Wednesday, October 30, 2013

ஓய்மான் நல்லியகோடன் கிடங்கல் கோட்டைக்கு சுற்று பயணம் :


சமீபத்தில் நானும் , அண்ணல் கண்டர் அண்ணன் ,முரளி நாயகர் அண்ணன் , ஸ்ரீவிஜய் கண்டர் , கார்த்திக் நாயகர் ,தொழில் அதிபர் திரு. ராஜேந்திர நாயகர் , நாமக்கல் கவின் ஆகியோர் பாபநாசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது  , முரளி நாயகர் அண்ணன் அவர்கள் எங்களிடம் ,

"நாம் திண்டிவனம் வழியாகதானே செல்கிறோம் . ஏன் நாம் கிடங்கல் கோட்டை எந்த நிலைமையில் இருக்கிறது என்று பார்த்து விட்டு செல்ல கூடாது . நான் பத்து வருடம் முன்பு வரும்போது சில இடிந்து பகுதிகளை கண்டேன் .. இப்போது அதுவாது மிச்சம் இருக்கிறதா என்று தெரியவில்லை . அதையும் பார்த்துவிட்டு செல்வோமா ? "

என்றார் .

சரி என்று திண்டிவனம் நோக்கி சென்றோம் . திண்டிவனம் பேருந்து நிலையமே ,  கோட்டை இருந்த பகுதிதான் .. இங்குதான் சங்ககால மன்னன் , கடையேழு வள்ளல்  நல்லியகோடன் அவர்கள் ஆட்சி புரிந்தார் . இவரின் வள்ளல் குணம் கடை ஏழு வள்ளல்களை விட பெரியது என்பார்கள்

இந்த கோட்டை இரண்டாயிரம்  ஆண்டு பழமையானது .

கிடங்கல் கோட்டை யின் சில கர்களாவது மிஞ்சிருந்த நிலையில் , இப்போது அவையும் சுத்தமாக அழிக்க பட்டு , திண்டிவனம் பகுதியில் பிழைக்க வந்தவர்கள் வீடு கட்டி தங்கியுள்ளனர் .

மூவேந்தரை விடவும் பெருமை கொண்ட , கடை ஏழு வள்ளல்களை விட பெருமை மிக்க ஓய்மான் அரசனின் அடையாளமே இன்று இல்லை .. இந்த மக்களுக்கும், இந்த முட்டாள்களை ஆட்சி செய்யும் முட்டாள் அரசாங்கத்திற்கும் அவர் பெருமை தெரியவில்லை . பாதுகாக்காமல் விட்டு விட்டார்கள் ..

நாங்கள் அங்கு சென்ற பொது திரு அன்ப நாயக ஈஸ்வரர் கோவில் அங்கு இருந்தது .. அதுவே கோட்டை இருந்த இடமாக கருதபடுகிறது ..




திரு அன்ப நாயக ஈஸ்வரர் கோவில்





அங்குள்ள மக்களிடம் நாங்கள் விசாரித்தபோது , இருந்த கற்களை கூட பலர் தூக்கி கொண்டு சென்று வீடு உபயோகத்திற்கு பயன்படுத்தி கொண்டனர் என்றார் ஒரு பிராமணர் ..

இந்த நல்லியகோடனின் பெருமையை பற்றி சிறுபாணாற்று படை என்னும் நூலில், நல்லூர் நத்தனார் அவர்கள் புகழ்ந்து பாடியுள்ளார் . அத்தகைய பெருமை மிக்க இவரின் அடையாளங்களை யாரும் பாதுக்காக்க வில்லை என்றார் அந்த பிராமணர் . அந்த பகுதியில் இன்னும் சிலருக்கு நல்லியன் , நல்லியகோடன் போன்ற பெயர்கள் வைப்பது வழக்கமாம் ..

கோட்டையை சுற்றியிருந்த அகழியை காண முடிந்தது .. அது முழுக்க வெங்காய தாமரை அடர்ந்து இருந்தன .. ஊர் மக்கள் சிலர்  , இங்கு அழியாமல் இருப்பது இந்த அகழி ஒன்றுதான் , மற்றவை அனைத்தும் அழிந்து விட்டது என்றனர் ...

 


இவர் ஓய்மான் மன்னர் .. இதே ஓய்மான் அரசனே , பிற்கால சோழர் ஆட்சியில் பெரும் வலிமையோடு ஆட்சி செய்த சம்புவராய மன்னர்களும் .


கோட்டையின் அகழி பகுதியில் நாங்கள் .




கிராம அலுவலகம் - கிடங்கல் கோட்டை


குப்பனுக்கும் சுப்பனுக்கும் மணிமண்டபம் கட்டும் இந்த அரசாங்கம் , இந்த தமிழ் வள்ளலுக்கு ஒரு மணி மண்டபமாவது கட்டுமா ?