பார்க்கவ குல உடையார்களின் "சிறிய கிருஷ்ணாபுரம் செப்பேடு" உண்மை நிலையை உணர்த்துவது.ஆதாரமில்லாமல் எழுதுபவர் கூற்று இனி எடுபடாது.
பார்க்கவ குலம் பற்றி சொல்லவெண்டுமென்றால் "தெய்வீக மன்னன்" பற்றி கூறுதல் அவசியம்.
திருக்கோவலூரை ஆண்ட தெய்வீக மன்னனின் வழி வந்தோரே பார்க்கவ குல உடையார்கள்.
தெய்வீக ராஜன் மூவேந்தர் பகை: தெய்வீக ராஜன் திருக்கோவலூரை ஆளத் தொடங்கியபோது அவரிடம் இருந்த பச்சைப் புரவி(குதிரை) ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டு அதனை வாங்கி வருமாறு தமது அமைச்சர்களை மூவேந்தர்கள் அனுப்பினர்.
குதிரை வேண்டுமானால் போரிட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என தெய்வீக மன்னன் தெரிவிக்க மூவேந்தர்களும் போரிட வந்தனர்.ஆனால் போரில் மூவேந்தரும் தோல்விகண்டனர்.
தோல்வி கண்ட மூவேந்தர்களும் தெய்வீக மன்னன் வெற்றி பெற்றார் என ஒப்புதல் வழங்கி எந்த நிலப்பகுதிகள் அவருக்கு வெண்டும்ன்று கேட்க தாம் பச்சைப் புரவியேறி அது ஒரு வட்டம் வரும் அளவுள்ள நாடு போதுமென்று கூறினார்.
இதனை கீழ்க்காணும் பாடல் தெரிவிக்கிறது:
"வடதிசைக் கடியாறு குணதிசைக் கரிய கடல் வளம் வராத குடதிசைக்குக் கொல்லிமலை தெந்திசைக்கு திவ்வியாறு குலவுமெல்லை யடவுபட கணப்பொழுதிலொரு வட்டஞ் சூழ்ந்த பரியதன்மேல் வந்து புடவிதனிலறச ரொருமூவர் திருமுன்பு போந்தான் வேந்தன்"
இந்தப் பாடல் கிருஷ்ணாபுரம் செப்பெட்டில் உள்ளது.
மூவேந்தர்களும் குதிரை நடந்த தேசமெல்லாவற்றையும் தெய்வீகராசனுக்கு விட்டுக் கொடுத்து, அம்மன்னனுக்கு திருக்கோவிலூரில் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.
-----
இத்தகைய பெருமை மிகுந்த தெய்வீகராசன் வழி வந்தவர் தமது இனத்திற்கு இம்மையில் புகழும், மறுமையில் வீடுபேறும் பெறுவதற்காக பொதுவாக ஒரு மடம் ஏற்படுத்த முடிவு செய்தனர்.
இதனை சிறிய கிருஷ்ணாபுரம் தெய்வீகராசன் செப்பேடு தெளிவாகத் தெரிவிக்கிறது.
அந்த செப்பேட்டில் தெய்வீகராசன் வழிவந்தோர் யார் யார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்பேட்டில் அந்த செய்தி வரும் பகுதி :
"சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு தேசம் 4 மண்டலத்துண்டாகிய மலைய மன்னர், நத்த மன்னர், பாளையக்காரராகிய பண்டாரத்தார், நயினார், உடையார், சீமை நாட்டார், சில்லரை கிராமத்து வன்னியர் யிவர்கள் அனைவருக்கும் பொது மடம் கிரமமாய் நடந்து வருகிற படியினாலே", ஆண்டு வர்த்தனையாகக் கட்டளையிட்ட சுவாதியம்:
தணிடிகை(பல்லக்கு) துரைமாருக்குப் பணம் 10 குதிரை, குடை பெற்ற் பேருக்குப் பணம் 5 தலைக்கட்டுக்குப் பணம் 2 கலியாணத்துக்குப் பணம் 2 மாப்பிள்ளை வீட்டுக்குப் பணம் 2
இது பிரகாரம் ஆண்டுக் காண்டு தம்பிரான் வந்த உனே பட் அரிசிகளும், பணமும், வெற்றிலையும் கொடுத்துத் தங்கள் கீர்த்தி போல கிரமமாய் நடப்பித்துக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-----------
மேற்கண்ட செப்பேட்டுச் செய்தியில் பாளையக்காரராகிய நயினார் உடையார் என அரியலூர், உடையார்பாளையம் பாளையக்காரர்களே குறிப்பிடப்பட்டுள்ளனர். சில்லரை கிராமத்து வன்னியர் என்பது பல்வேறு சிறு கிராமங்களில் வசித்துவரும் வன்னிய ஜாதியினரைக் குறிக்கின்றது.இதில் மாற்றுக் கருத்தே இல்லை.
இந்தச் செப்பேட்டின் காலம் கி.பி 18 ஆம் நுற்றாண்டு.
தெய்வீகராசன் வழிவந்தோரகிய இவர்கள்தான் பொது மடம் கட்டினர்.எனவே வன்னிய ஜாதியினரும் தெய்வீகராசன் வழிவந்தோர்தான். பார்க்கவகுலமும் வன்னியர் இனமும் ஒன்றே என்பது உறுதியாகிறது.
இந்தச் செப்பெட்டைக் காணும் யாவரும் இந்த உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.
சோழர் என்று உரிமை கூற வழி ஏதும் இல்லாமல் பார்க்கவ குல உடையார்களோடு தம்மை தொடர்புபடுத்தி ஆதாரமில்லாத செய்திகளை தொடர்ந்து எழுதினால் உண்மை மறைந்துவிடுமா?
தெய்வீகராசன் வழி வந்தோர் மலையமன்னர், நத்த மன்னர், வன்னியர் என்று 18 ஆம் நூற்றாண்டு செப்பேடு கூறுவதை யாரும் மறுக்கமுடியாது.
பிற்காலத்தில் ஆண்ட மலையமான்கள் வன்னியர். சங்ககால மலையமான் வன்னியர் அல்ல என்று இனி கூற முடியாது.
தெய்வீகராசன் சங்ககால மலையமானின் முன்னோடி.