வன்னியர் செப்பு பட்டயம்
செய்தியை அளித்த திரு.கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி
நூல் : வன்னியர், திரு.
நடன. காசிநாதன்
செப்பு பட்டயம் எண் 10
காலம் : சகம் 1563 , கி பி 1641 ஆங்கிரச ஆண்டு
குறிப்பு : வன்னி
குலாதிக்கம் 1966 பக்கங்கள் 40 -
45
அரசர் ; மல்லிகார்சுன தேவமஹாராயர்
செய்தி : பல
இடத்து வன்னியர்கள்
ஒன்று சேர்ந்து வில்லவ நல்லூரில் மடம் கட்டுவதற்காக
ராஜவன்னிய ராஜா
மல்லிகார்சுன தேவ மக்ராயரிடம் அனுமதி பெற்று வந்ததையும் மடம் கட்டும் பொருட்டு ஒவ்வொருவரும்
எவ்வளவு பொருள் தரவேண்டும் என்று முடிவு செய்ததையும்
விளக்கு கிறது மேலும் பல்வேறு விதமான
திருமணமுறை அக்காலத்த்தில்
நடைமுறையில் இருந்ததையும் மன்னவேடு
கிராமத்தார் எந்தெந்த வகையில்
வரி எவ்வளவு செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்ய பெற்றிருந்தமையும் குறிப்பிடுகிறது
.
பட்டய வாசகம் :
சுபஸ்ரீ மஹா மண்டலத்தில்
சுவர்ண அரியராய விபாடன் பாஷைக்கு தப்புவராத கண்டன் மூவராய கண்டன்
கண்ட நாடு கொண்டு கொண்டநாடு
கொடாதான் , துடுக்கர்
தளவிபாடன் துடுக்கர் மோகந்த விர்த்தோன், ஒட்டியர்
தளவிபாடன் , ஒட்டியர்
கொட்டந்த் தவிர்த்தோன், பின் மண்டலமுங் கொண்ட இராஜாதி
ராஜன், இராஜ பரமேஸ்வரன், இராஜ மார்த்தாண்டன்,இராஜேஸ்வரன் , புயங்கன் , இராஜகம்பீரன் , இராக்கன்த்தம்பிரான் , இந்திர
துரந்த (ர ) ன் . அஸ்வபதி கஜபதி துரந்தான் அஷ்ட
மனோகர இராயன், அசுராண விருது, நரபாலன் , கோதண்ட
இராமன் , கலியுக இராயன், கண்ணன், வாளுக்கு
வீமன் தோளுக்கு அபிமன்னன் , குணத்திற்கு
தருமன், அழகுக்கு அ நங் கன், அமர்ந்தாற்கு அரிச்சந்திரன் , ஆண்மைக்கு
அனுமான், ஆக்கினைக்குச சுக்ரீபன் , கொடைக்கு
கர்ணன் , செல்வத்திற்கு
அளகேசுவரன், பலத்திற்கு வாயு பகவான் , உலகுக்கு
கதிரோன் உலாவும் உலகமெல்லாம் படைக்க நினைத்தருளிய
வீராதிவீரா வன்னியப் பிரதாபன் , கிருஷ்ணதேவ
மஹாராயர், திருமலை தேவ மஹா ராயர் , நரசிங்க
தேவ மஹா ராயர் இராம தேவ மஹா ராயர் , பிராவிட
தேவ மஹா ராயர் , மல்லிகார்சுன
தேவ மஹா ராயர் பிரிதிவி இராச்சிய பரிபாலனம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1563 இதற்கு
மேல் நின்ற ஆங்கீரச வருஷத்து மிதுன மாசத்து
பூர்வ பட்சத்து அஷ்டமியும் பூராட்டாதி நட்சத்திரமும்
பெற்ற சோமவார நாள் , வடகரை
விருதப்பசங்கன் வளநாட்டுக்கு மேற்கு நாடு
இருங்க கோள பாண்டி
வளநாடு , தொண்டை
மண்டலம் , சோழ
மண்டலம் , பாண்டிய
மண்டலம் , கொங்கு மண்டலம் இந்த
நாலு மண்டலத்திற்கு அழகான தொண்டைவள நாட்டுக் கழகான வில்லவனல்லூர்
திருக்காமேஸ்வரர் குயிலாரம்மை அவர்கள் சந்ததியாகிய வில்லவனல்லூரிலே அந்தந்த
சாதிக்கு மடாலயங்கள் உண்டாகின்றன. நமக்கு சிவாலய பூசை மாத்திரமிருகின்றது.
தென் தேசத்தில் நமது வம்ச பன்னாடர் தங்கள் பேரும் பிரதாபமும்
உண்டாகவேண்டுமென்று மடங்கள் கட்டியிருக்கிறார்கள். நாம் இராயரைபோய் கண்டு மடங்கட்ட
உத்தரவு பெற்று வருவோமென்று திருவக்கரை வல்லவநாட்டு
மழவராய பண்டாரத்தார், கருத்த நாயனார்
பண்டாரத்தார், சின்னகுமார நாயனார் பண்டாரத்தார், சிதம்பர
மழவராய பண்டாரத்தார் கச்சி இராயர் பெரியண்ன நாயனார் சிற்றம்பல நாயனார் தாண்டவ
நாயனார் சடையப்ப நாயனார் அழகு சிங்க நாயனார்
மெய்யோக நாயனார் பண்டாரத்தார் இவர்களும் கண்டன்மார் தந்திரியார் படையாக்ஷியார்
என்னும் பல பட்ட பெயர் பெற்ற சோம சூரிய அக்கினி வம்ச பண்ணாடரான
உறவின் முறையார் அனைவரும் போய் இராஜ வன்னிய இராஜ ஸ்ரீ மல்லிகார்சுன
தேவ மஹா ராயரைக் கண்டு பேச
அப்போது இராயரும் சிம்மாசனம் விட்டு இறங்கி நமதுவம்சத்தாரென்று தெரிந்து தேவாலய
பூஜை யிருக்க மடத்து தருமம் நமகேனென்று இராயரும்
கேட்க அப்போது நாயனார் பண்டாரத்தார் பாண்டிய மண்டலம் சோழ மண்டலம் முதலிய மற்ற மண்டலங்களில்
குரு மடங்கட்டியிருக்க தொண்டைமண்டலதிலேயும் இருக்க
வேண்டுமென்றார்.இராயரும் சந்தோஷித்து உங்களுக்கு இடமில்லாமற் போமோவென்று
தானத்தாரையழைத்து நாயனார் பண்டாரத்தார் அவர்களுக்கு இடம் விடப்போமென்று சொல்ல
அப்போது தானத்தார் மூத்த முதலியார் திருநாகத்தொண்டை முதலியார் நம்பித திருஞானப
பண்டிதர் மற்றும் முற்றாற்றுடையார் நம்பிக்குருக்கள்
வயித்தியநாத குருக்கள் கோவில் கணக்கு ஷேமக்கணக்கு மற்று முண்டான தானத்தார்
தலதாருங்க்கூடி கெவிசித்த லிங்க தேவர் முளைய தேவர் தம்பிரானார் திருநாமத்தில்
காணியான தெற்கு தெருவில் தேரோடும் வீதியில் தென் சரகில் பாலையர் மடத்திற்கு
கிழக்கு அம்பலத்தாடும் ஐயர் மடத்திற்கு மேற்கு சட்டையர் மடத்திற்கு வடக்கு
அடி கிழக்கு மேற்கு 75 தெற்கு வடக்கு
அடி 15 அடி ஒன்றுக்கு பொன் ஒன்றாக 75 பொன்னுக்கு
கிரையங் கொண்டு கல்லில் பேர்வெட்டி
நட்டு கிணறுகட்டி மடங்கட்டி தாம்பர சாஸனமாக
பட்டையமெழுதி நாலு மண்டலம் 54 தேசமுங்
குருமூர்த்தமாய் கொண்டாடசொல்லி மஹா மட பிச்சை முட்டியும் திருவிளக்கும் திருநந்தவனப
பணிவிடையும் திருமாலையும் உபயமும் மகேஸ்வர பூஜையும் பண்ணி நடத்தி வர
சிலா நதி சக்கரவர்த்தி யோகீஸ்வர குருவை மடத்தில் வைத்து அந்தந்த சீர்மைப
பண்ணாடரும் நாயனார் பண்டாரத்தார் அனைவரும் வம்ச தரும கீர்த்திகாக
மடத்திற்கு கட்டளையிட்டது உபநய முகூர்த்தத்திற்கு பணம் ஒன்றும் , சுயம்வரம்
நாட்டி மாலை சூடுங் கலியாணத்திற்கு பொன் பத்தும் , கத்தி
நாட்டி காலியான ஞ் செய்பவருக்கு பணம் பத்தும் , மற்ற முகூர்த்தங்களுக்கெல்லாம்
மாப்பிள்ளை வீட்டார் பணம் ஒன்றும் , பெண் வீட்டார் பணம் ஒன்றும் , பெண்
தந்த பணம் ஒன்றும் , மாதா
பிதா குரு பாத பூஜை வரும்படிகளும்
மடத்தில் சேரவேண்டியது. தண்டிகை துரைகள் பணமும், குதிரை மேற் குடைபெற்ற அஸ்வபதிகள்
அஞ்சு பணமும், ஜாதியில் குற்றா
குற்ற ஞ் செய்பவர்
அபராத பணமும் மன்னவேடு கிராமத்தார் அரிவாளுக்கு ஆறுபடி தானியமும், களைவெட்டுக்கு
பதக்கு தானியமும் ஏருக்கு முக்குறுணி தானியமும் , பேரூருக்கு
பத்து பணமும், சிற்றூருக்கு அஞ்சு பணமும்
கொடுக்க வேண்டியது. ஆதுபாது
அற்றவர் சொத்தை மடத்தில் சேர்த்து மடத்தாரால் சவரட்சணை பெற வேண்டியது. இவ்வரும்படிகள்
மடத்திற்கு சேருகிற படியால் செந்தூரத் திலர்தம் கோபி திருமணி திருநீறிட்ட
பேர்களும் சந்திர சூரியருள்ள நாள்வரைக்கும் நடத்தி வருவீர்களாகவும்;
இந்த மடாலய தருமத்தை தங்காமல் கொடுத்தபேர்கள்
மாதாப்பிதாக்களை இரட்சித்து சிவாலயம்
பிர்மாலயம் பூதானம் கோதானம்
கன்னிகாதானம் செய்த பலனை பெறுவார்கள் . ஸ்ரீ
மது வில்லவனல்லூரிலே திருக்காமேஸ்வரர்
குயிலாரம்மை குமாரசாமி சந்நிதானம்
விளங்குவது போல் விளங்குவார்கள். மடத்திரு அனுப்ப கட்டளையிட்டதை அனுப்பாவிடில் மடத்து
சுவாமியாரால் அனுப்பப்பட்ட பணிவிடை சிஷியாள் எழுந்தருளின உடனே கூடி
முன்னேபோய் காண்பித்து கொண்டு வந்தவர்களுக்கு விடுதிவிட்டு சாப்பாடு
போஜனம் அமைத்து தருமத்திற்குண்டான வரும்படிகளை கொடுத்தனுப்பி வைக்க
வேண்டியது. தருமபரிபாலரான
சௌபாக்கிய பிரமாணிக்கரான வேள்வியில்
பிறந்தோர்களான ஸம்பு
குலத்தவரான குமாரசாமியார் படைத்தலைவரான அசுரர்கள் மார்பரான ஆஸ்தான
பந்துஜன சிந்தாமணிய ரான சாந்த மாரியுடைய கந்நிகையை மணஞ் செய்தவரான வாடாமாலையும்
வன்னத்தடுக்கும் மாலையும் தரித்தவரான
வாசமிகுந்த குவளை மாலையும் மிடக்கொடியும்
முப்பத்திரண்டு விருதுகளும் பெற்றவர்களான முன்னூல் மார்பும்
புலிக்கொடியும் பெற்றவரான நையா
நாட்டுக்கு சப்தபதிகளான சோணாடு காத்தவரான
மறையோர் மகனுக்கு உயிர் கொடுத்தவரான வல்லானுடைய மகுடந் துணித்தவரான வாதாபியை
வென்ற வன்னியகுலாதிபரான செங்கையில் வில்லும்
சிலீமுகமும் எடுத்தவரான ஏரடி வாழும் வீரப்பரி நகுல துஷ்ட நிர்தண்ட
விர்ப்பன்ன உத்தண்ட கோதண்ட விக்கிரமார்தாண்டரான அனைவோரும் மனமொத்து இந்த
காரியம் தட்டுதலை பண்ணுவ தல்லவென்று மடத்து தருமம் விளங்கத தக்கதாக
பார்க்கவும் யாதாமொருவர் அகடவிகடம் பண்ணினால் கங்கைகரையில் காராம்பசுவை
கொன்ற பாவத்தில் போககடவர். தங்களுடைய மாதாபிதாக்களை
கொன்ற தோஷத்திலேயும் தெய்வ பிராமணரை கொன்ற பாவத்திலேயும் போக கடவர் . தருமம் விளங்க
குலம் விளங்கும் ; குலம்
விளங்க பெருமையும் செல்வமும்
பதவியும் அடைவார்கள்.