பாமக வின் மதுக்கடை மூடும் போராட்டத்தின் பொது ()17 -07 -2012 ) அன்று திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி பாமக கொடியுடன் தனியாக சென்று மதுக்கடைக்கு பூட்டு போட்ட செய்தி:
`மதுவை ஒழிப்போம்` என ஆளாளுக்கு மேடை போட்டு அறைகூவல்விட்டுக் கொண்டிருக்கும்போது, பள்ளி சீருடையுடன் சென்று மதுபான கடைக்கு பூட்டு போட்டிருக்கிறார் பிரியங்கா. பா.ம.க சார்பில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரனும் அதில் கலந்து கொண்டார். தந்தையுடன் அந்தப் போராட்டத்தைப் பார்க்க வந்த பிரியங்கா, கையில் கட்சி கொடியுடன் சென்று அங்கிருந்த டாஸ்மாக் கடைக்குப் பூட்டு போட்டிருக்கிறார். போராட்டம் நடந்த இடங்களில் போராட்டத்துக்கு மட்டும் அனுமதித்த போலீஸார் டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுபோடுவதைத் தடுத்தனர். மீறியவர்களை கைது செய்தனர். ஆனால் தமிழகத்தில் பிரியங்கா மட்டுமே மதுபான கடைக்கு வெற்றிகரமாக பூட்டுபோட்டிருக்கிறார்.
``எங்க அப்பா நாகேந்திரன், கட்சியில இருக்கறதால எனக்கு சின்ன வயசுலயே கட்சி செயல்பாடுகள் அறிமுகமாகிடுச்சு. மாநாடு, போராட்டம், ஆர்பாட்டம் இதுக்கெல்லாம் அப்பாவோட போயிருக்கேன். விவரம் தெரியாத வயசுல எல்லாமே வேடிக்கையா இருக்கும். ஓரளவுக்கு வளர்ந்த பிறகுதான் எதுக்காக போராட்டம் நடத்துறாங்க, அதனால என்ன நன்மை கிடைக்கும்னு புரிய ஆரம்பிச்சுது. அப்புறம் ஈடுபாட்டோட எல்லாத்துலயும் கலந்துகிட்டேன். எத்தனையோ சமூக அவலங்கள் இருந்தாலும் குடும்ப அமைப்பை சிதைக்கிற முக்கிய வில்லன் மதுதான்.
மது அருந்துறவங்க, அவங்களை மட்டும் அழிச்சுக்கறது இல்லை. அவங்களை சார்ந்து இருக்கற குடும்பத்�தையும் சேர்த்தே அழிச்சிடறாங்க. மதுவால அழிந்த குடும்பங்கள் பத்தி பேப்பர்ல படிக்கிற போதும், நேர்ல பார்க்கிற போதும் இதுக்கு விடிவே இருக்காதான்னு தோணும். அப்போதான் பா.ம.க நடத்துற போராட்டம் பத்தி அப்பா மூலமா கேள்விப்பட்டேன். அதுல பங்கேற்க போன அப்பாவோட நானும் கிளம்பிட்டேன்.
அவங்க எல்லாம் போராட்டத்துல இருக்கும்போது எனக்கு திடீர்னு ஒரு வேகம் வந்துடுச்சு. பூட்டை எடுத்துக்கிட்டு போய் பக்கத்துல இருக்கற டாஸ்மாக் கடையைப் பூட்டிட்டேன். என்ன பண்றது? என்னால அன்னைக்கு ஒருநாளைக்கு மட்டும்தான் டாஸ்மாக் கடையைப் பூட்ட முடிஞ்சது. எல்லா கடைகளும் என்னைக்கு நிரந்தரமா மூடுவிழா காணுதோ, அன்னைக்குத்தாங்க தமிழ்நாட்டுக்குத் திருநாள்!`` என்று தேர்ந்த அரசியல்வாதி போல பேசுகிற பிரியங்கா, கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறார். ப்ளஸ் டூ முடித்துவிட்டு இன்ஜினியரிங் கவுன்சிலுக்காக காத்திருக்கிறார்.
``பள்ளி மாணவியான நான், என் அளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் செயல்படுறேன். இளைஞர் சங்க உறுதி ஏற்பு, மது ஒழிப்பு, புகையிலைக்கு எதிரான ஆர்பாட்டம்னு நிறைய விஷயங்கள்ல அக்கறையோட பங்கெடுத்து இருக்கேன். படிச்சு முடிச்சதும் சமூக மாற்றத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வேன்!`` என்கிற பிரியங்காவின் உறுதியும் சமூக அக்கறையும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை!
``பள்ளி மாணவியான நான், என் அளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் செயல்படுறேன். இளைஞர் சங்க உறுதி ஏற்பு, மது ஒழிப்பு, புகையிலைக்கு எதிரான ஆர்பாட்டம்னு நிறைய விஷயங்கள்ல அக்கறையோட பங்கெடுத்து இருக்கேன். படிச்சு முடிச்சதும் சமூக மாற்றத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வேன்!`` என்கிற பிரியங்காவின் உறுதியும் சமூக அக்கறையும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை!