பொதுவாக நாயகர் என்றாலே அவர்கள் தெலுங்கர்கள் என்று சிலர் முட்டாள்தனமாக முடிவு செய்து கொள்கிறார்கள் .
அப்படிபார்த்தால் விநாயகர் என்கிறோம் . வெற்றி தரும் தலைவன் தான் விநாயகன் .. அவரும் நாயகர் என்று அழைக்கடுகிராரே . அப்படியெனில் அவர் சொந்த ஊரும் ஆந்திராவா ?
நாயகர் என்னும் வார்த்தை தலைவன் என்னும் பொருளுடையது . தமிழகத்தை பொறுத்த வரையில் பல இன குழுக்கள் ஒரே பட்டங்கள் கொண்டிருக்கும் . ஒரு இனத்தின் தலைவன் , ஒரு பகுதியின் தலைவன், ஒரு படையின் தலைவன் என்று இருப்போருக்கு "நாயகர் ,கௌண்டர் ,தேவர்" என்பது போன்ற இன்னும் பல பட்டங்கள் தருவது வழக்கம் .
விஜயநகர மன்னர்கள் தமிழகத்தில் நுழைவதற்கு முன்பே ராஜ ராஜன் அப்பன் சுந்தர சோழன் காலத்திலே கூட வடக்கு திசை படை தலைவனகாவும் , வடதமிழ்நாட்டு மன்னராகவும் இருந்த வன்னியர் இனத்தை சேர்ந்த சம்புவராயருக்கு "வடதிசை நாயகர் " என்ற பட்டம் உண்டு . சோழர்களின் மிகப்பெரும் படையான வேளைக்கார படைதான் சோழர் குளத்தில் உள்ள மற்ற படைகளை விட அதிக உரிமை பெற்றவர்கள் . இவர்கள் வந்தாலே , மற்ற படை வீரர்கள் ஒதுங்கி கொள்ள வேண்டும் . மன்னரின் நேரடி பாதுகாவலர்கள் இவர்களே . இவர்களின் தலைவனும் "வன்னிய நாயன் (அ) வன்னிய நாயகன் " என்று அழைப்பட்டார் . திருகொவிலூரை ஆண்ட " "சேதிராயர் " பட்டம் கொண்ட மலையமான்களுக்கும் "வன்னிய நாயன் " என்ற பட்டம் உண்டு . இப்படி நாயகர் என்னும் சொல் தலைவனை குறிக்கும் சொல்லாக பல நூற்றாண்டாக ஆயிரம் வருடத்திற்கு மேல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழகத்தில் பீ.டி.லீ .செங்கல்வராய நாயக்கர் , ஆதிகேசவ நாயக்கர் போன்றோர் தமிழ் சாதியான வன்னியர்கள் ... அதோடு சென்னை , காஞ்சி ,வேலூர் போன்ற வட ஆர்க்காடு மாவட்டங்களில் அனைத்திலும் வன்னியர் என்றால் அவர்கள் உடனே "ஓஹோ நாயக்கரா நீங்க " ன்னு கேப்பார்கள் .. நான் படிச்ச காஞ்சியில் படையாட்சி என்ற போது, இதேதான் சொன்னார்கள் ... அட நாயக்கர்னு சொல்லுங்கன்னு சொன்னாங்க. வன்னியர் என்ற சாதி இருந்தும் , பொது பட்டங்களை வைத்துதான் அவர்கள் அழைக்க படுகிறார்கள் . இது போன்ற நாயக்கர் பட்டம் இன்னும் சில சாதிக்கும் உண்டு .. வன்னியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடதமிழகத்தில் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களும் "நாயுடு " என்றுதான் அழைக்கத் படுகிறார்களே தவிர , நாயக்கார் என்றல்ல ...
சென்னையில் இருக்கின்ற பல நாயக்கர் பேரில் இருக்கின்ற தெருக்கள் எல்லாம் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுடையது.. எ.கா.அங்கமுத்து நாயக்கன் தெரு, கோவிந்தப்பன் நாயக்கன் தெரு, ராமா நாயக்கன் தெரு, வீரமுத்து நாயக்கன் தெரு.
அது மட்டும் அல்ல தமிழை தாய்மொழியாக நாயக்கர் சாதி சான்றிதமிழிலும் பள்ளி சான்றிதழிலும் Hindu, Naicker, அதாவது இந்து நாயக்கர் என்றே உள்ளது. இந்த நாயக்கர் எல்லாம் தெலுங்கு நாயக்கர்கள் அல்ல, தமிழை தாய் மொழியாக கொண்ட வன்னிய நாயக்கர்கள்.
நாயக்கர் பட்டம் கொண்ட வன்னியர் குடும்பங்களில் "நாயக்கர்" மற்றும் "நாயகர்" என்று தான் பத்திரங்களில் இருக்கும். நாயக்கர் மற்றும் நாயகர் இரண்டும் ஒரே பொருளை தருவதால் எப்படி போட்டாலும் தவறில்லை. 1978 ஆம் ஆண்டு வரையில் சாதி சான்றிதழ்களில் கூட "இந்து நாயக்கர்" என்று தான் இருக்கும். வன்னியர் என்று கூட இருக்காது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் நீங்க நாயக்கரா? நாயுடுவா? என்று தான் கேட்பார்கள்.
எங்களுக்கு தெரிந்த நாயுடு சமூகத்தவர்கள் எங்களை நாயக்கரே என்று தான் அழைப்பார்கள். நாங்க அவர்களை நாயுடு என்று தான் அழைப்போம்.
நாயகர் என்றால் இறைவன், தலைவன், மன்னன் என்று பொருள். அதன் பொருட்டே விநாயகர் இறைவனுக்கெல்லாம் இறைவன் என்கிற பொருளில் முதல் இறைவன் என்கிற பொருளில் "வி" நாயகர் என்று அழைக்கபடுகிறார். "வி" என்றால் முதல் முதன்மை என்று பொருள். நாயக்கர் என்பது தமிழும் அல்ல தெலுங்கும் அல்ல. அது ஒரு தூய வடசொல், அதாவது சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தில் naayaka என்றால் தலைவன் என்றே பொருள். நாயகர்(naayakar ) என்றாலும் நாயக்கர்(nayagar) என்றாலும் அது வடமொழி சொல் தான். இது சம்ஸ்கிருத சொல். இதற்கு சமமான தமிழ் சொற்கள் தான் இறைவன், தலைவன், மன்னன் என்பது..
ஆகவே ஒரு பட்டத்தை இனி யாராவது குறித்தால் அவர்கள் இன்னவர்தான் என்பதை ஆராயமால் முடிவு செய்ய வேண்டாம் ... இது வடதமிழ்நாட்டவர்களுக்கு பலருக்கு இது நன்றாக தெரியும் . தெற்கே வாழும் நண்பர்களுக்கு இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை என்றால் தெரிந்து கொள்ளவும்