Wednesday, October 10, 2012

பாட்டாளி வர்க்கமாய் , ஒட்டு போடும் சாதியாகவே இருக்கிறோம் ...

நாட்டை ஆண்ட இனம் ,நாட்டுக்காக போர்க்களத்தில் உயிர்நீத்த இனம் , 32 விருதுகளும் எண்ணிலடங்கா பட்டங்களும் பெற்ற பெருமை வாய்ந்த இனம் என்ற பெருமைகள் எல்லாம் இருந்தென்ன பயன் ...

இன்னும் பாட்டாளி வர்க்கமாய் , ஒட்டு போடும் சாதியாகவே இருக்கிறோம் ...

சென்னை மாகாணத்தின் முதல் தேர்தலிலேயே , சுதந்திரம் வாங்கி தந்த கட்சி என்று சொன்ன காங்கிரசை எதிர்த்து நின்று ராமசாமி படையாட்சியும், மாணிக்க வேல் நாயக்கரும் த
னித்து நின்று வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு களில் மட்டும் 26 சட்டமன்ற தொகுதிகளையும், 7 நாடாளுமன்ற தொகுதிகளையும் வென்றார்கள் ,.. அப்போது இருந்த மொத்த தொகுதிகளே 125 தான்

வன்னியர் அதிகம் வாழும் தருமபுரி, சேலம், தஞ்சை போன்ற இடத்தில் அவர்கள் நிக்காமல் போனது குறிப்பிடத்தக்கது .....

இன்றைய நிலைமை என்ன ?

அப்போது இந்தியா முழுக்க ஆட்சி அமைத்த காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது பெரும்பான்மை இல்லாததால் .. இதனால் காமராசரும் பெரியாரும் பச்சை தமிழர் ஆட்சி வேண்டுமென்று சொல்லு , ராமசாமியை கட்சி கலைக்க வைத்து , காங்கிரசில் சேர வைத்தார் ... அன்றோடு நமது எழுச்சி முடிவு பெற்றது ..

அய்யா திரு ராமசாமி படையாட்சி அவர்கள் கட்சியை கலைக்காமல் இருந்திருந்தால், அடுத்த தேர்தலிலேயே பெரிய மாற்றான் ஏற்ப்பட்டிருக்கும். நமது இனம் இன்னும் போராட தேவை இருந்திருக்காது ....

ஆனால் நமது உதவியின் மூலம் முதன் முதலில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் வன்னியர்களுக்கு செய்த கொடுமை என்ன தெரியுமா ?

வன்னியர்களிடம் பிரிவினைவாதத்தை தூன்றி இருக்கும் ஒற்றுமையைதான் குலைத்தது .
.
1956 இல் நெல்லூர் போன்ற பகுதிகளை ஆந்திராவிற்கும், கோலார் போன்ற பகுதிகளை கர்நாடாகவிர்க்கும் தாரை வார்த்து நமது பெரும்பான்மையை குறைத்தார்கள் ...

பிளவுப்பட்ட வன்னியர்கள் இன்றளவும் ஆந்திராவில் அக்னிகுல சத்திரியர் என்றும், கர்நாடகாவில் சம்பு குல சத்ரியர் என்றும் வாழ்கிறார்கள்

இதுமட்டுமல்லாது வன்னியர்களின் பல தொகுதிகளையும், ஊராட்சிகளையும் தனித் தொகுதிகளாக்கி வன்னியர் ஆளுமையை குறைத்தார்கள் .

தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டம் தருமபுரி மற்றும் விழுப்புரம் தான் .... தமிழ்நாட்டில் அதிகம் குடிசை உள்ள மாவட்டங்கள் வடக்கே வன்னியர் வாழும் ஏழு மாவட்டங்கள்தான் .... 

எந்த வித முன்னேற்றமும் இன்றி, ஓட்டுகளை மட்டும் வாங்கிகொண்டு திராவிட கட்சிகள் ஏமாற்றி கொண்டிருக்கிரார்கள் ..
இப்படி தொடர்ந்து வன்னியர்களின் முன்னிரிமையை பறித்தார்கள் ... வீரத்திற்கு மதிப்பிருந்த காலத்தில் உயர்ந்திருந்த சமுதாயம், அரசியல் சூழ்ச்சி சாதுரியம் , என்ற காலம் வந்த போது, வீழ்ந்து போனது :(