சிதம்பர சோழனார் குறித்த செய்தி:
செய்தியை அளித்த திரு . சுவாமி அவர்களுக்கு நன்றி
பிச்சாவரம் சோழனாரின் வரலாறு ஆய்வுக்குரியது. பலருக்கு பிச்சாவரத்தை ஆண்ட பாளையக்காரரகத்தான் அவரைத் தெரியும். ஆனா அதற்கு முன்பே அவர்கள் கொள்ளிடம் சார்ந்த பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களாக இருந்திருக்கின்றனர்.சோழகனார்களின் தலைநகரமாக விள்ங்கியிருக்கிறது தீவுக்கோட்டை என்ற சிறிய தீவு.
இத்தீவு பிச்சாவரத்திற்குத் தெற்கில் கொள்ளிடம் ஆறு கடலில் சேருமிடத்தில் அமைந்துள்ளது.ஒரு போருக்குப் பின்னர் இந்தீவுக்கோட்டையை விட்டகன்ற சோழனார்கள் வலி குன்றி பிச்சாவரத்தை தலைமையிடமாகக் கொண்டு பாளையக்காரர்களாக ஆனார்கள்.
இத்தீவுக்கோட்டை தஞ்சையை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன் அமைத்ததாகவும் அதனை தனது மகளுக்கு சீதனமாகக் கொடுத்ததாகவும் செவி வழிக் கதைகள் உண்டு.
இந்தத் தீவுக் கோட்டையை மையமாக வைத்து, நாவலாசிரியர் சாண்டில்யன் அவர்கள் "ராஜபேரிகை" எனும் வரலாற்று புதினத்தைப் படைத்துள்ளார்கள்.
அந்த நாவலில் சாண்டில்யன் இத்தீவுக்கோட்டையை சோழ மன்னன் அமைத்ததாகவும் அதைத் தன் மகளுக்குச் சீதனமாகக் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.
தீவுக் கோட்டையை ஆண்டு வந்த நாட்களில் சோழனார் வலிமை பொருந்திய குறுநில மன்னனாக அறியப்படுகிறார்.பகைவர்களை சிறைப்பிடித்துக் கொன்று அவர்கள் உடல்களை கொள்ளிட ஆற்றில் தங்களால் வளர்க்கப்படும் முதலைகளுக்கு இரையாக்கியுள்ளார்கள் எனவும் குறிப்புகள் உண்டு.
நன்றி: சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு -திரு.நடன.காசிநாதன் அவர்கள்.