குடிவழி கணக்கு
குடிவழி கணக்கு எடுக்கவேண்டும் என்றும், சமூக நீதி நிலைநாட்டவேண்டும் என்றும் இன்று பல்வேறு சமுதாய அமைப்புகளும் , அரசியல் கட்சிகளும் பேசுகின்றன
அதே சமயம், இதுவரை அரசாங்கம் கொடுத்த சாதிய எண்ணிக்கை தவறு என்றும், அதற்கு காரணம் எடுத்தவர்கள் குறிப்பிட்ட சாதியினர் அதனால் அவர்கள் அவரவர் சாதியை அதிகமாக காட்டி விட்டனர் என்று தத்தம் சாதிகள் பெரும்பான்மை என்று சொல்லி வாதிடுகின்றனர் .
ஆங்கிலேய அரசு சாதிவாரிய எண்ணிக்கையை 1881,1891,1901,1911,1921,1931 என்று ஆறுமுறை தெளிவாக எடுத்துள்ளனர். ஆங்கிலேயர் இங்கே யாருக்கும் உறவுக்காரர்கள் இல்லை, எந்த இந்திய சாதியினரும் இல்லை. எனவே அவர்களின் கணக்கெடுப்பு தெளிவாக இருக்கும் என்பதை அனைவரும் ஏற்றுதானே ஆகவேண்டும்
அதன்படி Madras Presidency உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எவ்வளவு ஒவ்வொரு சாதியும் உள்ளனர் என்பதை கீழே உள்ள ஆவணத்தின் அடைப்படையில், அதில் எவர் எங்கு பெரும்பான்மை என்பதையும் பதிவு செய்யவே இந்த ஆவணம்
இந்த எண்ணிக்கை இந்த வருடம் 2022 படி குறைந்தது நான்கு மடங்கு அந்தந்த சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்
கீழ்க்கண்ட படத்தில் பழைய மாவட்டங்களும் அதன் எல்லைகளும் கொடுக்க பட்டுள்ளன
கஞ்சம் (இன்றைய ஒரிசா) – மக்கள் தொகை 1901
இன்றைய ஒரிசா பகுதியில் இருக்கும் கஞ்சம் மாவட்டத்தில் 1901 ஆம் ஆண்டு படி தமிழர் சாதிகள் என்று பார்த்தால் பெரும்பான்மையாக வன்னியர்கள் (Palli/பள்ளி) – 63,034 உள்ளனர்.
பள்ளி என்று குறிப்பிடப்படும் இனத்தவர் வன்னியர் இனத்தவர்கள். அதே போல Yerukala என்ற இனம் தமிழரில் இல்லை, அவர்கள் தெலுங்கர்கள். அதன் படி 90% இங்கு தமிழர்கள் வன்னியர்களாகவே உள்ளனர்
விசாகப்பட்டினம் மாவட்டம் - மக்கள் தொகை 1911
இந்த பகுதியில்1911 ஆம் ஆண்டு படி தமிழர் சாதிகள் என்று பார்த்தால் பெரும்பான்மையாக வன்னியர்கள் (Palli/பள்ளி) – 17,763 உள்ளனர்.
இங்கு தமிழர்கள் 100% வன்னியர்களாகவே உள்ளனர்
கோதாவரி மாவட்டம் - மக்கள் தொகை 1911
இந்த பகுதியில்1911 ஆம் ஆண்டு படி தமிழர் சாதிகள் என்று பார்த்தால் பெரும்பான்மையாக வன்னியர்கள் (Palli/பள்ளி) – 40,687 உள்ளனர்.
இங்கு தமிழர்கள் 90% வன்னியர்களாகவே உள்ளனர்
கிருஷ்ணா மாவட்டம் - மக்கள் தொகை 1911
இந்த பகுதியில்1911 ஆம் ஆண்டு படி தமிழர் சாதிகள் என்று பார்த்தால் பெரும்பான்மையாக வன்னியர்கள் (Palli/பள்ளி) – 23,298 உள்ளனர்.
இங்கு தமிழர்கள் 95% வன்னியர்களாகவே உள்ளனர்
கர்னூல் மாவட்டம் - மக்கள் தொகை 1911
இந்த பகுதியில் 1911 ஆம் ஆண்டு படி தமிழர் சாதிகள் எண்ணிக்கை ஏதும் இல்லை
நெல்லூர் மாவட்டம் - மக்கள் தொகை 1911
இந்த பகுதியில்1911 ஆம் ஆண்டு படி தமிழர் சாதிகள் என்று பார்த்தால் பெரும்பான்மையாக வன்னியர்கள் (Palli/பள்ளி) – 10,025 உள்ளனர்.
பிற தமிழ் குடிகள் மிக சிறிய அளவில் உள்ளனர்.
குண்டூர் மாவட்டம் - மக்கள் தொகை 1911
இந்த பகுதியில்1911 ஆம் ஆண்டு படி தமிழர் சாதிகள் என்று பார்த்தால் பெரும்பான்மையாக வன்னியர்கள் (Palli/பள்ளி) – 20,214 உள்ளனர்.
பிற தமிழ் குடிகள் மிக சிறிய அளவில் உள்ளனர். இங்கு தமிழர்கள் 90% வன்னியர்களாகவே உள்ளனர் (Yerukala is not tamil caste)
கடப்பா மாவட்டம் - மக்கள் தொகை 1911
இந்த பகுதியில் 1911 ஆம் ஆண்டு படி தமிழர் சாதிகள் எண்ணிக்கை ஏதும் இல்லை (Yerukala are not tamil)
அனந்தபூர் மாவட்டம் - மக்கள் தொகை 1911
இந்த பகுதியில் 1911 ஆம் ஆண்டு படி தமிழர் சாதிகள் என்று பார்த்தால் மிக சிறிய அளவில் உள்ளனர். Vellalar (664) & Kuravar (3733) இங்கு தமிழர்கள் உள்ளனர்
பெல்லாரி மாவட்டம் - மக்கள் தொகை 1911
இந்த பகுதியில்1911 ஆம் ஆண்டு படி தமிழர் சாதிகள் என்று பார்த்தால் பறையர் 2556 எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர் தமிழர் குடிகளில்.
வட ஆற்காடு - மக்கள் தொகை 1901
இன்றைய ஆரணி, வந்தவாசி, போளூர், சித்தூர் (தெலுங்கு மக்கள் பெரும்பான்மை), ராணிப்பேட்டை மாவட்டம் , வேலூர் மாவட்டம் போன்ற பகுதிகள் உள்ளடக்கியது. முதல் பெரும்பான்மை சாதியாக வன்னியர்களும், அடுத்து பறையர் வேளாளர் என்ற அடுக்கில் உள்ளனர்
வன்னியர் - 3,56,832
பறையர் - 1,92,643
வேளாளர் - 1,65,694
தென்னார்க்காடு - மக்கள் தொகை 1911
இன்றைய விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்ட பகுதிகள் உள்ளடக்கியது. முதல் பெரும்பான்மை சாதியாக வன்னியர்களும், அடுத்து உள்ளனர்
இங்கே பறையர் தவிர அனைத்து தமிழ் குடிகள் இணைந்தாலும் , வன்னியர் எண்ணிக்கைக்கு ஈடாக இல்லை . மிகப்பெரும்பான்மை குடிகளாக வன்னியரும், பறையரும் இங்கு உள்ளனர்
வன்னியர் – 7,58,143; பறையர் – 5,90,589; வேளாளர் – 1,24,601
செங்கல்பட்டு - மக்கள் தொகை 1911
இன்றைய தென் சென்னை சைதாப்பேட்டை முதல் , செங்கல்பட்டு , திருவள்ளூர், பொன்னேரி , காஞ்சிபுரம் பகுதிகளை உள்ளடக்கியது
முதல் பெரும்பான்மையாக பறையர்கள் - 3,50,529 மக்களும், அடுத்து வன்னியர்கள் - 2,92,335 மக்களும் உள்ளனர் . வேளாளர்கள் - 93,364 மக்கள் உள்ளனர்.
வடதமிழகத்தில் வன்னியர் பறையர்கள் தனிப்பட்ட சாதிகளாக முதல் இரண்டு பெரும்பான்மை . மூன்றாம் இடத்தில உள்ள சாதிகளுக்கும் , இவர்களுக்கும் உள்ள வித்யாசம் அதிகமாக உள்ளன
சேலம் - மக்கள் தொகை 1911
இன்றைய ஓசூர் , கிருஷ்ணகிரி , திருச்செங்கோடு , தர்மபுரி , சேலம் , ஆத்தூர் பகுதிகளை உள்ளடக்கியது
முதல் பெரும்பான்மையாக வன்னியர்கள் – 4,82,631, அடுத்து வேளாளர்கள் – 2,68,649, அடுத்து பறையர்கள் – 1,49,498 மக்களும், உள்ளனர்
திருச்சி - மக்கள் தொகை 1911
இன்றைய அரியலூர் , பெரம்பலூர் , கரூர் , நாமக்கல் , திருச்சி ,திருச்செங்கோடு ,முசிறி பகுதிகள் உள்ளடக்கியது. முதல் பெரும்பான்மையாக வேளாளர் உள்ளனர் , அடுத்து வன்னியர்கள் உள்ளனர்
- வேளாளர் - 3,30,662
- வன்னியர் - 189371
- முத்தரையர் (அம்பலக்காரர் + வலையர் + முத்தரையர்) - 181,148
- பறையர் - 168965
- பள்ளர் - 1,44,855
- கள்ளர் - 27,730
தஞ்சை - மக்கள் தொகை 1921
இன்றைய தஞ்சை , திருவாரூர் , நாகை, அறந்தாங்கி பகுதிகள் உள்ளடக்கியது. முதல் பெரும்பான்மையாக பறையர் உள்ளனர் . அடுத்து வன்னியர்கள் உள்ளனர்
- பறையர் - 3,37,445
- வன்னியர் - 2,49,751
- வேளாளர் - 2,22,239
- கள்ளர் - 2,07,684
- முத்தரையர் (வலையர் +முத்திரியர் + அம்பலகாரர் )- 1,85,136
- அகமுடையார் - 1,17,686
மதுரை - மக்கள் தொகை 1911
இன்றைய திண்டுக்கல் தேனி மதுரை பகுதிகள் உள்ளடக்கியது. முதல் பெரும்பான்மையாக வேளாளர் உள்ளனர், அடுத்து கள்ளர் உள்ளனர்
- வேளாளர் – 2,34,460
- கள்ளர் – 1,91,946
- பள்ளர் – 1,36,685
- பறையர் – 99,917
- அகமுடையார் – 58,745
தென் தமிழ்நாட்டை சேர்ந்த சமூகமான அகமுடையார் எண்ணிக்கையில் பாதி அளவிற்கு இங்கு வன்னியர்கள் உள்ளனர் . 1911 ஆண்டு - வன்னியர்கள் எண்ணிக்கை 25,336
நெல்லை - மக்கள் தொகை 1921
இன்றைய நெல்லை , தூத்துக்குடி பகுதிகள் உள்ளடக்கியது. முதல் பெரும்பான்மையாக நாடார்கள் உள்ளனர், அடுத்து மறவர்கள் உள்ளனர்
நாடார்கள் – 2,58,553
மறவர் – 2,31,853
பள்ளர் – 1,96,148
கோனார் – 1,01,873
பறையர் - 79691
அகமுடையார் – 1724
தென் தமிழ்நாட்டை சேர்ந்த சமூகமான அகமுடையார், முத்தரையர் எண்ணிக்கை விட வடதமிழ்நாட்டில் இருக்கும் வன்னியர்கள் இந்த இடங்களில் அதிகமாகவே உள்ளனர் . இந்த பகுதியில் முத்தரையர் சமூகங்கள் இல்லை . வன்னியர் 6540, அகமுடையார் 1724
நீலகிரி - மக்கள் தொகை 1911
இன்றைய ஊட்டி (உதகை குன்னூர் ) பகுதிகள் உள்ளடக்கியது. முதல் பெரும்பான்மையாக பறையர் உள்ளனர்.
பறையர் – 18,725
வேளாளர் – 4565
செங்குந்தர் - 3068
வன்னியர்கள் – 182
மலபார் - மக்கள் தொகை 1901
கேரளம் பகுதியை சேர்ந்தது இந்த மலபார் மாவட்டம். தமிழ் குடிகளில் பெரும்பான்மையாக பார்ப்பனர்கள் உள்ளனர்.
பிராமணர் – 33,584
பறையர் – 12,800
வன்னியர்கள் - 1217
கள்ளர் - 626
மறவர் - 205
அகமுடையார் – 117
இந்த பகுதியில் முக்குலத்தோர்களை விட வன்னியர்கள் அதிகம் உள்ளனர்
தெற்கு கனரா - மக்கள் தொகை 1901
கேரளம் பகுதியை சேர்ந்தது இந்த மாவட்டம். அனைவருமே மிக குறைவு. மொத்தமே 2056. இங்கும் வன்னியர்கள் உள்ளனர், வன்னியர் எண்ணிக்கை - 235
சித்தூர் - மக்கள் தொகை 1901
இன்றைய சித்தூர், மதனப்பள்ளி , சந்திரகிரி பகுதிகள் உள்ளடக்கியது. தமிழ் குடிகளில் பெரும்பான்மையாக வன்னியர்கள் உள்ளனர்
வன்னியர் – 55,485
வேளாளர் – 20,604
பறையர் – 3881
அகமுடையார் - 2561
கோவை - மக்கள் தொகை 1921
கோவை, பொள்ளாச்சி , ஈரோடு உட்பட்ட கொங்கு மாவட்டங்களை உள்ளடக்கியது.
இங்கு பெரும்பான்மையாக வேளாளர்கள் உள்ளனர். அடுத்து அருந்ததியினர் (சக்கிலியர் ) உள்ளனர்.
வேளாளர் – 6.94.906
சக்கிலியர் - 206,162
செங்குந்தர் -83000
பறையர் - 73,363
நாடார் - 72,923
வன்னியர் - 70,793
ஆசாரி - 54,037
அகமுடையார் - 26,408
வேட்டுவ கவுண்டர் - 34,499
பள்ளர் - 28,910
வடக்கில் மட்டுமே இருப்பதாக சொல்லப்படும் வன்னியர்கள் , கொங்கு நாடு சாதியாகிய வேட்டுவ கவுண்டர்கள் விட இங்கே வன்னியர்கள் அதிகமாக உள்ளனர் . நாடார்கள் , பறையர்கள் , வன்னியர்கள் ஆகியோர் சம அளவு கொங்கு நாட்டில் உள்ளனர்
ராமநாதபுரம் மக்கள் தொகை 1911
இன்றைய சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் பகுதிகள் உள்ளடக்கியது. முதல் பெரும்பான்மையாக பள்ளர் உள்ளனர், அடுத்து மறவர்கள் உள்ளனர்
பள்ளர் - 143761
மறவர் - 134596
கோனார் - 110035
நாடார் - 106200
வேளாளர் - 105812
அகமுடையார் - 87859
கள்ளர் - 57398
வன்னியர்கள் இந்த பகுதியில் உள்ள எண்ணிக்கை 7092
மெட்ராஸ் மக்கள் தொகை 1911
சென்னை என்பது வடசென்னை மட்டுமே இருக்கும் பகுதி. இங்கு பெரும்பான்மையாக வேளாளர்களும் அடுத்து வன்னியர் பறையர் உள்ளனர் வேளாளர் 69617; வன்னியர்கள் 49005; பறையர்கள் 58568
கீழ்கண்ட ஆவணம் எந்த எந்த சமூகம் எந்த மாவட்டத்தில் எவ்வளவு சதவிகிதம் என்று கூறுகிறது. இதில் முக்குலத்தோர்கள் கள்ளர் மறவர் என்று இல்லமால் மூவரையும் சேர்த்து உள்ளது. அதே போல வேளாளர், செங்குந்தர்கள் ஒரே கூட்டணியாக சேர்த்து கொடுக்க பட்டுள்ளது
புதுக்கோட்டை - மக்கள் தொகை 1911
சாதிகளின் எண்ணிக்கை - மாவட்ட ரீதியான அட்டவணை - 1921
பெங்களூர் தமிழர் எண்ணிக்கை –மைசூர் ப்ரெசிடென்சி
பெங்களூர் கோலார் பகுதி தமிழர்கள் வெறும் பிழைக்க வந்தவர்கள் அல்ல. அங்கு உள்ள பூர்வீக தமிழர்கள் அரசர் காலம் தொட்டு வாழ்பவர்கள். ஹொய்சாளர் ராமநாதர் காலங்களில் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழ்தான்.
பெங்களூர் விக்ரமசோழ மண்டலம் என்று அழைக்கப்பட்டது
இங்கு உள்ள பழைய கோவில்கள் சோழர்களால், தமிழ் கங்கர்களால் கட்டப்பட்டவை.
பெங்களூர் உருவாக்கிய கம்ப கவுடா(கவுண்டர் ) காஞ்சியில் இருந்து இடம்பெயர்ந்த திகளர் (தமிழ் வன்னியர் ) சமூகம் ( As per below document).
1931 படி பெங்களூரு மக்கள் தொகை 3,07,124.
இதில் திகளர் (வன்னியர்) - 31,644
மொத்த எண்ணிக்கையில் வன்னியர் 10%, தமிழர் எண்ணிக்கையில் 50% மக்கள் வன்னியர்
1911 மொத்த 1,89,485 மக்கள் தொகையில்
தமிழர் – 61,172
தெலுங்கு – 47,423
கன்னடர் – 33,612
குடிவாரிய எண்ணிக்கை - 1911,1921,1931,1951 வரை
கடுமையான பஞ்சம், நோய் போன்ற உயிர் இழப்புகளால் சில சாதிகள் எண்ணிக்கை முந்தைய வருடத்தை விட அடுத்த வருடங்கள் சிறிய குறைவு ஏற்படும் எண்ணிக்கையில்
முடிவுரை:
இந்தியாவில் உள்ள பெரும் எண்ணிக்கை உள்ள சாதிகளில் top 20 சாதிகளில் வன்னியர்கள் உண்டு
மேலே ஆங்கிலேயர்கள் ஆவணம் படி, வன்னியர்கள் வேளாளர்கள் பட்டியல் மக்கள் மட்டுமே பெரும்பான்மை குடிகள் . இதில் வேளாளர்கள் இன்று ஒரே சாதியாக இல்லை . கொங்கு வேளாளர், சோழிய வேளாளர் , சைவ வேளாளர் என்று நூற்று கணக்கில் உடைந்து உள்ளனர்.
ஆனால் வன்னியர்கள்/ பள்ளிகள் என்று அழைக்கப்படும் மக்கள் இன்றுவரை ஒரே குடியாக உள்ளனர். அதன்படி வன்னியர்கள் மட்டுமே “single largest community” என்று சொல்லக்கூடிய தகுதி உடையவர்களாக உள்ளனர் .
கள்ளர் மறவர் போன்ற சாதிகள் எண்ணிக்கை திருச்சியில் குறைவாக ஆரம்பித்து மதுரை / நெல்லை உள்ளே முடிந்து விடுகிறது
ஆனால் வன்னியர்கள் எண்ணிக்கை மைசூர் ப்ரெசிடென்சி உட்பட Madras Presidency யில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் , சொல்லப்போனால் தென்னிந்தியா முழுக்க பல இடங்களில் பெரும்பான்மையாகவும் , சில இடங்களில் சிறுபான்மை , கணிசம் என்று தங்கள் இருப்பை அனைத்து பகுதியிலும் காண்பித்து உள்ளனர் .
சோழ பெருவேந்தர்கள் பகுதியாக உள்ள ஒரிசா(கலிங்கம் ) முதல் தென்னகம் வரை வன்னியர்கள் இருப்பது அவர்கள் சோழர்களின் நிலப்படையாக இருந்து எல்லை காவலுக்காக வடக்கில் கோதாவரி , கஞ்சம் போன்ற அனைத்து பகுதியிலும் , தெற்கில் தொண்டிபட்டினம் என வன்னியர்கள் உள்ளனர் .
எண்ணிக்கைகளை பார்க்கையில் , பறையர் தவிர எந்த ஒரு இரண்டு சமூகம் இணைந்தாலும் , வன்னியர்க்கு இணையான எண்ணிக்கை இல்லை .
வன்னியர்கள் எண்ணிக்கை 1921 ஆண்டுபடி 28 லட்சம். அனால் கள்ளர் மறவர் அகமுடையார் இனைந்து 13.5 லட்சம்
எனவே வன்னியர் எண்ணிக்கையில் பாதி முக்குலத்தோர் எண்ணிக்கை வருகிறது . அதே போல நாடார், கோனார்கள், முத்தரையர் போன்றோர் எண்ணிக்கை விட மூன்று மடங்கு வன்னியர் எண்ணிக்கை வருகிறது.
இந்த ஆவணங்கள் அனைத்தும் இணையத்தில் மூலம் “Madras presidency – district gazetteer” லேர்ந்து எடுக்கப்பட்டது
No comments:
Post a Comment