Sunday, March 24, 2013

சேதுபதி (அ ) சேது காவலர் பட்டம் கொண்ட வன்னியர்கள் :


சேதுகாவலர் என்னும் பட்டம் "பொறையர் " களுக்கும் இருந்துள்ளது என்பது செவலூர்ச் செப்பு பட்டயத்தால் புலனாகிறது . பொறையர் என்பார் சேர மன்னர் கிளைவழியினர் .

அவர்களில் ஒரு பிரிவினர் பின்னாளில் தமிழ்நாட்டின் கீழைக்கடற்கரை ஓரப்பகுதிகளில் ("திருத்துறைப்பூண்டி ") அதிகாரம் பெற்றவர்களாக இருந்துள்ளனர் . ஆதலால் இவர்களுக்கு "சேதுகாவலர் (அ ) சேதுபதி " பட்டம் உள்ளது .

இவர்கள் வன்னியர்கள் ஆவர் .

ஆதாரம் :
========
நூல் : தொன்மைத் தமிழும் தொன்மைத் தமிழரும்
பக்கம் : 118
தலைப்பு : இலங்கையின் வடபகுதியில் வன்னியர் ஆட்சி

வன்னியர்களை பற்றிய சீனாபுரம் பட்டயம் :


இந்த செப்பு பட்டயத்தில் வன்னியர் விருது

"வாடாத மாலையும் வர்ணத் தடுக்கும் பெற்றவரான ,
பூணூல் மார்பும் புலிகொடிப் பதாகையும் பெற்ற பெரியோர்களான ,
சேரநாட்டுக் கதிபதியான , பயனாட்டுக் கதிபதியான (வயநாடு )"

என்று பேசப்பட்டுள்ளது .


நூல் : வன்னியர் மாட்சி 
பக்கம் : 149

Friday, March 22, 2013

கேரள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள வன்னியர்களை பற்றிய ஓலைசுவடியில் "அரியலூர்ப் பள்ளி வில்லிப் படையாண்டவர் கதை " பற்றிய செய்தி :


இதில் வழக்கம் போல வன்னியர் புராணத்தை பற்றிய செய்திகளை சொல்லிவிட்டு பிறகு சில சுவையான செய்திகளை அந்த ஆவணம் கூறுகிறது.

அதாவது வன்னியர்கள் சிலர் சந்திரகிரியில் இருந்து காஞ்சிபுரம் சென்றதையும் , அங்கு காஞ்சிபுர மன்னர் தங்களிடம் பெண் கேட்டதால் அவரை சிரத்சேதம் செய்துவிட்டு வேலூருக்கு சென்று தங்கிய போது ,

அப்பொழுது அங்கு ஆட்சி செய்த மன்னர் இவர்களுக்கு

“சந்திரபதி பள்ளி வில்லி படையாண்டவர்கள் ”
என்றும்
“அரியகுல மழுவெறி ராயர் ”

எனவும் விருதுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது . சில காலம் அங்கு வாழ்ந்தனர் .

பிறகு பாண்டிய நாடு சென்று , பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியனுக்கு சேவை செய்து வாழும் நாளில் , அப்பகுதியில் தொல்லை தந்து வந்த ஒரு புலியைக் கொன்று , மற்றொரு புலியை வளைத்து பிடித்து வீரச் செயல் புரிந்த செய்தி அந்த சுவடியில் உள்ளது . அங்கு பண்ணை அமைத்து , புதிய நகரம் ஏற்ப்படுத்தி அதில் விநாயகர் கோவில் உண்டாக்கி மற்றவர் துதிக்கும் நிலையில் வாழ்ந்து மேற்கூறப்பெற்ற தென்காசி பாண்டியனுக்கு உதவி வந்திருக்கின்றனர் .

புலியைக் கொன்றதால் பெற்ற விருது :
=======================================
பாண்டிய நாட்டில் தொல்லை தந்த புலிகளை கொன்றதால் இவர்களுக்கு

மகாபெரும் சேனை பள்ளி வில்லி படையாண்ட பராக்கிரமர் ”

என்ற விருதை பாண்டிய மன்னன் வழங்கி சிறப்பித்துள்ளார் . மேலும்

மீன்கொடி , கானக் கவரி , கனகத் தண்டிகை , வெற்றி சங்கம் (சங்கு ) ஆகிய வரிசைகள கொடுத்ததோடு  தேவநல்லூர் மற்றும் கயத்தாறு ஆகிய சீமைகளை காவல் காத்து வரும்படியும் உரைத்திருக்கிறார் .

காசி விசுவநாதர் கோவிலில் மடம் கட்டுதல் :
=============================================

அப்போது செகமெல்லாம் புகழும் , உண்மை உபதேசம் செய்த சற்குருவாம் தேசிகருக்கு (காஞ்சி சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் ) தென்காசி காசி விசுவலிங்கேசர் ஆலயத்ததில் மடாலயம் ஒன்று ஏற்ப்படுத்தி தந்துள்ளனர்.

இந்த சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் வன்னியர்களின் குருவாக காஞ்சியில் வாழ்ந்து , பின்பு பாண்டிய நாட்டில் தென்காசியில் வாழ்ந்த செய்தி வரகுண பாண்டிய வன்னியர் வெளியிட்ட தென்காசி செப்பேட்டின் வாயிலாகத் தெரிகிறது . ஒலைசுவடியின் மூலம் முதன்முதலாக இச்சுவடியில் தான் காண முடிகிறது .

குலசேகர பாண்டியனின் பகைவரை வெல்லுதல் :
==============================================

பிறகு வள்ளியூரில் ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் பகைவரான மன்னன் , மதிப்பன் என்ற இருவரை வதைத்து அவர்களின் தலைகளை கொய்து , மன்னன் முன்பாக கொண்டு சென்று வைத்திருக்கின்றனர் .

மன்னன் மகிழ்ந்து பலவித வரிசைகளை இவர்களுக்கு அளித்திருக்கிறார் .

ஆழ்வார்குறிச்சியில் ஆட்சி புரிதல் :
===============================
இறுதியாக தென்காசிக்கு தெற்க்கே உள்ள ஆழ்வார் குறிச்சி என்னும் திருத்தலத்துக்கு வந்து தங்கி ஆட்சி புரிந்துள்ளனர் . இச்செய்தியை ஓலையில்

“ஆள்வார் குறிச்சியதி பண்ணையம் பதியாள் வீரர்களான வன்னிய குலத்தோர் பொன்போலுலகில் பொலிந்து வாழ்ந்துயர்ந்தோராகிய சந்திரபதி அரியலூர் பள்ளி வில்லி படையாண்டவர்கள் ”

என்று குறிப்பிட்டுள்ளது .

வன்னியர்களின் அறக்கொடைகளையும் புலவர்களை போற்றியமையும் புகழ்ந்து கூறும் “திருக்கை வளம் ” என்னும் நூல் பன்னீராயிரம் பண்ணையை ஆட்சி செய்து வந்த வன்னிய பாளையக்காரர் பற்றி கூறும்போது

“-------------- மெச்சு பண்ணை
பன்னிரண்டாயிரத்தோன் மேற்பகருங் கட்டியகொத்துக்
கின்ன லிலாமற் சொர்ன மிசையுங் கை

என்பது அதிலுள்ள பாடல் வரிகள் .

அதாவது பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு வந்த அரசன் மீது 'கட்டிய கொத்து ' என்னும் நூலை பாடிய புலவருக்கு மன்னர் தங்கங்களை பரிசளித்தான் என்பது பொருள் .

திருக்கை வள உரையாசிரியர் பிரசங்க பூஷணம் குக ஸ்ரீ.பு.பா.ரத்தினசபாபதி நாயகர் அவர்கள்

"பாண்டிய நாட்டில் பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு கொண்டிருந்த அக்னி வம்ச சத்திரிய வன்னிய மகாராஜாவாகிய, கட்டிய நயினார் வம்சத்திலவதரித்து , காரைக்கால் அக்னி வம்ச சத்திரிய மகா சபையில் அக்ராசனாதிபதியாயிருந்த ஆ.வை.தசவீர பூபதி நாயகர்வர்களால் கடந்த பவள ஆண்டு (கி .பி . 1873 ) பங்குனி மாதம் அச்சிட்டு முதன்முதலில் திருக்கை வளம் வெளிவந்தது "

என்று எழுதிருக்கிறார் .

தென்காசி வன்னியர் செப்பு பட்டயமும் இவோலைச் சுவடியும் :
=====================================================================

தமிழ்நாட்டரசு தொல்லியல் ஆய்வாளர் திரு.நடன காசிநாதன் அவர்கள் எழுதிய வன்னியர் என்னும் நூலில் செப்பு பட்டயம் எண் 21 ஆக தென்காசி திரு.முனிசாமி நாயுடுவிடமிருந்து தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆயுவுத்துறை வாங்கி , குற்றாலம் அகழ்வைப்பகத்தில் வைத்து பாதுக்காக்கபெரும் செப்பேட்டில் கூறியிருக்கிறவாறே, இந்த ஒலைசுவடியிலும் வன்னியரின் பிறப்பும், அசுரர்களை வதைத்து இலங்கை சென்று அரசனை வென்று ஐந்து கன்னிகளை , ஐந்து வன்னிய குமாரர்கள் மணந்ததும் , பின்பு அவர்கள் எந்தெந்த பகுதியில் ஆட்சி செலுத்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது .

ஆதலால் இவ்வோலைச்சுவடி 18-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் .

ஆனால் இவ்வோலைச்சுவடியில் , செப்பு பட்டயத்தில் கூறப்படாத சில அரிய செய்துகளும் உள்ளன .

மேலே கூறப்பட்டுள்ள வரகுணராம பாண்டிய வன்னியனார் செப்புப்பட்டயத்தில் (வன்னியர் , செப்புபட்டயம் எண் - 9) மன்னர் விருதுகளில் ஒன்றாக “சந்திரபதி அரசுபதி வில்லி வன்னியகுலாதிபதி ” என்பதும் இவ்வோலைச் சுவடியில் காணப்பெறும் விருதும் ஒன்று போல உள்ளன .

ஆகவே , இவ்வோலைச் சுவடியின் கூற்றால் , பன்னீராயிர பண்ணையை ஆண்டு வந்த கட்டிய நயினார் வம்சத்தினர் , அரியலூர் மழவராய நயினார் வழி வந்தவர்கள் என்று உணரமுடிகிறது .

ஆதாரம் :
========

நூல் :பெரம்பலூர் மாவட்ட தடயங்கள்
பக்கம் :43