Sunday, August 26, 2012

அரசர் படைகள் : - நாட்டுப்படை சார்ந்தவர்கள் படையாட்சி . அதுவே அரசரின் நிலைப்படை (அ) மூலப்படை எனப்படும்


 

 மூலப்படை, கூலிப்படை; நாட்டுப்படை, காட்டுப்படை; பகைப் படை, துணைப்படை; என இவ்விருபாலாகப் பகுக்கப்படும் .

அறுவகைப் படையுள் நாட்டுப்படை என்பது படையாட்சி கைக்கோளர் செங்குந்தர் படைகளையும், 


காட்டுப்படை என்பது கள்ளர் மறவர் படைகளையும் குறிக்கும்.

படைத்தலைவர் இயல்பாகத் தத்தம் படைமறவர் பாங்காகவே வதிவராதலின், வேந்தரை அடுத்தும் அவர் தலைநகரிலும் என்றுமிருந்த படைத்தலைவர் நாட்டுப்படைத்தலைவரே( படையாட்சி ).

கூலிப்படை போர்ச்சமையத்திற்கு மட்டும் கூலிக்கு அமர்த்திக் கொள்வது. துணைப்படை என்பது தனித்தவிடத்து நட்பரசர் படையையும் போர்க்களத்தில் பகைப்படையல்லாத தன்படைத் தொகுதியையுங் குறிக்கும். வழிமுறைப் பண்பு வரவர வளர்ந்தும் இயற்கையாக அமைந்தும் இருக்குமாதலாலும், வாழ்நாள் முழுவதும் உணவளித்துக் காத்த அரசனுக்கு நன்றியறிவாகச் செஞ்சோற்றுக் கடன் கழித்தல் மறவ ரியல்பாதலாலும், 'தொல்படைக் கல்லா லரிது' என்றார்.

"சிறந்த திதுவென்னச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளம ரென்னும் - பிறங்கழலுள்
ஆருயி ரென்னும் அவிவேட்டார் ஆங்கஃதால்
வீரியரெய் தற்பால வீடு"

நிலைப்படை என்றும் (படையாட்சி  ) களின் நாட்டுப் படையாகவே யிருக்கும். அது மூலப்படையெனவும் படும். மூலம் என்னும் தென்சொல்லின் திரிபே மௌலம் என்னும் வடசொல்லும். மூலப்படையைத் 'தொல்படை' என்று வள்ளுவர் குறிக்கிறார்.
(குறள் 762)
தொல்படையாகிய மூலப்படை பற்றிப் பரிமேலழகர் தெளிவுற விளக்கியுள்ளார். அம்மூலப் படையை அரசன் அவல் பொரி முதலியவற்றைக் கொடுத்துக் காப்பாற்றும் என்பதுகுறிப்பெச்சம்'' என்பது, கோ. வடிவேலு செட்டியாரவர்கள் தெளிவுரை. இப்படையின் சிறப்புப் பற்றி மேலும் தந்துள்ள விளக்கம் வருமாறு: ''மூலப் படை அரசனது முன்னோரைத் தொடங்கிவரும் சேனை. இது மூல பலம் எனப்படும்.

இராமாயணம், இராவணன் இந்திரசித்து மாண்ட பிறகு இராமர் முதலாயினோரை அழித்தொழிக்குமாறு மூலபலச் சேனையை அனுப்பினான் என்று கூறுவதாலும் இஃது அறியப்படும். அம் மூலப்படைக்குச் சிறப்பாவது அரசனிடத்து அவன் முன்னோரைத் தொடங்கிவரும் அன்பும் தான் சிறிதாகிய விடத்தும் பயந்து நீங்காத சௌரியம் (வீரம்) உடைமையுமாம்.

மூலம், பலம் என்ற இரண்டு சொற்களுக்கும் வேர் என்ற பொருளும் உண்டு என்பது இங்கே நினைக்கத் தக்கது.
ஆதிதொட்டு வருதல், மூலம் ஆகி வேராகியிருத்தல், முதலான பண்புகளை உடையது மூலப்படை என்பது புலப்படுகிறது. வேரே அழிந்ததென்றால் பின் வாழ்வு இல்லை என்பது தெளிவு.




ஆதாரம் :
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=197&pno=106
 http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=31&auth_pub_id=32&pno=762
 http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=76&pno=67