ஆதித்தய சோழன் மனைவிகளில் பட்டத்தரசி ராஷ்ட்டிரகூடர் இளவரசி "இளங்கோப்பிச்சி" ஆவார்.
இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு .. அவர்கள் பெயர்
கன்னர தேவன்
பராந்தகன்.
ஆனால் சோழர் குலத்தில் பின்னாளில் எப்படி சாளுக்கியரில் திருமணம் செய்த சோழ அரசியின் புதல்வன் குலோத்துங்கன் , சோழ மன்னனாக ஆட்சி புரிந்தானோ , அதே போல
பல நூற்றாண்டு முன்பே
ராஷ்டிர கூடர் அரசில் , அரசனாக முடி சூடி ஆட்சி செய்தவன் சோழ அரசன் கன்னர தேவன் ஆவான்.
பராந்தகன் சோழனாக முடி சூடிகொண்டான்.
கன்னர தேவன் ராஷ்டிர மன்னனாக முடி சூடினான்..
ராஷ்டிரர் , சாளுக்கியர் இருவருமே ஒரே குலம்தானே ?
வேளிர் யது குலம், அக்னியில் பிறந்தவர் என்றெல்லாம் சொல்லப்படும் ஹோய்சாலர் போன்றவர்கள்தானே..
அப்படி இருக்க சாளுக்கிய வம்சத்தில் சோழ ரத்தம் குலோத்துங்கன் காலத்திற்கு முன்பே கலந்து விட்டது போலும்.
அப்படிதானே ?
படம் - பிற்கால சோழர் வரலாறு..
குறிப்பு :
மன்னர்கள் அரச வம்சமா என்று பார்த்தே மண உறவு கொண்டனர்..
மொழி அல்ல..