இடங்கை புராணம் என்று சவுந்தரப்பாண்டியன் அவர்கள் பதிவு செய்தது "வன்னியர் புராணம் " ஆகும்
காசிநாதன் ஐயா அவர்கள் தொல்லியல் துறை இயக்குனர் ஆக பணியாற்றியதால் (head of the department ) யார் என்ன ஆவணம் பதிவு செய்தாலும் காசிநாதன் பெயர் இருக்கும். அதனால் அவர் தான் பதிவு செஞ்சார் ன்னு பொலம்புவது வீண்
இப்போ செய்திக்கு வருவோம் - இடங்கை புராணம் என்ன சொல்லுதுன்னா
1. சாபத்தால் இரண்டு பேர் "வாதாபி, வில்லவன் " என்று அசுரர்கள் இருந்தார்கள். இவர்களை அழிக்க அக்னியில் ஒரு வீரனை படைக்க வேண்டும் என்று சொல்லி சிவன் "சம்பு முனியை" அழைத்து யாகம் ஏற்பாடு செய்தார்
2. யாகத்தில் பிறந்த வீரன் "ருத்ரப்பள்ளி " ஆவான் (இவனைதான் ருத்ர வன்னியன் என்கிறோம் ).
இவனுக்கு இந்திரன் மகளான் மந்திரமாலையை மனமுடித்து வைக்கிறார் ஈசன்
3. ருத்ரபள்ளியார் க்கு "வஜ்ரபாகன், நீலகங்கன், கங்கபரிபாலன், சம்பு குலவேந்தன்,பரசுராமன் " என்று ஐந்து பிள்ளைகள்
4. ருத்ரப்பள்ளியார் தம் மகன்களுடன் போருக்கு செல்கிறார்
அப்போது "ஜம்பு மஹாபுரி பட்டினம் ல மனைவி மந்திரமாலையை விட்டுட்டு நான் சென்று வருகிறேன் ன்னு சொல்லிட்டு செல்கிறார்.
ஒரு தூண்டாவிளக்கு ஏற்றி வைத்து விட்டு இது அணையாமல் இருக்கும் வரை எனக்கு எந்த பிரச்னையும் வராது என்று எண்ணிக்கொள் என்று சொல்லிவிட்டு செல்கிறார்
5. போர் செல்லும் முன் காளகஸ்தி, காஞ்சி காமாட்சி வணங்கி திருக்கழுக்குன்றம் செல்கிறார்
விஷ்வகர்மா பல கப்பல்களை உருவாக்கி தருகிறார்
6. வாதாபி பட்டினம் போகும் முன் முழுக்க கடல் சூழ்ந்து உள்ளது. இந்த கடலை தாண்ட யோசிக்கும் பொழுது தூர்க்கை வணங்குகிறார்
7. தூர்க்கை அம்மன் ஒரு இடையர் பெண்ணாக வந்து ஒரு எலுமிச்சம் கொடுத்து இதனை நீரில் வை. நீர் வற்றும், உன் படை செல்லும் என்று சொல்கிறார்
8. அதே போல ருத்ரப்பள்ளியார் செய்ய, நீர் வற்றி பாதை பிறந்தது. ருத்ரப்பள்ளியார் படையுடன் சென்றனர்.
அசுரன் வாதாபி மாயையால் பின்னால் வந்தபடை மக்கள் கண்களுக்கு இவர்கள் காணாமல் போனது போன்ற மாயை தென்பட்டது
9. அவர்கள் மீண்டும் மந்திரமாலை இருந்த ஜம்புமாபுரி பட்டினம் சென்று பள்ளியாரும் படையும் இறந்து விட்டனர் என்று சொல்ல
மந்திரமாலை " தூண்டா விளக்கு அணைய வில்லையே, வலம்புரி சங்கிலும் நாதம் உள்ளதே" என்று எண்ணி
இவர்கள் பொய் உறைக்கிறார்கள் என்று நினைத்து
"போடா கள்ளா, போடா மறவா " என்று திட்டுகிறார் இந்திரன் மகளும் ருத்ரப்பள்ளி மனைவியுமான மந்திரமாலை
10. இதனாலேயே கள்ளன் என்றும் மறவன் என்றும் பள்ளி இறந்தார் என்று வந்து சொன்னவர்களுக்கு குலம் நிலை பெற்றது
11. பின் பள்ளியோடு சென்ற வீரர்களை வைத்து ருத்ர பள்ளியார் என்ற வீரவன்னியன் போரிட்டு வென்று மீண்டும் துர்கை துணையோடு நாடு திரும்பி தம் பிள்ளைகளுக்கு நாடு பிரித்து தந்து ஆட்சி செய்கிறார்
சேலம் தெலுங்கு நாயக்கர் சபையில் "சேலம் எழுக்கரை நாட்டு பன்னாட்டார் " தலைமையில் வாதம் நடந்தது
(இந்து எழுக்கரை பன்னாட்டார் என்ற வன்னியர் குடும்பம் இப்போ கூட கீழ நடக்க வைக்காம அவங்க குடும்பத்தை ஊர் மக்கள் தூக்கியே சென்றாங்கனு செய்தியில் வந்ததே அந்த குடும்பமே. அவங்க படங்கள் மற்ற பதிவில் போடுறேன் ")
இதில் நாராயண ஐயர் வன்னியர் சார்பாக வன்னியர் புராணம் சொல்லி இடங்கையே சிறந்தது என்று வாதிட்டு வெற்றி பெற்றார்
அதில் வன்னியர்களை பற்றி
வீர வன்னியர் என்ற ருத்ர பள்ளியார் க்கு 5 மகன்
1. நீலகங்கன் வரத்திலே வந்த பள்ளி - கிருஷ்ண வன்னியர் - அவன் கோத்ரம்
2. வஜ்ரபாகன் வம்சத்து துஷ்டப்பள்ளி - ஜம்பு வன்னியர் - அவன் கோத்ரம்
3. கங்கபரிபாலன் வம்ச - சிஷ்ட பள்ளி - பிரம்ம வன்னியர், அவன் கோத்ரம்
4.வன்னியப்பள்ளி வம்ச - கங்கவன்னியர் - அவன் கோத்ரம்
5. அரச பள்ளி - இந்திர வன்னியர் - அவன் கோத்ரம்
ஆக இந்த 5 பள்ளிகளும் (பள்ளி,சிஷ்ட பள்ளி, அரசப்பள்ளி, வன்னிய பள்ளி, துஷ்ட பள்ளி ) அக்னியில் பிறந்தனர்
இவர்களுக்கான குலங்கள் எட்டு ( அதாவது இவர்களுக்கு துணை சமூகம் )
1. கள்ளர்
2. மறவர்
3. கம்மாளர்
4. நகதகர்
5. இடையர்
6. வேடர்
7. எகிளியர்
8.சக்கிலியர்
இல்லை இல்லை நாங்களும் அக்னி குலம் ன்னு சொன்னா தாராளமா சொல்லாலம்
ஆனா அப்படி அக்னி ண்ணா மேலே சொன்ன 5 வகை பள்ளியில் இருந்து வந்தோம் ன்னு உறுதி ஆகும்