வேறு இடங்களில் அரவான் 
பலிகொடுக்கப்பட்ட கதை பல பெயர்களில் இருக்கிறது.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் கதைகளில் அரவான்
 இரண்டு வரங்கள் கேட்டதாக வருகிறது.
 "முதல் வரம் - பலிகொடுக்கப்பட்ட 
பின்பும் பாரதப் போரை பார்க்க வேண்டும்,
 இரண்டாவது வரம் - கடைசி நாள் போரில் போரிட வேண்டும்" 
ஆகியன தான் அந்த வரங்கள். ஆனால், தமிழ்நாட்டின் அரவான்
 மூன்றாவதாக "ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும்"
 என்று கேட்பதாகக் கூறப்படுகிறது.

இந்த திருமணக் கதை மகாபாரதத்தில் இல்லாதக் கதையாகும். 
குறிப்பாக, தமிழ்நாட்டின் முதன்மை பாரதக் கதையான
 'வில்லிபுத்தூரார் பாரதத்தில்' இந்த திருமணக் கதை இல்லை.

பாரதக் கதையின் பின்னணி.

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு 
நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் 
நடந்தபோராகும். பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் புலிகேசியால்
 தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு 
பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், 
இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் 
செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை 
ஏற்படுத்தினான் என்கின்றனர்வரலாற்று ஆய்வாளர்கள். 
இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில்  புலிகேசியின்
 பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான்
 

(கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி) .
பாதாமி நகர்

நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள்.
 பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி 
என்கிற சிறுதொண்டரும் வன்னியர்தான். அவர்தான் பாதாமியில் 
இருந்து விநாயகர் சிலையை தமிழ்நாட்டுக்கு 
கொண்டுவந்தவர் (வாதாபி கணபதி).

சிறுதொண்டர் கொண்டுவந்த 
வாதாபி கணபதி - நன்னிலத்திற்கு 
அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடியில் 
உள்ளது 

வன்னியர்கள் வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம்
படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம்
 படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது. 
இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர் 
சமூகத்தினரிடையேதான். பாரதக்கதையின் 
பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் 
திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.

வன்னிய புராணம்

வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட 
வன்னிய புராணம் மறுபுறம் வன்னியர்களிடையே கதையாக 
பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன்.


வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி 
அரக்கனை அழிக்கப்புறப்படும் போது அவருடைய மனைவி 
மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என 
கவலைப் படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. 
நான் போரில் இறந்தால்
 நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு 
அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் 
ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல்
 திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் 
இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் 
விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் 
கவனிக்கவில்லை.

போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி
 விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். 
நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இதுதான் வன்னியக்
 கூத்து ஆகும்.

இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே 
இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் 
சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர்.

இப்படியாக வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை - பாரதக் 
கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகள் கதை 
ஆகிவிட்டது.

கூத்தாண்டவர் - வன்னியர்களின் சாமி

கூவாகம், கொத்தட்டை, அண்ணாமைலை நகர், தேவனாம் பட்டினம்,
 தைலாபுரம், பிள்ளையார் குப்பம் ஆகிய கடலூர், விழுப்புரம், 
புதுவை பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கோவை 
சிங்காநல்லூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் 
கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

அனைத்து கூத்தாண்டவர் கோவில்களும் வன்னியர்களின் கோவிலாக 
உள்ளன. அவற்றில் பூசாரிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். 
இக்கோவிலுக்கு வழிபட வரும் சுற்றுக்கிராம மக்கள் அரவாணிகள் 
அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். தமது வேண்டுதலுக்காக தாலி 
கட்டிக்கொள்கின்றனர்.

வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய 
மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ 
மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. பாரதம் 
படிப்பதற்கென்றுபல மானியங்களை மன்னர்கள் அளித்துள்ளதை 
கல்வெட்டுகள் காட்டுகின்றன.

பாரதக் கதையின் பாதிப்பால் திரௌபதை அம்மன் கோவில்கள் 
உருவாயின. எல்லா திரௌபதியம்மன் ஆலயங்களும் வன்னியர் 
கோவில்களாக நீடிக்கின்றன. வன்னியர்களே பூசாரிகளாக உள்ளனர். 
 பெங்களூரின் முக்கிய விழாவான தர்மராஜா கோவிலின் கரகா 
திருவிழா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.


பெங்களூர் தர்மராஜா கோவில் 

வன்னிய புராணத்தின் கதை பாரதக்கதையில் கலந்து கூத்தாண்டவர்
 அரவானாக ஆக்கப்பட்டுள்ளார். 1885 ஆம் ஆண்டில் வெளியான
 எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்கிற 
நூல் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை ஒரு வன்னியர் 
விழாவாகவே குறிப்பிடுகிறது. அதில் எந்த இடத்திலும் அரவாணிகள் 
குறித்த குறிப்பு இல்லை.

மொத்தத்தில் கூவாகம் கூத்தாண்டவர் அரவாணிகள் சாமியும்
 அல்ல, அது அரவாணிகள் விழாவும் அல்ல. வன்னியர் மரபான 
நாட்டார் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியே கூத்தாண்டவர் ஆகும். 
குறிப்பாக, போருக்காகவும் நாட்டைக் காக்கவும் மக்களைத் திரட்டி 
அவர்களுக்கு வீரத்தையும் தியாகத்தையும் கற்பித்த ஒரு வரலாற்று
 நிகழ்வின் எச்சம் அதுவாகும்.

ஆதாரம்:
1. நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் - சு. சண்முகசுந்தரம் 2009,
2. தமிழ்ச் சமுதாயமும் நாட்டுப்புறப் பண்பாடும் - துளசி. இராமசாமி 1997,
3. தென்னிந்திய குலங்களும் குடிகளும் - எட்கர் தர்ஸ்டன் 1885,
4. வன்னிய புராணம், சைவ.கி.வீரப்பிள்ளை 1938,
5. Draupadi among Rajputs, Muslims and Dalits - Alf Hiltebeitel 1999

மழவர் - வன்னியர்



மழவர் குடிமக்கள் தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓரியின் கொல்லிமலை போன்ற தமிழ்நாட்டின் வடநிலப் பகுதிகளில் வாழ்ந்துவந்தனர்.
இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர் 
வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி “மழவர் பெருமகன்” எனக் குறிப்பிடப்படுகிறான். 
வள்ளல் ஓரி மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகிறான். (மழவர் பெருமகன் மாவள் ஓரி) 

அதியமான் ஒருவர் “வஞ்சியர் குலபதி எழினி” எனக் கல்வெட்டொன்றில் கூறப்படுள்ளார் .இதன் மூலம் வஞ்சியை ஆண்ட சேரர் அதியமான் மரபினரே என்பது தெரிய வருகிறது. சேரரும் , அதியரும் முறையே “மழவர் மெயம்மறை ”
 என்றும் “மழவர் பெருமகன் ” என அழைக்கப்பட்டனர் .இதமூலம் மழவர் என்பாரும் சேரர் குடியினர் என்பது விளங்கும் .
சேரர் வில் இலச்சினையைப் பெற்றவர் .கொல்லி மழவரும்  வில் இலச்சினையை பெற்றவர் . வன்னியர் (பள்ளி ) இனத்தவரின் குலச் சின்னமும் வில்தான்.. அதனால்தான் சிலை எழுபதில் வன்னியர் எடுத்த வில்லே வில் என்று வில்லின் சிறப்பை பற்றி கம்பர் பாடியுள்ளார் .
வன்னியர் ஏந்திய வில்லே, வில்

மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி
மலைமற் றுண்டோ
கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக்
கலைமற் றுண்டோ
அலையினி லுகாந்த நீத்தத் தலையன்றி
யலைமற் றுண்டோ
சிலையினிற் றிறங்கூர் வனியர் சிலையன்றிச்
சிலைமற் றுண்டோ ? 3

எனவே சேரர், மழவர்  என்பார் வன்னியர் இனத்தவர் .
சேரரின் கிளைக் குடியினராகக் கருதப் பட்டவர்கள் மழவர்கள். இவர்கள் போர்க் குடியினர். மழவர்களின் போர்த்திறன் கண்டு சோழ மன்னர்களும் மழவர் படையணியைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டனர்.

 மழவராயர்,மானங்காத்த மழவராயர் போன்ற பட்டங்கள் வன்னியருக்குண்டு.எந்த வகையில் பார்த்தாலும் இப்பட்டம் நமக்கு சாலப்பொருந்தும்.

மழவராயர் = மழவர் +அரையர்

மழவர் தலைவர் என்பது இதன் பொருள். மழவர் என்பவர் யார்?
அவர்கள் ஒர் போர்க் குடியினர்.

மழவர் தாயகம் எது தெரியுமா? மழகொங்கம் எனப்பட்ட பகுதி.இது தருமபுரி,நாமக்கல் பகுதிகளை உள்ளடக்கியது.இப்பகுதியில் தொன்றுதொட்டு வாழ்ந்துவருபவர்கள் யார்?வன்னியர்கள்தான்.

தகடூர் மழவர் என்றும் கொல்லி மழவர் என்றும் மழவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரியை ஆண்ட அதியமான் மழவர் மரபினன்.

மழபாடி - மழவர் படைகள் தங்குமிடம்.பிற்காலச் சோழர் ஆட்சியில் சிறந்து விளங்கிய பளுவேட்டரையர் என்பார் மழவர் இனத்தவரே. மேலும் சோழர்களோடும், பாண்டியர்களோடும் மண உறவு கொள்ளூமளவிற்கு ஏற்றம் பெற்றோராய் மழவர்கள் விளங்கியமை கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படும் செய்தி.


கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் மகளாவார். உத்தம சோழனின் மனைவி கிழானடிகள் மழவராயர் மகளாவார். இராசராச சோழனின் மனைவியரில் பஞ்சவன் மாதேவி மழவராயர் மகளாவார். மேற்கண்ட சான்றுகளால் பழமையான மழவர் குடியினர் சோழ மாமன்னர்களின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவர்களாக விளங்கினார்கள் என்றும் இன்று வாழும் மழவராயர்கள் இப் பெருமக்களின் வழித்தோன்றல்கள் என்றும் அறிய முடிகிறது.  பாண்டியநாட்டின் அரியனைக்கு மழவராயன் என்ற பெயரும் உண்டு.


மழவர் அடிப்படையில் சேரர் தொடர்புடையவர்கள்.

சேரர் குலச் சின்னம் - வில்

மழவர் குலச் சின்னம் - வில்

வன்னியர் குலச்சின்னம் - வில்

மழவர்கள் யார் என்பதைக் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களைப் படித்தவர்கள் அதே மழவர் குறித்த சில அறிஞர்களின் கருத்தை மட்டும் அறிய ஏனோ மறந்துவிடுகின்றனர்.


மழவர் யார் என்பதைக் குறித்து இரு அறிஞர்கள் பின்வருமாறு தம் நூல்களில் கூறியுள்ளனர்.

வரலாற்றாசிரியர் திரு.ராசமாணிக்கனார் :அரியலூர் மழவராயர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்.போர்வீரர் குடியினராக இருப்பதாலும்,படையாட்சி மரபினர் என்பதாலும் இவர்கள் சங்ககால மழவர் வழி வந்தவர் எனக் கருத இடமுள்ளது.

"தமிழ்த்தாத்தா" திரு.உ.வே.சாமிநாதையர்: மழவர் என்பார் சங்ககாலத்தில் அறியப்பட்ட போர்க்குடியினர்.இவர்கள் தற்போது வன்னியர் வகுப்பினராக வாழ்ந்து வருகிறார்கள்.

இன்னொரு செய்தி :
அறிஞரான திரு.உ.வே.சாமிநாதையர் அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் வன்னியர்களான மழவராயர்கள் ஆண்ட அரியலூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர்.


இன்றும் தென்னார்க்காடு மாவட்டம் என சொல்லப்படும் கடலூர் , விழுப்புரம் பக்கத்தில் மழவராயனூர் என்று ஊரே இருக்கிறது . இங்கே வாழ்பவர்கள் அனைவரும் படையாட்சி (வன்னியர் ) என பொதுவாக அழைக்கப்படுவார்கள் .. ஆனால் , திருமணம் போன்ற சுபகாரியங்களின் பத்திர்க்கைகளில் தம் பெயருக்கு பின்னால் மழவர்  அல்லது மழவராயர் என்று எழுதுவர் .

மழவராயனூர் என்னும் ஊர் இருக்கும் இடத்தை விக்கிமேப்  மூலம் கீழே பார்க்கலாம் :


அதுமட்டுமா , மழவரான சேர மன்னர்களை அக்னி குல க்ஷத்ரியர் என்றுதான் வில்லிபாரதம் சொல்கிறது .. இன்று தமிழகத்தில் அக்னி குலத்தவர் என்று கூறப்படுபவரும் வன்னியர் மட்டுமே ..

இது அரசின் ஆவணங்களில் கூட உள்ளது ..

Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya )


Wednesday, December 14, 2011

வன்னிய குல தொண்டைமான்


கருணாகரத் தொண்டைமான் குலோத்துங்க சோழனது படைத்தலைவன் .தொண்டை நாட்டை ஆண்டு வந்த அரசர் குல மரபினன். கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன். இவன் பல்லவத் தொண்டைமான் குலத்தைச் சேர்ந்தவன். பல்லவ தொண்டைமான் குலம் என்பது வன்னியர் குலத்தையே குறிப்பது .இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.
கம்பர் சிலை எழுபதில் கூட , தொண்டைமான் பட்டம் பெற்ற கருணாகரனை வன்னியர் குல வேந்தன் என்றும் சம்பு குலத்தவன் என்றுதான் அழைத்து இருக்கிறார் .

கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவநாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி. 1070-1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர்பாடியது இந்நூல். 

இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும்ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.

 சிலையெழுபது எனும் நூல் மூவேந்தர் ஆட்சிக்குப் பின் தோன்றிய நூல்அல்ல. சிலை எழுபது கி.பி.12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சோழர்ஆட்சியின்போது எழுதப்பெற்றது இந்நூல். 

இந்நூல் வன்னியர் குலத்தினராகக்குறிப்பிடுவது பள்ளி இனத்தவரையே. இந் நூலில் வன்னியர் பள்ளி நாட்டார்,வீர பண்ணாடர் என்றும் தழலிடை அவதரித்தோர் என்றும்குறிப்பிடப்படுகின்றனர்.மேலும் சம்பு முனிவர் யாகத்தில் தோன்றியவர் வன்னியர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கருணாகர தொண்டைமான் வன்னியர் குலம் என கம்பர் பாடிய பாடல் பின்வருமாறு :

சம்புகோத்திரச் சிறப்பு

சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம்வ ழாதோர்
சூத்திரந் தவறில்வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர்
மாத்திரை யளவுஞான மறைப்பின்மா தவங்கூர் சம்பு
கோத்திர வரசர்க் கொப்புக் கூறுவதெவரை மாதோ. 4

வன்னியர் குலச் சிறப்பு

விதிகுலத்தோர் சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்தவன்னி
உதிகுலத்தோ ராதலினா லுயர்குலத்தோ ராமிவர்க்கத்
துதிகுலத்தோ ரொவ்வாரேற் சொலும்வணிக குலத்தோரும்
நதிகுலத்தோர் களுமெங்ஙன் நாட்டினிலொப் பாவாரே. 6

வன்னியர் குலச் சிறப்பு

மறைக்குலத்தி லுதித்தாலென் மறையுணர்ந்தா லென்வணிகர்
நிறைக்குலத்தி லுதித்தாலென் நிதிபடைத்தா லென்னான்காம்
முறைக்குலத்தி லுதித்தாலென் முயற்சிசெய்தா லென்வன்னி
இறைக்குலத்தி லுதித்தவரே இகபரனென் றியம்புவரே. 7

---------------------------------------------  சிலை எழுபது


சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர்.தொண்டைமான் என்னும் பெயர் தொண்டைக் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும், பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.       பல்லவர் இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி என்னும் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன. இவை அனைத்தும் வன்னியர்கள் தம் உயிர்க்கு இணையாக பாதுகாக்கும் பட்டங்கள் .
சோழர் ஆட்சியில் தொண்டைமான்
கருணாகரத் தொண்டைமான்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. , கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. இவன் தொண்டை நாட்டை ஆண்டு வந்த பல்லவ அரசன் ஆவான். பல்லவப் பெரு மன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட சிற்றரசர்களில் ஒருவனாய் நெருங்கிய நண்பனாகவும் இருந்திருக்கிறான். இந் நட்பு காரணமாகவே குலோத்துங்கன் காஞ்சியில் வந்து படைகளுடன் தங்கினான் என்பர். கருணாகரன் கலிங்கப் போருக்குப் படைத்தலைவனாய்ப் புறப்படும் போது, இவனுடைய தமையனும் குலோத்துங்க சோழனின் நன்பனுமாகிய பல்லவனும் உடன் சென்றான் எனக் குறிக்கப்படுகிறது.
"தொண்டையர்க் கரசு முன்வ ருஞ்சுரவி
துங்க வெள்விடை உயர்த்த கோன்
வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசு
மால் களிற்றின் மிசை கொள்ளவே" -- (பாடல். 364)          


               என்ற பாடலால் இதை அறியலாம். தமையன் தொண்டை நாட்டை ஆள, குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாய் அமைந்த கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்த பகுதியை ஆட்சி செய்தான் என அறியலாம். இவன் வண்டையர்க்கரசு என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான். வண்டை நகர் அக்காலத் தொண்டை நாட்டில் சிறந்திருந்த நகரங்களில் ஒன்று. இக்காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் வண்டை நகராக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். அக்காலத்தில் வண்டைநகர், மல்லை (மாமல்ல புரம்), காஞ்சி, மயிலை (மயிலாப்பூர்) என்பன சிறந்த பட்டினங்கள் எனவும் அவை அடங்கிய நாடே தொண்டை நாடு என்பதும் கீழ்வரும் பரணி பாடலால் அறியலாம்.

" வண்டை வளம் பதி பாடீரே மல்லையும் கச்சியும் பாடீரே
பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலைப் பாடீரே" - பாடல் . 534

கருணாகரன் வன்னியர் குலம் என்று பாடிய கம்பர் , வன்னியரான கருணாகரன் கையில் எடுத்த வில்லை பற்றியும் பாடியுள்ளார்.


வன்னியர் ஏந்திய வில்லே, வில்

மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி
மலைமற் றுண்டோ
கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக்
கலைமற் றுண்டோ
அலையினி லுகாந்த நீத்தத் தலையன்றி
யலைமற் றுண்டோ
சிலையினிற் றிறங்கூர் வனியர் சிலையன்றிச்
சிலைமற் றுண்டோ ? 3

வன்னியரின் புகழ்

ஆந்துணையாம் வன்னியர்போ லார்துணைப்பட் டாதரிப்பார்
போந்தரிகள் வணங்குமிவர் புகழ்சிறிதோ யாம்புகழ்தற்
கேந்துகர மிரண்டினும்பொன் னிலக்கமறச் சொரியினுமிவ்
வேந்தர்புகழ்க் கிணைநாவால் வேறுபுகழ் கூறேமால். 49


குலத்தலைவர் படைச் சிறப்பு

விடையுடையார் வரமுடையார்
வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே. 8

சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பதுகவனித்தற்பாலது. சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்டகிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல் இவ்வாறு குறிப்பிடுகின்றது. இக்குறுநில மன்னர் வன்னியரா யிருந்தமைக்குக்கல்வெட்டுச் சான்றுகள் ஆதாரமாயுள்ளன.

பரிசுதரற் சிறப்பு

அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
தருள்வன் னியரை யாம்புகழ்ச்
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
சிந்தையுவந்து சீர்தூக்கிப்
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்
பொற்றண் டிகபூடணத்தோடு
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
கருணாகரத்தொண்டை வன்னியனே. 68

அறந்தாங்கி தொண்டைமான்
அறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலிமையும், செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர். இவர்களிற் சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர் என்று சொல்கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து, அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர்.

இவர்களெல்லாம் உண்மையான பல்லவ மற்றும் சோழ வம்சத்தின் சங்க காலம் தொட்டு வந்தவர்கள் . ஆகவேதான் இவர்களை கம்பர் போன்ற புலவர்கள் பாடலாக இவர்களின் வீரத்தையும், வன்னியர் குலத்தின் பெருமையையும் பாடியுள்ளனர் .

இவர்களின் வழிவந்தவரே பிற்காலத்தில் திருச்சியை சுற்றிய பகுதியில் பல்லவராயர்கள் என்ற பெயரில் 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவக்குடிகள்.

இப்பொழுது புதுக்கோட்டை தொண்டைமான் பற்றி பார்ப்போம் .... அறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை .


ஏனெனில்,அவர்கள் விசயநகரப் பேரரசின் பிரதிநிதிகள்.

பிற்காலத்தில் பல்லவர்கள் அன்னியர்களால் வீழ்ச்சியுற்ற சமயத்தில்,அவர்கள் வன்னியரில் ஐக்கியமாயினர்.16 ஆம் நூற்றாண்டின் பல்லவராயர் மற்றும் தொண்டைமான் என்போர் உண்மையான பல்லவர்குடி கிடையாது.அவர்கள் வடுகர் இனத்தைச் சார்ந்தவர்கள்.வடுகர் உண்மையான பல்லவராய மன்னனைக் கொன்று விட்டு தம்மை பல்லவராயர் என அழைத்துக்கொண்டனர். இதற்கிடையில் பிற்காலத்தில் புதுக்கோட்டையை ஆட்சி செய்த வடுகர் 'தொண்டைமான்' பட்டத்தை தாங்கி வந்தனர்.அவர்களின் கீழ் பணிபுரிந்த கள்ளர் குலத்தார் தங்களை தாங்களாகவே 'தொண்டைமான்' என அழைத்துக் கொண்டனர்.இதுதான் கள்ளர் குலத்தாருக்கு தொண்டைமான் பட்டம் வந்தமுறை 

(இதன் பொருட்டே இவர்கள் தனியாக 'கள்ளர் குல தொண்டைமான்' என்றே தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படுகிறார்கள்). காரணம் உண்மையான 'தொண்டைமான்' 'பல்லவராயர்' பரம்பரையினருக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மேலும் பல்லவர்களும் சேரர்களும் அக்னிக் குல க்ஷத்ரியர்கள் என்பதும். அக்னிக்குல க்ஷத்ரியர்கள் வன்னியர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

உண்மையான 'பல்லவராயர்' 'தொண்டைமான்' என்போர் 'பண்டாரத்தார்' என்ற விருதுப் பட்டம் கொண்ட வன்னிய பரம்பரையினரே. வன்னியரான தமிழ் அறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார் (சோழர் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதியவர்)பற்றி அனைவரும் அறிவர்.