திரு.அண்ணல் கண்டர் அவர்கள் வன்னியர் புராணம் தெரு கூத்தை நேரில் பார்த்து ,நம்முடன் பகிர்ந்து கொண்ட பதிவு :
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அக்னிகுல க்ஷத்ரியர்களான வன்னியர்களின்
பெருமைமிகு வரலாற்றுக்கு சாட்சியாக நிற்கிறது. இம்மாவட்டத்தில் தான்
வன்னியர் புராண நாடகம் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தெருக்கூத்தை காண்கின்ற அறிய வாய்ப்பு பத்திரிக்கையாளர் திரு.
தமிழ்செல்வன், மூங்கில்துறைப்பட்டு திரு. விஜய் ஆனந்த், தொண்டமானுர் திரு.
சீனிவாசன் ஆகியோரால் எனக்கு கிடைத்தது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வரகூர் கிராமத்தில் நடைபெற்ற
வன்னியர் நாடகத்தில் மூன்றாம் நாள் ( 30 .06 . 2012 ) அன்று இரவு வன்னியன்
பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விடிய விடிய விழித்திருந்து வரலாற்று
சிறப்பு மிக்க அந்த நிகழ்த்துகலையை நேரில் கண்டு பரவசமடைந்தேன்.
வன்னியர் பிறப்பு நிகழ்ச்சியின் கதை சுருக்கம் இது தான். அதாவது, வாதாபி,
அனதாபி என்ற இரண்டு அரக்கர்கள் தங்களை மனிதர்கள் விலங்குகள் உள்ளிட்ட
எதனாலும் தங்களை கொள்ள முடியாத வரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றனர்.
ஆனால் அக்னியால் தங்களை அழிக்க முடியாது என்ற வரத்தை பெற மறந்துவிட்டனர்.
தேவர்கள் மற்றும் மனிதர்களை துன்பப்படுத்திய வாதாபியை அழிக்க சிவன் மற்றும்
விஷ்ணு ஆகியோர் முடிவு செய்தனர் . இதற்காக சம்பு மகரிஷிக்கு அசயந்தி என்ற
பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். புத்திர பேற்றுக்காக சம்பு மகரிஷி யாகம்
செய்ய அந்த வேள்வி தீயில் இருந்து ருத்ர வன்னிய மகாராஜா படைக்கலன்களுடன்
தோன்றினார். அவருக்கு இந்திரன் தனது மகள் மந்திரமாலையை திருமணம் செய்தது
வைக்கிறார். இந்த நிகழ்ச்சி தான் வன்னியர் பிறப்பு அன்று இரவு முழுவதும்
தெருக்கூத்தாக நடிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் நான் எடுத்த நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு...
 |
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வரகூர் கிராமத்தில் நடைபெற்ற ருத்ர வன்னிய நாடக அழைப்பிதழ். |
|
|
 |
வன்னியர் புராணம் தெருக்கூத்தை ஒட்டி காமாட்சி அம்மனுக்காக
அலங்கரிக்கப்பட்ட கரகம். கர்நாடக மாநிலத்தில் 'திகிலர்கள்' என்று
அழைக்கப்படும் வன்னியகுல க்ஷத்ரியர்கள் இதே போன்ற பூ கரகத்தை பயன்படுத்தி
தான் திரௌபதி அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள். |
|
|
 |
தெருக்கூத்து பந்தல் வன்னியர் புராணம் தெருக்கூத்து நடக்கும் போது அதன்
பந்தல் கழிகளில் ராட்டினம் கட்டி ஏற்றி இறக்கும் வகையில்
அமைக்கப்பட்டிருக்கும். யாகத்தீ வளர்க்கும் போது பந்தல் 20 அடி உயரத்திற்கு
தூக்கப்படும். |
 |
பந்தலை உயர்த்துவதற்காக கட்டப்பட்டிருக்கும் ராட்டினம் |
|
 |
ஒப்பனை செய்துகொள்ளும் தெருக்கூத்து கலைஞர் |
 |
தெருக்கூத்து தொடங்குவதற்கு முன்னால் நடைபெறும் Warm up |
 |
விநாயகர் மற்றும் முருகப்பெருமான் அருளோடு நாடகம் தொடங்குதல் |
|
 |
பார்வையாளர்களில் ஒரு பகுதி |
 |
சிவபெருமான் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
ஸ்ரீ விஷ்ணு |
 |
ஒப்பனை கூடத்திலிருந்து அரங்கிற்கு காமாட்சி அம்மன் வரும் வழி எங்கும் விளக்கேற்றி வைக்கப்பட்டிருத்தல் |
|
 |
காமாட்சி அம்மன் அரங்கிற்கு வருதல் |