தமிழ்நாட்டின் பல்வேறிடங்களிலுமுள்ள வன்னியர் விருத்தாசலத்திலுள்ள மடம் ஒன்றுக்குக் கொடுத்த தானங்களைப் பற்றிக் கூறும் இப் பட்டயம் முன் வன்னியர் புராணம் பதிப்பிக்கப்பெற்றபோது அதோடு அச்சேற்றப்பட்டது. இது வரை கிடைத்த. வன்னியர் பற்றிக் குறிப்பிடும் பட்டயங்களில் இது ஒன்றுமே வன்னியரின் தோற்றம் பற்றிய கதைகளைக் கொண்டுள்ளது.
விஜயநகர மன்னரின் விருதுகள் பட்டயத்தின் தொடக்கத்தில் வருகின்றன. இருபத்து நாலு கோஷ்டத்து வன்னியராயர் கண்டன் என்பதும் விஜய நகர மன்னரின் விருதுகளுள் ஒன்றென்பதை இப்பட்டயம் அறியத் தருகின்றது. தொண்டை மண்டலம் முற்காலத்தில் இருபத்துநாலு கோட்டங்களைக் கொண்டிருந்தது. தொண்டை மண்டலமே வன்னியரின் ஆதி இருப்பிடம் என்ற கருத்துக்கு இப் பட்டயத்தில் வரும் மொழித் தொடர் ஓரளவுக்கு ஆதாரமாயுள்ளது.
பட்டயம் வன்னியரை வீரபண்ணாடர் என வர்ணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிலை எழுபதும் நாடு பலவிமனுக்கரசு பண்ணாடு எனவும், மேவரு மேருவொத்த வீரபண்ணாடர் வில்லைத் தேவரே கூறல் வேண்டும். திசை முகனாதியாய மூவருங்கூறல் வேண்டும்...... எனவும் பண்ணாடர் திண்ணமுறு வன்னி மன்னர் எனவும் வன்னியர் பற்றிக் குடுப்பிடுகின்றது. பண்ணாடு என்னும் பிரதேசத்தை வன்னியர் என்ற குறுநில மன்னர் ஆண்டிருத்தல் கூடும்.
இப்பட்டயத்தி;ன்படி இராக்கதரின் கொடுமைகளைப் பொறுக்க முடியாது தேவர்களும், முனிவர்களும் மகேஸ்வரினிடஞ் சென்று முறையிட்டபோது மகேஸ்வரன் சம்பு, அகத்தியர், வசிட்டர் ஆகிய மூவரையுங் கொண்டு விஸ்வயாகத்தைச் செய்வித்தான். பார்வதி கழுத்திலிருந்த செங்கழுநீர் மாலையை சம்புமாமுனிவன் சிவனாரிடமிருந்து பெற்று அதை யாக அக்கினியிலெ போட்டதும் வில், வாள் முதலிய ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம் எழில்மிக்க வன்னியர், கிருஷ்ண வன்னியர். உருத்திர வன்னியர் முதலானோர் தோன்றி இராக்கதரை அடக்கியதாக இப்பட்டயம் கூறுகின்றது.
வன்னியரின் தோற்றம் பற்றி இப்பட்டயம் கூறுவன புராணக் கதைகளையே தழுவியுள்ளன. சிலை எழுபது, வன்னியர் புராணம் முதலிய நூல்களும் இவ்வாறான கதைகளை ஆதாரமாகக் கொண்டேவன்னியரின் தோற்றத்தைப் பற்றிக் கூறுகின்றன.
வன்னியர் சம்புகுலத்தவர் என்ற கருத்து காலப்போக்கில் வலுப்பெற்று சமூகத்திற் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தமையைச் சிலை எழுபது முதலிய நூல்கள் உணர்த்தும். வன்னியர் சம்புமாமுனிவர் வேட்ட வேள்வியினாலே வன்னியர் தோன்றினர் எனப் பொருற்படுமாறு வீரசம்பு முனி வேள்வி விளங்க வரு முடி வேந்தர் எனச் சிலை எழுபது கூறுகின்றது. அதே போல,
‘பங்குனித் திங்களுத் திரந் தன்னில்
பரமன் முக்கணழல் விழியில்
துங்கமா வேர்வை தோன்றிடக் கரத்திற்
தோய்ந்து செங்கழுநீரின் மலரைப்
பொங்கமா மகத்திலா குதியியற்றிப்
புனிதனுக்குப் வகையீந்தார்.
(வ)ங்கண வீர வன்னிய பூமன்னர் பரி
மீது தோன்றினனே’
எனவும்.
‘சம்பு மாதவஞ் செய்வேள்வி தன்னிலுதித் தாயிந்த
அம்புவி தனிலே வேத சம்புவின் மரபுமானாய்
உம்பரர் களிக்கமான வுதித்த வாதாவி சூரன்
கம்பித மடக்கவென்று கதிரொளி முடியாயென்றார்.’
எனவும் வன்னியர் புராணமும் கூறுகின்றது.
வன்னியர் மடலாய தர்மஸாஸனப் பட்டயம்
(வன்னியர் புராணத்திலுள்ளபடி)
ஸ்வஸ்தி ஸ்ரீ ஸ்ரீமன் மகாமண்டலேசுரன் அரியராய விபாடன் பாஷைக்குத் தப்புராய கண்டன் மூவராயகண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் இருபத்து நாலு கோஷ்டத்து வன்னிராய கண்டன் கொங்குதேசம் குரும்பறுத்து அழியாப் பிரபுடன் கெடி வன்னிய மிண்;டன் நவகோஷ்டத்து வன்னியராய கோலாகல பிரபுடன் வடவாசற் காவலன் இளவரசு மணவாளன் கண்டியப் பிரதாபன் கட்டாரி வல்லபன் தானகுல சீலன் காளிகணங்கள் கைகூப்பு மணவாளன் திங்கள் மும்மாரி பெய்து தேன்பாயும் வளநாடன் கங்காகுலத்தீபன் பூலோக தேவேந்திரன் வேந்தர்குல பஞ்சாbர தீபன் சிவசமய விஷ்ணு சமய பரிபாலன் சிவபூஜாதுரத்திரன் இராஜமன்னிய இராஜஸ்ரீ ஆனகொந்தி திருவேங்கடபதி தேவமகாராயர் இவர்கள் பிரிதி விராஜிய பரிபாலனம் பண்ணியருளா நின்ற சாலிவாகன சகாப்தம் இதின் மேல் செல்லா நின்ற பிலவ வருஷம் தை மீ இருபதாந்தேதி சோமவாரம் பூச நbத்திரம் பாலவகரணம பூர்வ பbமும் கூடிய சுபதினத்தில் இராஜாதிராஜ வளநாடு வெண்ணயூர் நாடு பருவூர் கூத்தத் தனியூர் காசிக்கு மேலாய் விளங்கும் விருத்தகாசி விதர்க்கணன் விபசித்து கலிங்கன் அஞ்சுவர்ணன் முதலான பேருக்கு திருநடனம் புரிந்தருளிய் தேவஸ்தலம் பூருவ கர்ப்பக வன்னி மரத்தில் செங்கழுநீர் புஷ்பித்த திவ்விய Nbத்திரம், சகல லோகங்களும் வெள்ளங் கொண்ட போது பிரம்மதேவன் சில மலைகளைப் படைத்தான். அந்த மலைக்கு இடமில்லாமல் எங்கும் பழ மலையாகத் தானே நிரம்பி நிற்க நான் சிருஷ்டித்த மலைக்கு இடமில்லாமல் போனதேதென்று கோபங்கொண்டான். அந்தக் கோபாக்கினி அவனையும் சுட்டு வீட்டையும் சுட்டது. அவன் தேவ வருஷத்தில் ஒன்பது வருஷம் விருத்தாசல ஈஸ்வரனை நோக்கித் தபசு பண்ண அவர் பிரசன்னமாகி நீ விஷ்ணுவுடைய பிள்ளையான படியினாலே பொறுத்தோமென்று பிரமன் அதிகாரத்தைக் கொடுத்தார். ஐந்து லிங்கத்துக்கு முதன்மையான விருந்த கிரி லிங்கம் ஒரு நாழிகை விருத்த காசியில் வாசம் பண்ணின பேர்கள் சதா சிவ சொருபம் அடைவார்களென்ற வேதத்தில் முறையிடுகின்றது. அப்படிக்கு விசேஷம் பொருந்திய Nbத்திரத்தில் சகல மான ஜாதிக்கு மடமும் நந்தவனமும் தருமம் விளங்கி வருகிறபடியினாலே தம்முடைய மரபு வன்னிய வீரபண்ணாடர் வம்சம் விளங்க வேணுமென்று கொள்காணியாக கோவில் நிலத்தில் கீழ்வீதியில் மேல்சரகில் ஐயனார் கோவிலுக்குத் தெற்கு தெற்கு வீதிக்கு வடக்கு - அடி 75 கிழக்கு மேற்கு அடி அடிக்குப் பணம் ரூபா வீதம் 1402 பணம் ரூபா கொடுத்து இரண்டு சிலராசாதனம் நிறைத்து தாம்பிரசாதனம் உண்டுபண்ணி சேந்தமங்கலம் அண்ணாமலைக் குருக்களுக்கு தத்தம் பண்ணிக் கொடுத்தபடியினாலே வன்னியர் பிற பு வளர்ப்பு எப்படியென்றால் ஆதியில் பிரம்மாவும் விஷ்ணுவும் ருத்திரனும் தேவர்களும் ரிஷிகளும்கூடி கைலாசத்துக்குப் போன இடத்தில் சுவாமிநீங்கள் நம்மிடத்தில்வந்த காரியம் யாதென்று கேட்க சர்வரbகர் ராbத உபத்திரவம் பொறுக்க முடியவில்லையென்று தேவரீh பாதத்துக்கு விண்ணப்பம் செய்ய வந்தோமென்ன நல்லது அவனை ஜெயிக்க வேணுமென்று பொதியமாமுனி சம்புமாமுனி வதிஷ்டமாமுனி மூன்று பேரையும் அழைப்பித்து விசுவயாகம் பண்ணுமளவில் அதிற் பார்வதி கழுத்திலிருந்த செங்கழுநீர் மாலையை வாங்கி அக்கினியில் ஓமம் பண்ணுமளவில் சிலையும் அம்பும் உத்தண்ட வார்த்தையும் வாராம ரிஷபக் கொடியும் புலிக் கொடியும் பஞ்ச வர்ணக் கொடியும் சாம்பிராணிக் கலசமும்பகல் தீவட்டியும் பச்சைப் புரவியம் 18 விருதுடனே சம்புமாமுனி யாகத்தில் ருத்திர வன்னியர் தோன்ற அவர் வயிற்றில் ஐவர் தோன்ற அவருடனே 3 5 4 9 வில்லாளிகள் தோன்ற இவர்களுக்குப் பேருங் கொடுத்து ராbதரைச் சங்கரித்து வந்தவரான படியினாலே ஏகாம்பர் நாட்டுக்குடையவர் பாண்டியன் பரி பிடிக்க பரியேறும் பெருமாளென்று வாதாவியைச் செயித்தவர் கோத்திரமாகிய கிருஷ்ண வன்னியர், சம்புவன்னியர், பிரம வன்னியர், இந்திர வன்னியர், கெங்கா வன்னிய ரென்றும் பேருங்கொடுத்து கொன்றை மாலையுந் தரிந்து புலிக் கொடி வேந்தன் வன்னிய முரசு 39 தில் ஒருவராக தேவர் ரிஷிகளுக்கும் சத்துருவை ஜயம்பண்ணின படியினாலேயும் துர்க்கை பாளையம் போட்ட போது பாலமுதில்லாமல் ஈஸ்பரி பஞ்சலோகத்தையும் ஒரு தாழியாக்கி பாலமுதம் விருந்து பண்ணின சமுத்திராதேவி, இந்திராணி, கோபால தேவி மூன்று பேரும் சந்தோஷித்து வீர சிங்காசனங் கொடுத்து இந்திரன் பெண் மந்திர மாலையை ருத்திர வன்னியருக்கு விவாகம் பண்ணிப் பட்;டந் தரித்து மந்திர வாளும் பிடித்து இயமனை வென்றவர் சோழன் சினேகிதர் ரbpக்கும் உத்தம தேவர் எங்கள் நல்லப்ப காலாக்க தோழனார் உடையார் பண்டாரத்தார் அவர்களும் அரியலு}ர் மானங்காத்த மழவராய நயினார் அவர்களும் அரசுநிலை பெற்றவர்கள், சேரன் சோழன், பாண்டியன் தேசத்திலுள்ள வன்னியரானவர்கள் வருஷந்திரம் மடதருமத்திற்கு கட்டளையிட்டது என்னவென்றால் பல்ல(h)க்கு குதிரை யுடையவர்களுக்கு பணம் 10 - நாட்டுத் தினத்துக்குப் பணம் 5 - சேர்வை மணியத்துக்கு பணம்; 3. தலக் கட்டுக்கு பணம் 1 - குரு தெbணை பணம் 1 - கலியாணத்துக்கு மாப்பிளை வீடு பணம் 1- பெண் வீடு பணம் 1 - குற்றா குற்றம் தீர்த்த அபராத பணமும் சுபா சுபங்களுக்கும் கொடுத்து வருமோகவும்.
இந்தத் தருமத்துக்கு வாக்குச் சகாயம் சரீர சகாயம் அர்த்த சகாயம் பண்ணின பேர்கள் குபேர செல்வமும் இந்திர பதவியும் விபசித்து ரிஷி பதவியும் அடைவார்கள். இதற்கு விகாரம் பண்ணின பேர்கள் கெங்;கைக் கரையில் பஞ்ச பாதகமும் காராம் பசுவையும் மாதா பிதா குருவையும் கொன்ற தோஷத்திற் போவார்கள் - பழமலையார் பெரிய நாயகி அம்மன்றுணை.