தில்லையில் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் பிறந்தநாள் விழா கொண்டாடிய தொகுப்பு :
காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த "சேந்த மங்கலத்திற்கு " சென்றதை பற்றி ஏற்க்கனவே நான் எழுதியுள்ளேன் .
அந்த தொகுப்பை காண இங்கே கிளிக்கிடவும் .
காடவராயன் கோட்டை சேந்த மங்கலத்திற்கு ஒரு நேரடி விசிட் :
அந்த கோவில் பூசாரி கோப்பெருஞ்சிங்கன் பிறந்தநாள் "ஆவணி மாதம் திருவோண நட்சத்திரம்" (16-09-2013) என்றும் அன்று , அங்கு விழா நடப்பதாகவும் கூறினார் . ஆனால் அன்று நாங்கள் பாபநாசத்திற்கு நண்பர் திருமணதிற்கு செல்வதால் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை ..
அதனால் பாபநாசத்தில் இருது வரும்போது , தில்லையில் உள்ள கொப்பெருசிங்கன் சிலைக்கு மரியாதை செய்துவிட்டு செல்வோம் என்று முடிவு செய்தோம் .
அதன் படி , "சோழர்க்கன்றி சூட்டோம் முடி " என்றுரைத்த சோழனார்கள் குல நாயகன் வீற்றிருக்கும் தில்லைக்கு பயணம் செய்தோம் .
நேராக சிதம்பரம் முன்னாள் chairman "திரு.V.M.S.சந்திர பாண்டியன் படையாண்டவர் "வீட்டிற்கு சென்றோம் . அவரிடம் விஷயத்தை சொல்லி அவரையும் கோவிலுக்கு அழைத்து சென்றோம் .
தில்லை நடராஜர் கோவிலுக்கு சென்றதுமே , கோப்பெருஞ்சிங்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் .
இந்த புகைப்படத்தில் சிவகிரியில் கிளை ஜமீனான தென்மலை ஜமீன்தார் "வீரபாண்டிய வன்னியனார் ", முன்னாள் chairman "திரு.V.M.S.சந்திர பாண்டியன் படையாண்டவர் " , அண்ணல் கண்டர் , ராஜேந்திரன் நாயகர் ஆகியோர் உள்ளனர்
முதலாம் கோப்பெருஞ்சிங்கன் :
இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் :
மாலை அணிவித்த பிறகு கோவிலை சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்ய சென்றோம் .
( தில்லையில் உள்ள கழுமரம் ஏற்றும் சிற்பம் ... எதிரி நாட்டு மன்னர்களை கழுமரம் ஏற்றியதை விளக்கும் சிற்பம் இது . அதாவது கொலை செய்வது ..சிலையாக செதுக்க பட்டுள்ளதை காணலாம் .. )
தில்லையில்
1. சிற்றம்பலம் 2. பொன்னம்பலம் 3. பேரம்பலம்
4. நிருத்தசபை 5. இராசசபை என ஐந்து பெருமன்றங்கள் உள்ளன.
இதில் ராஜசபை என்பது ஆயிரக்கால் மண்டபமாகும்.
சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு பஞ்சாக்கரப் படியில் அபிஷேகமும் இம்மண்டபத்தில் முடிசூட்டு விழாவும் நடைபெற்று வந்தன வருகின்றது .
இம்முடிசூட்டினைத் தில்லைவாழ் அந்தணர்களே செய்து வருகின்றனர் .
அங்குள்ள ஓவியங்கள் இவை .
சோழர்களின் புலிக்கொடி
ஹிரண்யவர்ம சோழனுக்கு தில்லையில் சோழ மன்னனாக முடி சூட்டும் புகைப்படம் ... அழியும் தருவாயில் உள்ளது ... வியாக்ரபாத முனிவர் மன்னனுக்கு முடி சூடுகிறார் . ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவர் வணங்கியபடி நிற்கிறார்.
(சோழனார்களின் கட்டளை தீட்சிதர் அவர்களுடன் நமது முரளி நாயகர் நிற்கிறார் )
இவர்தான் இன்றைய பிச்சாவரம் சோழனார்களின் கட்டளை தீட்சிதர் ... எப்போதும் இவர் சோழனார் குடும்பத்திற்கே சேவை செய்ய வேண்டும் .
இது காலம் காலமாக நடந்து வரும் விதி ........இன்றும் நடக்கிறது