Sunday, June 16, 2019

தஞ்சையை காத்த வன்னியர்கள் - மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு


வன்னியர்கள் (பள்ளி நாட்டார்கள் ) தஞ்சையை சக்கரவாளம் கொண்டு காவல்காத்தவர்கள் என்கிறது மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு (கி.பி.1215)

அரியலூர் மாவட்ட கல்வெட்டுகளில் - தொல்லியல் ஆய்வாளர் இல.தியாகராசன் அவர்கள் பதிவு செய்துள்ளார்


இல.தியாகராசன் அவர்கள் வன்னியர்களான பள்ளி நாட்டார்கள் தஞ்சையை காவல்காத்தவர் என்பதையும் , சம்புமாமுனி வேள்வியை காத்து நின்றவர்கள் என்றும் கல்வெட்டு குறிப்பிடுவதாக கூறுகிறார் .

இதில் கவனிக்க வேண்டியது , "சம்புமாமுனி மாபலி வந்தோ ...." என்பது

பலி  என்பதற்கு யாகம் என்று பொருள் உண்டு ..


மாமுனிகள் வேள்வி யாகங்கள் வளர்ப்பார்கள் .
"சம்புமாமுனி மாபலி வந்தோ..." என்பது

சம்புமாமுனி மகா யாகத்தில் வந்தவர்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது

அடுத்து முக்கியமான விஷயம்

"வஞ்சி கூடலுறை காஞ்சி வளவர் கோமானருளினாலே தஞ்சையுள்ளுங் காப்பதற்க்குச் சக்கரவாளம் பெற்றுடையோர்"

சேர பாண்டிய பல்லவ நாட்டினை ஆளும் சோழனின் (வளவன் ) தஞ்சை பகுதியை காப்பதற்கு சக்கரவாளம் பெற்றவர்கள் வன்னியர்கள் .


##
சக்கரவாளம் என்றால் என்ன ?

கவந்தன் என்னும் அசுரன் லஷ்மணனை தன் கரங்களுக்குள் அடக்கினான்

இதனை கம்பர் “சக்கரவாளம் மலை போன்ற கவந்தன் கரங்களுக்குள் சிக்கினான்“ என வர்ணிக்கிராறாம் இராமாயணத்தில்

கடலுக்குள் ஒரு மலை பூமியின் நிலப்பரப்பை சுற்றி இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு

அதனை சக்கரவாளம் மலை என்பர் (இணையத்தில் படித்தது)

அதுபோல சோழநாட்டை தங்கள் படையால் சுற்றி வளைத்து பாதுகாத்தார்கள் “பள்ளி நாட்டார்கள் “
##

இதே போல ஆய்வாளர் நொபுரு ஹரிஷிமா வன்னியர்கள் சோழர்களின் விற்படையை நிர்மாணித்தார்கள் என்று குறிப்பிடுகிறார் ஆடுதுறை கல்வெட்டின் மூலம்

இந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு சோழத்தை வன்னியர்கள் காவல் புரிந்த செய்திகளை தந்து ஒரு வீரன் கூட படையில் இருந்ததற்கு ஆவணங்கள் அன்றி நாங்களும் சோழர்கள் என்று பெருமைக்கு பொய் பேசும் நபர்களின் முகத்தில் கறியை பூசியுள்ளது

இத்துடன் தில்லையில் இன்றும் புலிக்கொடி பெற்று வன்னியர்கள் ராஜசாசபையில் முடி சூட்டுகிறார்கள் என்பது பெருமைக்குரியது

அடுத்த செய்தி .. தில்லை நடராஜருக்கு பன்னெடுங்காலமாக தொண்டு செய்தவர்கள் வன்னியர்கள் என்கிறது ஆவணம் 

மேலும் 9 திசை 79 நாட்டு பன்னாட்டார்கள் ஒன்று கூடி இவ்வூரிலிருந்த கணபதிஸ்வரமுடையார் கோயில் வாதாவி நாயகர் மற்றும் வாதாவி விநாயக பெருமான் பூசை,திருப்பணி,திருவிளக்கு ஆகியவற்றுக்காக ஆகும் செலவுக்கு காசு முதலீடாக கொடுத்ததை கூறுகிறது

நரசிம்மபல்லவன் காலத்தில் வாதாபி வென்று கொண்டு வந்ததே வாதாபி விநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது


Add caption