அக்னிகுல க்ஷத்ரியர் என்று பத்ரம் வைத்துள்ள அழகாபுரி ஜமீன் கைபீது சொல்வது
1. மதுரை மீனாட்சி ஆசியால் பன்றிகள் மூலம் பாண்டிய அரசபையில் சிற்றரசு ஆனோம் ( சாளுக்கிய மரபை குறிக்கிறது இந்த பன்றி அடையாளம் . பிற்கால பாண்டியர் ஒய்சாளர் களுடன் மணஉறவு கொண்டவர்கள் . திருவண்ணாமலை ஆண்ட வன்னியன் வீரவல்லாளன் பாண்டியனுக்கு மாமனார் - இவர் பன்றி கொடி உடையவர் )
2.முதலில் ஆட்சி செய்தது திருபுவனம் . திருபுவன சீமையும் , பிறமலை நாட்டு காவலும் செய்தவர்கள் ( இங்குதான் பிற்கால பாண்டியர் ஆட்சியில் பன்னாட்டார் கோட்டை , பன்னாட்டார் குடியிருப்பு இருந்தன . மாறவர்மன் சுந்தரபாண்டிய சோழகோனார் என்ற அதிகாரி கொடுத்த நிலத்தானத்திலும் பன்னாட்டார் கோட்டை இடம்பெற்றுள்ளது )
3. இங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த பொது , சோழ ராசனுக்கும் பாண்டியனுக்கும் போர் வந்ததால் அதில் சோழருக்கு எதிராக படைதிரட்டி மதுரை பாண்டியன் போர் செய்ய சொன்னதால் , அதில் வென்று நற்பெயர் கொண்டார்கள்
4. இதனால் "மதுரை பாண்டியன் "சத்ரு சங்கார வன்னியர் " பட்டம் கொடுத்து ஆண்டு வரச்சொன்னார்
5. பின்னாளில் வந்த மதுரை பாண்டியர்கள் இவர்களின் புகழையும் மரியாதையும் கேட்டு எப்படி எங்கள் முன்னோர்கள் உங்களுக்கு இதனை கொடுத்தார்கள் என்று கேட்க , நாங்கள் மதுரை மீனாட்சி அருள் பெற்றவர்கள் என்று கூறினார்கள் . அதற்கு பாண்டியன் அதனை நிரூபிக்க சொன்னான்
6. மீனாட்சி அருளை நிரூபிக்க "செப்பு குதிரை " ஏறி நிரூபணம் செய்தனர் .
7. பாண்டிய ராசா மகிழ்ந்து ராமேஸ்வரம் பாதையில் உள்ள "ஆனையூர் , ஆப்பனூர் , பசுமையூர் , மங்கையூர் , இளசையூர்,அம்பையூர் " என்று ஆறு நாடு கோட்டை " ஆறுகோட்டை வன்னியனார் " என்று பட்டம் கொடுத்து ஆட்சி செய்ய சொன்னார்கள்
8. பிறகு மதுரை பாண்டிய ராசா இவர்களை அழைத்து " சுண்டன் குளத்தில் " ஒரு பள்ளன் கலவரம் செய்கிறான் என்றும் அடக்க சொல்லியும் அனுப்பினார்கள் . அவனை அடக்கியும் வந்தார்கள்
( இந்த சுண்டன்குளத்தில் தான் வன்னியர்கள் அங்காளபரமேஸ்வரி கோவில் கட்டி வாழ்கின்றனர் . இங்கு பெரியசாமி கோவில் ஒன்று உள்ளது . இது தென்மலை ஜமீந்தார்க்கும் , பள்ளர்களுக்கு குலதெய்வம் . இதுதான் வெற்றியின் அடையாளம் )
9. இதனால் மகிழ்ச்சி அடைந்த மதுரை பாண்டியர் , வன்னியர்களுக்கு " அவனியங்கோன் , அச்சந்தவிளத்தான் , தென்மலை , புத்தூர் , திருவேங்கடம் " என்று ஐந்து இடம் கொடுத்து ஆள சொன்னார்கள் . இவர்களுக்கு "ரெட்டைகுடை வன்னியனார் " என்றும் பட்டம் கொடுத்தார்கள்
10. பாண்டிய ராசா தென்காசி க்கு போன பிறகும் , எங்க முன்னோர் "வரகுணராம ரெட்டைகுடை வன்னியனாருக்கு " செவ்வல்குளம் ஊரில் காவல் அதிகாரம் கொடுத்தார் தென்காசி பாண்டியர் "அழகம் பெருமாள் ராசா " . பின் " அழகம் பெருமாள் வன்னியராயன் ரெட்டைகுடையார் " பட்டமும் கொடுத்தார் அழகம்பெருமாள் பாண்டியன்
11. பின்னாளில் கள்ளர்களை ஒடுக்கியதால் , அவர்களை பாண்டியர் முன்பு நிறுத்திய பிறகு , அவர்களுக்கு மரண தண்டனை தராமல் பாதுகாத்ததால் , கள்ளர்கள் வன்னியருக்கு " தாலிக்கு வெளியிட்ட ரெட்டைகுடையார் " பட்டம் கொடுத்தனர்
12. இவ்வளவு விருதுகளை கண்டு பிற்கால சாளுவ ராசா யுத்தம் வருகையில் அவர்களை வென்று "சாளுவ கட்டாரி " என்று பட்டம் பெற்றனர்
13. பின்னாளில் நாயக்கர்கள் பாண்டிய நாட்டிற்கு அதிபதியாக வந்து 72 பாளையங்கள் உருவான போது, செவ்வல்குளம் உள்ளவர்க்கு "அளகாபுரி" காவல் பொறுப்பு கிடைத்தது