Monday, August 27, 2012

சோழன் , சோழங்கன், சோழகன், சோழ கங்கன் என்ற பட்டங்களுக்குள்ள விளக்கம் :




சோழன் (அல்லது ) சோழங்கன் என்னும் பட்டம் ஒரே பொருளுடையவை .

ஆவணங்களில் சோழர்கள் தங்களை சோழங்கனார் அல்லது சோழனார் என்றுக் குறிக்கப்படுபவர்கள்.

சோழ மன்னனை குறிப்பது சோழன் .

அங்கன் என்றால் மகன் என்று பொருள்.

சோழனின் வாரிசை சோழங்கன் என்று அழைப்பார்கள் .

ஆனால் சோழகன் என்பது வேறு பொருளைக் குறிக்கும்.

http://www.tamilvu.org/library/dicIndex.htm

என்ற தமிழக அரசின் அகராதியில் (தமிழ்- தமிழ் அகர முதலி) என்பதைத் தேர்வு செய்து சோழங்கன் என்பதற்கும் சோழகன் என்பதற்கும் உள்ள பொருளைப் பாருங்கள்.

சோழகன் என்றால் ஒரு காட்டுச் சாதியான் ( கள்ளர் பட்டப்பெயருள் ஒன்று ) .

இது சோழனை குறிக்காது .மாறாக காட்டுப்படையில் இருக்கும் கள்ளர்களை குறிக்கும் .

காலாட்படை நாட்டுப்படை யென்றும் காட்டுப்படை யென்றும் இருவகைப்பட்டிருந்தது. நாட்டுப்படை = படையாட்சி , காட்டுப்படை = கள்ளர் .

சோழ கங்கர் என்பது சோழர்கள் கங்க நாட்டை வென்ற பிறகு அந்த நாட்டை ஆண்ட சோழர்களின் பிரதிநிதிக்குக் கொடுக்கப்பட்டப் பட்டம்.

Sunday, August 26, 2012

காடவராயர் கோப்பெருஞ்சிங்கனை பள்ளி(வன்னியர் ) என்று குறிக்கும் கல்வெட்டு :









உலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான நொபுரு கரஷிமா அவர்களின் "South Indian
Society in Transition: Ancient to Medieval"
ஆய்வு நூலில் கல்வெட்டு
ஆதாரங்களுடன் "காடவராயர்கள் வன்னியர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


குறிப்பாக திருமுட்டம் மற்றும் விருதாச்சலம் கல்வெட்டுகள் காடவராயர்கள் வன்னியர்களே (பள்ளி) என்று குறிப்பிடுகின்றன.


கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த கோப்பெருஞ்சிங்க காடவராயன் மூன்றாம் ராஜராஜ சோழனையே கைது செய்து சேந்தமங்களத்தில் சிறைவைத்தான். (சிதம்பரம் கோவிலின் தெற்கு கோபுரத்தையும், தில்லை காளியம்மன் கோவிலையும் கட்டியவன்
இவன்தான்.)

மற்றொரு காடவராய தலைவனான குலோத்துங்கசோழ காடவராயனின்
தம்பி குலோத்துங்கசோழ கச்சியராயன் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுவதையும் நொபுரு கரஷிமா குறிப்பிடுகிறார். இப்போதும் கடலூர் நடுத்திட்டு, தியாகவல்லி பகுதி வன்னியர்கள் கச்சியராயர்கள் என்று
அழைக்கப்படுகின்றனர்.

From “South Indian Society in Transition: Ancient to Medieval", by Noboru Karashima, OXFORD 2009

Page 74


In a Shrimushnam inscription (ARE 1916 – 232) Kulottungachola Kadavarayan, a Kadava chief, is stated as a Palli.


Pages 137 & 139



Kopperunjinga, one of the Kadava chiefs of the thirteenth century, is
famous for having taken captive his own master, Rajaraja III of the
Cholas, for some time in Sendamangalam in South Arcot District.


A Tiruvadi inscription (SII, vii – 319; SA, 1145) records that
Araisanarayan alias Kulottungachola Kachchiyarayan, a Kadava chief…


Another Tiruvadi inscription (SII, vii – 320; SA, 1146) records the
remission by Elisaimahan alias Kulottungachola Kadavarayan, probably an
elder brother of Araisanarayan of previous inscription…

We have
three more inscriptions of this chief, which are found in Vriddhachalam
(SII, vii – 150; SA, 11468), Srimushnam (ARE 1916 – 232, SA, 1152), and
Tirunarunkondai (SITS – 74; SA, 1156). In the first two he is described
as a Palli who has kani right in Erumbur.

கோப்பெருஞ்சிங்க காடவராயன் வன்னியன் என வெளிப்படையாக தெரிந்த காரணத்தினாலேயே அவனது புகழ் மறைக்கப்பட்டுவிட்டது.

அரசர் படைகள் : - நாட்டுப்படை சார்ந்தவர்கள் படையாட்சி . அதுவே அரசரின் நிலைப்படை (அ) மூலப்படை எனப்படும்


 

 மூலப்படை, கூலிப்படை; நாட்டுப்படை, காட்டுப்படை; பகைப் படை, துணைப்படை; என இவ்விருபாலாகப் பகுக்கப்படும் .

அறுவகைப் படையுள் நாட்டுப்படை என்பது படையாட்சி கைக்கோளர் செங்குந்தர் படைகளையும், 


காட்டுப்படை என்பது கள்ளர் மறவர் படைகளையும் குறிக்கும்.

படைத்தலைவர் இயல்பாகத் தத்தம் படைமறவர் பாங்காகவே வதிவராதலின், வேந்தரை அடுத்தும் அவர் தலைநகரிலும் என்றுமிருந்த படைத்தலைவர் நாட்டுப்படைத்தலைவரே( படையாட்சி ).

கூலிப்படை போர்ச்சமையத்திற்கு மட்டும் கூலிக்கு அமர்த்திக் கொள்வது. துணைப்படை என்பது தனித்தவிடத்து நட்பரசர் படையையும் போர்க்களத்தில் பகைப்படையல்லாத தன்படைத் தொகுதியையுங் குறிக்கும். வழிமுறைப் பண்பு வரவர வளர்ந்தும் இயற்கையாக அமைந்தும் இருக்குமாதலாலும், வாழ்நாள் முழுவதும் உணவளித்துக் காத்த அரசனுக்கு நன்றியறிவாகச் செஞ்சோற்றுக் கடன் கழித்தல் மறவ ரியல்பாதலாலும், 'தொல்படைக் கல்லா லரிது' என்றார்.

"சிறந்த திதுவென்னச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளம ரென்னும் - பிறங்கழலுள்
ஆருயி ரென்னும் அவிவேட்டார் ஆங்கஃதால்
வீரியரெய் தற்பால வீடு"

நிலைப்படை என்றும் (படையாட்சி  ) களின் நாட்டுப் படையாகவே யிருக்கும். அது மூலப்படையெனவும் படும். மூலம் என்னும் தென்சொல்லின் திரிபே மௌலம் என்னும் வடசொல்லும். மூலப்படையைத் 'தொல்படை' என்று வள்ளுவர் குறிக்கிறார்.
(குறள் 762)
தொல்படையாகிய மூலப்படை பற்றிப் பரிமேலழகர் தெளிவுற விளக்கியுள்ளார். அம்மூலப் படையை அரசன் அவல் பொரி முதலியவற்றைக் கொடுத்துக் காப்பாற்றும் என்பதுகுறிப்பெச்சம்'' என்பது, கோ. வடிவேலு செட்டியாரவர்கள் தெளிவுரை. இப்படையின் சிறப்புப் பற்றி மேலும் தந்துள்ள விளக்கம் வருமாறு: ''மூலப் படை அரசனது முன்னோரைத் தொடங்கிவரும் சேனை. இது மூல பலம் எனப்படும்.

இராமாயணம், இராவணன் இந்திரசித்து மாண்ட பிறகு இராமர் முதலாயினோரை அழித்தொழிக்குமாறு மூலபலச் சேனையை அனுப்பினான் என்று கூறுவதாலும் இஃது அறியப்படும். அம் மூலப்படைக்குச் சிறப்பாவது அரசனிடத்து அவன் முன்னோரைத் தொடங்கிவரும் அன்பும் தான் சிறிதாகிய விடத்தும் பயந்து நீங்காத சௌரியம் (வீரம்) உடைமையுமாம்.

மூலம், பலம் என்ற இரண்டு சொற்களுக்கும் வேர் என்ற பொருளும் உண்டு என்பது இங்கே நினைக்கத் தக்கது.
ஆதிதொட்டு வருதல், மூலம் ஆகி வேராகியிருத்தல், முதலான பண்புகளை உடையது மூலப்படை என்பது புலப்படுகிறது. வேரே அழிந்ததென்றால் பின் வாழ்வு இல்லை என்பது தெளிவு.




ஆதாரம் :
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=197&pno=106
 http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=31&auth_pub_id=32&pno=762
 http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=76&pno=67
 

Saturday, August 25, 2012

காடுவெட்டி:


தமிழகத்தில் ஆதியில் குடியேறிய பல்லவர்கள் காடு கொன்று நாடாக்கினார்கள். பிறகு பல்லவர்கள் பரம்பரையை விளக்கம் செய்த புகழ்பெற்ற வேந்தர்கள் மிகப் பெரிய ஏரிகளைக் கட்டியும், ஆற்றுக்கால்கள் கோலியும் உழவுக்குப் பெரிதும் வளமூட்டி வந்தனர். காடுகளை வெட்டி நாடாக்கினராகையால் பல்லவர்களுக்குக் காடுவெட்டி என்ற விருது ஒன்றும் உண்டு.

சில ஊர்களின் பெயர்களில் அவ் விருது சேர்ந்திருப்பதை இன்றும

் காணலாம். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கார்வேட்டி நகரம் காடுவெட்டி நகரம் என்பதன் மரூஉவேயாகுமெனத் தோன்றுகின்றது.

சென்னைக்குப் பன்னிரண்டு கல் தொலைவில் ‘காடுவெட்டி’ என்ற பெயருள்ள சிற்றூர் ஒன்றும் உண்டு. அரியலூர் பகுதியிலும் நமது வன்னியர் சங்க தலைவர் குரு அண்ணன் ஊரான காடுவெட்டி என்னும் ஊரும் உண்டு.

பல்லவர் வாரிசு என்று தமிழக அரசால் சொல்ல பட்ட
"வன்னியர்களின் உடையார்பாளையம் சமஸ்த்தான அரசர்களும் " காடுவெட்டிகள் என்றே அழைக்க படுகிறார்கள் இன்றும்.

Thursday, August 23, 2012

நாயக்கர் (நாயகர் ) என்னும் சொல் எந்த மொழி சார்ந்தது







பொதுவாக நாயகர் என்றாலே அவர்கள் தெலுங்கர்கள் என்று சிலர் முட்டாள்தனமாக முடிவு செய்து கொள்கிறார்கள் .

அப்படிபார்த்தால் விநாயகர் என்கிறோம் . வெற்றி தரும் தலைவன் தான் விநாயகன் .. அவரும் நாயகர் என்று அழைக்கடுகிராரே . அப்படியெனில் அவர் சொந்த ஊரும் ஆந்திராவா ?

நாயகர் என்னும் வார்த்தை தலைவன் என்னும் பொருளுடையது . தமிழகத்தை பொறுத்த வரையில் பல இன குழுக்கள் ஒரே பட்டங்கள் கொண்டிருக்கும் . ஒரு இனத்தின் தலைவன் , ஒரு பகுதியின் தலைவன், ஒரு படையின் தலைவன் என்று இருப்போருக்கு "நாயகர் ,கௌண்டர் ,தேவர்" என்பது போன்ற இன்னும் பல பட்டங்கள் தருவது வழக்கம் .

விஜயநகர மன்னர்கள் தமிழகத்தில் நுழைவதற்கு முன்பே ராஜ ராஜன் அப்பன் சுந்தர சோழன் காலத்திலே கூட வடக்கு திசை படை தலைவனகாவும் , வடதமிழ்நாட்டு மன்னராகவும் இருந்த வன்னியர் இனத்தை சேர்ந்த சம்புவராயருக்கு "வடதிசை நாயகர் " என்ற பட்டம் உண்டு . சோழர்களின் மிகப்பெரும் படையான வேளைக்கார படைதான் சோழர் குளத்தில் உள்ள மற்ற படைகளை விட அதிக உரிமை பெற்றவர்கள் . இவர்கள் வந்தாலே , மற்ற படை வீரர்கள் ஒதுங்கி கொள்ள வேண்டும் . மன்னரின் நேரடி பாதுகாவலர்கள் இவர்களே . இவர்களின் தலைவனும் "வன்னிய நாயன் (அ) வன்னிய நாயகன் " என்று அழைப்பட்டார் . திருகொவிலூரை ஆண்ட " "சேதிராயர் " பட்டம் கொண்ட மலையமான்களுக்கும் "வன்னிய நாயன் " என்ற பட்டம் உண்டு . இப்படி நாயகர் என்னும் சொல் தலைவனை குறிக்கும் சொல்லாக பல நூற்றாண்டாக ஆயிரம் வருடத்திற்கு மேல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழகத்தில் பீ.டி.லீ .செங்கல்வராய நாயக்கர் , ஆதிகேசவ நாயக்கர் போன்றோர் தமிழ் சாதியான வன்னியர்கள் ... அதோடு சென்னை , காஞ்சி ,வேலூர் போன்ற வட ஆர்க்காடு மாவட்டங்களில் அனைத்திலும் வன்னியர் என்றால் அவர்கள் உடனே "ஓஹோ நாயக்கரா நீங்க " ன்னு கேப்பார்கள் .. நான் படிச்ச காஞ்சியில் படையாட்சி என்ற போது, இதேதான் சொன்னார்கள் ... அட நாயக்கர்னு சொல்லுங்கன்னு சொன்னாங்க. வன்னியர் என்ற சாதி இருந்தும் , பொது பட்டங்களை வைத்துதான் அவர்கள் அழைக்க படுகிறார்கள் . இது போன்ற நாயக்கர் பட்டம் இன்னும் சில சாதிக்கும் உண்டு .. வன்னியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடதமிழகத்தில் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களும் "நாயுடு " என்றுதான் அழைக்கத் படுகிறார்களே தவிர , நாயக்கார் என்றல்ல ...

சென்னையில் இருக்கின்ற பல நாயக்கர் பேரில் இருக்கின்ற தெருக்கள் எல்லாம் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுடையது.. எ.கா.அங்கமுத்து நாயக்கன் தெரு, கோவிந்தப்பன் நாயக்கன் தெரு, ராமா நாயக்கன் தெரு, வீரமுத்து நாயக்கன் தெரு.

அது மட்டும் அல்ல தமிழை தாய்மொழியாக நாயக்கர் சாதி சான்றிதமிழிலும் பள்ளி சான்றிதழிலும் Hindu, Naicker, அதாவது இந்து நாயக்கர் என்றே உள்ளது. இந்த நாயக்கர் எல்லாம் தெலுங்கு நாயக்கர்கள் அல்ல, தமிழை தாய் மொழியாக கொண்ட வன்னிய நாயக்கர்கள்.

நாயக்கர் பட்டம் கொண்ட வன்னியர் குடும்பங்களில் "நாயக்கர்" மற்றும் "நாயகர்" என்று தான் பத்திரங்களில் இருக்கும். நாயக்கர் மற்றும் நாயகர் இரண்டும் ஒரே பொருளை தருவதால் எப்படி போட்டாலும் தவறில்லை. 1978 ஆம் ஆண்டு வரையில் சாதி சான்றிதழ்களில் கூட "இந்து நாயக்கர்" என்று     தான் இருக்கும். வன்னியர் என்று கூட இருக்காது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் நீங்க நாயக்கரா? நாயுடுவா? என்று தான் கேட்பார்கள்.

 எங்களுக்கு தெரிந்த நாயுடு சமூகத்தவர்கள் எங்களை நாயக்கரே என்று தான் அழைப்பார்கள். நாங்க அவர்களை நாயுடு என்று தான் அழைப்போம்.

நாயகர் என்றால் இறைவன், தலைவன், மன்னன் என்று பொருள். அதன் பொருட்டே விநாயகர் இறைவனுக்கெல்லாம் இறைவன் என்கிற பொருளில் முதல் இறைவன் என்கிற பொருளில் "வி" நாயகர் என்று அழைக்கபடுகிறார். "வி" என்றால் முதல் முதன்மை என்று பொருள்.  நாயக்கர் என்பது தமிழும் அல்ல தெலுங்கும் அல்ல. அது ஒரு தூய வடசொல், அதாவது சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தில் naayaka என்றால் தலைவன் என்றே பொருள். நாயகர்(naayakar ) என்றாலும் நாயக்கர்(nayagar) என்றாலும் அது வடமொழி சொல் தான். இது சம்ஸ்கிருத சொல். இதற்கு சமமான தமிழ் சொற்கள் தான் இறைவன், தலைவன், மன்னன் என்பது..

ஆகவே ஒரு பட்டத்தை இனி யாராவது குறித்தால் அவர்கள் இன்னவர்தான் என்பதை ஆராயமால் முடிவு செய்ய வேண்டாம் ... இது வடதமிழ்நாட்டவர்களுக்கு பலருக்கு இது நன்றாக தெரியும் . தெற்கே வாழும் நண்பர்களுக்கு இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை என்றால் தெரிந்து கொள்ளவும்  



  

சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா? - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை!




 
ஆகஸ்ட் 22 ஆம் நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் சென்னை நகரம் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் எஸ். முத்தையா எழுதிய "சென்னை மறுகண்டுபிடிப்பு", நரசய்யா எழுதிய "மதராசப்பட்டினம்" ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சென்னை நகரின் வேர் தெலுங்கா?



"சென்னை மறுகண்டுபிடிப்பு" நூலில் "சென்னை நகரின் வேர் தெலுங்கு" எனும் சர்ச்சைக்குரிய தகவல் இருக்கிறது

"கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோகனும் ஃபிராசிஸ் டேயும் வெங்கடப்பா, ஐயப்பா என்ற வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக்குகள் பூந்தமல்லியில் அளித்த நிலத்தை நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் சோழமண்டலக் கடற்கரையில் பிரிட்டிஷ் ஆட்சிபீடமாக வளர்ந்த ஒரு நிறுவனத்தை அந்த இடத்தில் அமைத்தனர். சென்னையின் கதை இங்கே ஆரம்பிக்கிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

கூடவே "ஆங்கிலேயர்களுக்கு சென்னைப் பகுதியை அளித்த சந்திரகிரி ராஜாவின் உள்ளூர் நாயக்குகளான தாமர்ல சகோதரர்கள், சென்னப்ப நாயக் என்ற தங்களது தந்தையின்  ஞாபகார்த்தமாக அந்தக்குடியிருப்புக்கு சென்னப்பட்னம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினர்" என்று பெயர்க் காரணத்தைக் குறிப்பிடும் எஸ். முத்தையா, அதன் தொடர்ச்சியாக "நகரின் வேர் தெலுங்காக இருந்தாலும், தனித்தமிழ் விசுவாசிகள் இந்தப்பகுதியை சென்னை என்று அழைக்கத் தொடங்கினர்" என்கிறார். (பக்கம் 14)

இதே போன்று, ஆந்திர பிரதேசம் தோன்றியது குறித்த வீக்கிபீடியா கட்டுரையில், "வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி. ஆங்கிலேயர்கள் இங்கே தொழிற்சாலை அமைக்க 1639 இல் அனுமதி கேட்டது, இப்பகுதியை ஆட்சி செய்த வெலமா சாதியைச் சேர்ந்த தாமர்ல வெங்கடாத்ரி நாயகுடுவிடம்தான். 1920 ஆம் ஆண்டுக்கு பின்பு சென்னை மாகானத்திலும் தேசிய அரசிலும் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவாகவே சென்னை தமிழ்நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது" ன்று கூறப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மேட்டர்ஸ் எனும் நூல் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி என்கிறது. "1998 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று மாற்றும் போது 'சென்னை' என்பதன் மூலம் தமிழ் அல்ல என்பதற்கான ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த தெலுங்கு பேசும் சென்னப்ப நாயக்கர் எனும் சந்திரகிரி அரசரின் தளபதி ஆங்கிலேயருக்கு அதனை அளித்ததால்தான் அவரது பெயரில் சென்னை நகரம் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
நரசய்யாவின் மதராசப்பட்டினம் நூலில் "தாமர்ல வெங்கடாத்ரி வம்சத்தினர் காளஹஸ்தி ராஜாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவ்வம்சத்தில், ஐந்தாவதாக வந்தவர் தாமரல குமார சின்னப்ப நாயுடு என்பவர். இவர் பெயரில்தான் சென்னக்குப்பம் என்ற ஒரு இடம் இருந்ததாகவும் அறிகிறோம். இந்தப் பெயர்தான் சென்னை என்ற பெயரின் ஆரம்பமும் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 33).

ஆக மொத்தத்தில், வெங்கடப்பா நாயக்கர் என்பவர் ஃப்ரான்சிஸ் டேயிடம் சென்னையை அளித்ததாலும், அவரின் தந்தைப் பெயரே "சென்னப்ப நாயக்கர்" என்பதாலும் - அவர்கள் தெலுங்கு நாயுடு அல்லது வெலமா சாதியினர் என்கிற கருத்தில் - "சென்னை நகரின் வேர் தெலுங்கு" என்றும், "சென்னை ஆந்திராவின் பகுதி" என்றும் இப்போதும் பேசப்படுகிறது. இந்தத் தகவல் உண்மை அல்ல. 
==========

சென்னை என்ற பெயருக்கு காரணமானவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழரே! சோழர்கள், பல்லவர்கள், காடவராயர்கள், கடைசியாக தாமல் நாயக்கர்கள் என வரலாற்றின் பெரும்பாலான காலம் தமிழர்களாலேயே சென்னைப்பகுதி ஆளப்பட்டு வந்தது. இந்த வரலாற்றை மாற்றி, சென்னை தெலுங்குப் பகுதி என பொய்யாகக் கட்டமைக்கின்றனர். அதற்கு 'சென்னை' பெயரைப் பயன்படுத்துகின்றனர்.

சென்னையை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தது எப்படி?

ஆங்கிலேயெ கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தென் இந்தியாவில் தொழிற்சாலை என்கிற பெயரில், மசூலிப்பட்டனத்தில் குடியிருப்பை அமைத்துக்கொள்ள 1611 ஆம் ஆண்டு கோல்கொண்டா முகலாய அரசர்கள் அனுமதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 1626 ஆம் ஆண்டு பழவேற்காட்டிற்கு 35 மைல் வடக்கே துர்கராயப்பட்டினத்தில் வேறொரு குடியிருப்பை அமைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அந்த இடம் ஒத்துவராததால் வேறொரு இடத்தை தேடினர்.

1636 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்பவரிடம் புதிய இடத்தை தேடும் பொறுப்பு அளிக்கப்பட்டது. மசூலிப்பட்டனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கடலோரமாக இடம் தேடி அலைந்த அவர் மதராசக்குப்பம் எனும் இடத்தை தேர்ந்தெடுத்தார். அப்போது இந்தப் பகுதியை ஆட்சி செய்தவர்தான் தாமல் வெங்கடப்பா நாயக்கர். அவரது தந்தை சென்னப்ப நாயக்கர். 

சென்னப்ப நாயக்கரின் உண்மை பின்னணி என்ன?

தாமல் நாயக்கர்கள் என்போர் தமிழ்நாட்டில் தற்போது காஞ்சிபுரத்துக்கும் ராணிப்பேட்டைக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாமல் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்த ஊர் பல்லவர் காலத்தில் தாமர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள தாமல் ஏரி பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்டது.

"தாமல், பழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி மாநகரத்தின் அரணாக விளங்கியுள்ளது. ஏனெனில், இது வடக்கு மற்றும் மேற்குப்புறத்திலிருந்து வரும் அரசர்களின் படையை காஞ்சி செல்லும் முன் எதிர்கொள்ளும் ஓர் போர்க்களமாக இருந்துள்ளது...இங்கு வன்னியர் (அல்லது நாயக்கர்) குலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்....

தாமலில் அதிகளவு காணப்படும் இனமான நாயக்கர், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் சிறந்த போர் வீரர்களாக விளங்கியுள்ளனர். இவர்களே காஞ்சிக்கு எதிரான படையெடுப்புகளை தாமலில் முறியடித்து காஞ்சியைக் காத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், ளுனர்களாகவும் மற்றும் நாயக்க அரசர்களாகவும் இருந்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறது சென்னை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசனின் வெளியீடான "வரகீசுவரர் கோவில்" எனும் தாமல் வரலாற்று நூல். இந்தநூலை எழுதியவர் சி.பி.ராமசாமி அய்யரின் வாரிசான முனைவர் நந்திதா கிருஷ்ணா.

தாமல் கிராமத்தில் இப்போதும் வன்னிய நாயக்கர்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

விஜயநகரப் பேரசின் வழிவந்தவர்களான சந்தரகிரி அரசர் இரண்டாம் வெங்கட்டாவின் ஆட்சிக்காலத்தில் அவரது தலைசிறந்த தளபதியாக விளங்கியவர் தாமல் சென்னப்ப நாயக்கர். அதன் காரணமாகவே அவர் விஜயநகர அரசின் கீழ் சிற்றரசர் நிலைக்கு உயர்ந்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் புகழைப் போற்றும் வகையில் தூசி மாமண்டூரில் சென்னசாகரம் எனும் ஏரி வெட்டப்பட்டது. அவரது பெயராலேயே சென்னக்குப்பம் எனும் ஊரும் அமைக்கப்பட்டது. அவருக்குப்பின்னர் அவரது மகன் வெங்கடப்ப நாயக்கர் சிற்றரசர் அல்லது ஆளுனராக இருந்துள்ளார். அவரை பாளையக்காரர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் சென்னை நகரில் தமது நிறுவனத்தை அமைக்க முயன்றபோது தாமல் வெங்கடப்ப நாயக்கர் வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். அவருக்கு கீழே தாமல் அய்யப்ப நாயக்கர் பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் (இந்த அய்யப்ப நாயக்கர் பெயரால் அமைந்த ஊர்தான் அய்யப்பன் தாங்கல்). இவர்களிடம் 15000 வீரர்களைக் கொண்ட பெரும் போர்வீரர் படை இருந்துள்ளது. எனவே, சந்தரகிரி அரசரிடம் மிகுந்த ஆதிக்கம் செலுத்துபவராக இவர்கள் இருந்துள்ளனர்.
பழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் இடையிலான கடற்கரை இவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களிடம் தான் ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று தமது நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். உண்மையான  சென்னையின் கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852)

"ஒருகட்டத்தில் தாமல் நாயக்கர்கள் விஜயநகர அரசரை எதிர்க்கும் அளவிற்கும் சென்றுள்ளனர். 1642 ஆம் ஆண்டில் விஜயநகர அரசுப்பொறுப்பை ஏற்ற விஜயநரத்தின் கடைசி அரசரான சிறீரங்க ராயரை தாமல் வெங்கடப்ப நாயக்கர் ஏற்கவில்லை. இதனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தார் சிறீரங்க ராயர். ஆனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தம்பியும் அவரது உறவினர்களும் நெருக்குதல் கொடுத்ததன் காரணமாக அவரை விடுதலை செய்து மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார் சிறீரங்க ராயர்" என்கிறது தஞ்சை நாயக்கர்கள் எனும் வரலாற்று நூல் (Nayaks of Tanjore, By V. Vriddhagirisan 1942)

தமிழ் வன்னிய நாயக்கர்கள் தெலுங்கு நாயுடுகளாக ஆனது எப்படி?

விஜயநகர அரசர்களின் கீழ் வடதமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் இரண்டு சிற்றரசுகள் இருந்துள்ளன. ஒன்று தாமல் வெங்கடப்பா நாயக்கர், மற்றது காளஹஸ்தி வெலுகோட்டி திம்ம நாயக்கர். இந்த இரண்டு தனித்தனி சிற்றரசுகளும் பல ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

சஞ்சை சுப்ரமணியம் என்பவர், '1600 களின் தொடக்கத்தில் விஜய நகர அரசரான வேங்கடப்பட்டி ராயருக்கும் செஞ்சி அரசரான முட்டு கிருஷ்ணப்ப ராயருக்கும் இடையேயான போரில் தாமல் மற்றும் வெலுகோட்டி சந்ததியினரின் துணைகொண்டு விஜய நகர அரசர் வெற்றிபெற்றதாக' குறிப்பிடுகிறார். (The Political Economy of Commerce: Southern India 1500-1650
 By Sanjay Subrahmanyam 1990)

அதே சஞ்சை சுப்ரமணியம் '1642 இல் நடந்த தண்டலூரு போரில் விஜய நகர அரசரான வெங்கட்டாவுடன் அவரது இரண்டு தளபதிகளான தாமல் வெங்கடப்பா நாயக்கரும் வெலுகோட்டி திம்ம நாயக்கரும் கோல்கொண்டா சுல்தானின் படையிடம் தோல்வியடைந்ததாக' குறிப்பிடுகிறார். (Penumbral Visions: Making Polities in Early Modern South India,  By Sanjay Subrahmanyam 2001)

அதே போன்று கனகலதா முகுந்த் எனும் வரலாற்று ஆய்வாளர், '1635 வாக்கில் வெலுகோட்டி குடும்பம், தாமல் குடும்பம் போன்ற தனிப்பட்ட குடும்பத்தினர் பெரும் அரசியல் சக்திகளாக மாறினர்' என்கிறார். (The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel,  By Kanakalatha Mukund 1999)

இப்படியாக, சந்தரகிரி அரசரின் கீழ் தாமல் வன்னிய நாயக்கர் பரம்பரையினர் மற்றும் காளஹஸ்தி வெலுகோட்டி பரம்பரையினர் என இரண்டு தனித்தனி பரம்பரையினர் இருந்துள்ளனர்.

இதனிடையே '1614 - 16 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு பகுதிகளில் நடந்த குழப்பமான போரின் போது தாமல் பரம்பரையை சேர்ந்தவர்கள் காளஹஸ்தியை பிடித்ததாகவும், அவர்கள் தொடர்ந்து காளஹஸ்தி ஜமீந்தார்களாக அங்கே ஆட்சி செய்வதாகவும்' ஒரு தகவல் 1938 ஆம் ஆண்டின் நெல்லூர் மாவட்ட கெசட்டீயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Gazetteer of the Nellore District: Brought Upto 1938,  By Government Of Madras Staff, Government of Madras 1942) (அதாவது, காளகஸ்தியைத்தான் தாமல் பரம்பரையினர் பிடித்தனர் என்று பிற்காலத்தில் கூறப்பட்டுள்ளது. மாறாக காளகஸ்தியிலிருந்து எவரும் வந்து தாமலைப் பிடிக்கவில்லை).

ஆக, காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் ஊரைச் சேர்ந்த சிற்றரசர்கள் வன்னிய நாயக்கர்கள். அவர்களது பெயரில்தான் சென்னை அமைந்துள்ளது.

'1756 ஆம் ஆண்டு சென்னை சைனா பசார் எனும் இடத்தில் கட்டப்பட்ட புதிய நகரக் கோவில் எனும் கோவிலுக்காக தாமல் மரபில் வந்த காளஹஸ்தி ராஜாவின் சார்பில் 100 பகோடாக்கள் அளிக்கப்பட்டதாக' சென்னையின் முந்நூறாவது ஆண்டுவிழா மலர் 1939 கூறுகிறது. (The Madras Tercentenary Commemoration Volume,  By Madras Tercentenary Celebration Committee, 1939)

ஆங்கிலேயர்களுக்கும் தாமல் வெங்கடப்பா நாயக்கர்களுக்கும் இடையேயான உடன்படிக்கை பற்றி 1852இல் விரிவாகக் குறிப்பிட்டுள்ள ஹென்றி டேவிட்சன் லவ், "தாமல் குடும்பத்தினரை இப்போது காளஹஸ்தி ராஜா பிரதிநிதிதுவப்படுத்துகிறார்" என்று குறிப்பிடுகிறார். (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852) அதாவது, தாமல் பரம்பரையினர் வலுவிழந்த பின்னர் அவர்களது உரிமைகளை காளஹஸ்தி ராஜா பயன்படுத்தியுள்ளார்.

ஆக, காளஹஸ்தியில் வாழ்ந்த தெலுங்கு வெலமா சாதி வெலுகோட்டி ஜமீந்தார்கள் பிற்காலத்தில் தாமல் மரபினர் என்று கூறப்பட்டுள்ளனர். இந்த பிற்காலத் தகவலை வைத்துக்கொண்டு - தாமல் சிற்றரசர்கள் காலஹஸ்தியைச் சேர்ந்தவர்கள் என்றும், அதனால் அவர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும் வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளனர்.
'வன்னியர்கள் வரலாற்றை தானே மறைக்கின்றனர், நமக்கென்ன?' என்று பொதுவான தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் வேடிக்கைப் பார்த்ததால் - தாமல் என்கிற தமிழ் மரபை தெலுங்கு மரபாகத் திரித்து, அதையே 'சென்னப்ப நாயக்கர்' தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று மாற்றி, பின்னர் தெலுங்கு மன்னரின் பேயரில் அமைந்த சென்னை ஆந்திராவில் ஒரு பகுதி என்று பேசுகின்றனர்.

இதே கருத்தில் சென்னை நகரில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இன்று (22.08.2012) சென்னை தினம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், சென்னையை உருவாக்கிய தாமல் ஊரில் அதன் சுவடே தெரியவில்லை!

தமிழ்ச்சாதியினர் புறக்கணிக்கப்பட்டால் தமிழன் புறக்கணிக்கப்படுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
குறிப்பு: தமிழ்நாட்டின் வரலாறு திரிக்கப்படுவதை மறுத்து இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. மற்றபடி, ஒரு மொழி எனும் அடிப்படையில் தெலுங்கு மொழியும் ஒரு சிறப்பான மொழி என்றே நான் கருதுகிறேன். அவ்வாறே, தமிழ்நாட்டில் ஒரு அங்கமாகிவிட்ட தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.தெலுங்கு மொழியையோ அந்த மொழி பேசும் மக்களையோ அல்லது ஆந்திர பிரதேசத்தையோ நான் குற்றம் சாட்டவில்லை. 

ஆதாரம்:


1. Varahishwarar Temple – Damal, CPR Publications, by Dr. Nanditha Krishna 2001.

2. Madras rediscovered, by S Muthiah2009.

3. Madrasapattinam, by Narasiah 2006.

4. Madras Matters – At home in South India, by Jim Brayley-Hodgetts 2008.

5. Indian Records Series Vestiges of Old Madras 1640-1800, by Henry Davidson Love 1852.

6. Gazetteer of the Nellore District: Brought Upto 1938, By Government Of Madras Staff, Government of Madras 1942.

7. The Madras Tercentenary Commemoration Volume, by Madras Tercentenary Celebration Committee, 1939.

8. Penumbral Visions: Making Polities in Early Modern South India, by Sanjay Subrahmanyam 2001.

9. The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel, by Kanakalatha Mukund 1999.

10. Nayaks of Tanjore, by V. Vriddhagirisan 1942.

 11. The Political Economy of Commerce: Southern India 1500-1650, By Sanjay Subrahmanyam 1990.


 செய்தியை அளித்த திரு .அருள் ரத்தினம் அவர்களுக்கு நன்றி

Source : http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_6700.html

பல்லவர் சமணப்பள்ளிகளை இடித்து சிவன் கோவிலை எழுப்பியதை சொல்லும் பெரிய புராணம்


பாடல் :
"வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தில் அமணர் பள்ளியொடு பாழிகளும்
கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச்சர மெடுத்தான்"


என்று பாடுகிறது பெரியபுராணம். 
 
விளக்கம்:
(காடவன் - பல்லவன் மகேந்திர வர்மன்; கண்ணுதல் - சிவபெருமான்.)

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணப்பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக் கோயில்கட்டினான் என்னும் செய்தி இதில் இடம்பெற்றுள்ளது.

பல்லவர் காலத்துப் பக்தி இயக்கத்தின் விளைவையே
இதில் குறிப்பிட்டுள்ளார் சேக்கிழார்.

சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் காடவராயர் அரசரை பாடிய பாடல்

பாடல் வரி :
"காடவர் குரிசி லாராங் கழற்பெருஞ் சிங்க னார்தாம் "


விளக்கம் :

காடவர் - சோழர்களின் ஒருபிரிவாகிய மரபு. “காடவர் கோன்” என்பது முதனூல்; 
இம்மரபு பல்லவர்களினின்றும் கிளைத்தது என்பது “பல்லவர்குலத்து வந்தார்” என்றதனால் ஆசிரியர் அறிவித்தமை காண்க. 
இவர்க்கு மும்முடிவேந்தர்களுட் சேர்த்து எண்ணும் பெருமையின்று என்ற குறிப்பினால் இவரைக் குறுநிலமன்னன் ரைவருள் வைத்து வகுத்தனர் திருத்தொண்டர் புராண வரலாற்றின் ஆசிரியர் உமாபதி சிவனார். 
பெருங்கழற் சிங்கனார் என்க. கழலையணிந்த சிங்கம் போன்றார் எனக் காரணப் பெயராய் வந்தமை தெரியக் கழற் பெருஞ் சிங்கனார் என அடைய இடையில் வைத்தார்.

கழல் - அடைமொழி; சிங்கன் பெயர்; போரிற் சிங்கம் போன்றவன்.
சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் காடவராயர் அரசரை பாடிய பாடலிது
Source:  http://www.tamilvu.org/slet/l4100/l4100uri.jsp?song_no=4102&book_id=120&head_id=7&sub_id=1509 

Monday, August 20, 2012

வன்னியகுல க்ஷத்ரிய மாமன்னர் கரிகால் சோழர்




இப்படத்தை அளித்த கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி

சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு






செய்தியை அளித்த கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி .

சென்னை கிண்டியில் இருக்கும் படையாட்சியார் அய்யா சிலை





சென்னை கிண்டியில் இருக்கும் அய்யா எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்  சிலை.  இவர் 1952 இல் நடந்த பொது தேர்தலில் வன்னியர் வலிமையை உலகிற்கு உணத்தியவர். பெருந்தலைவர் காமராஜரின் மந்திரிசபையில் அங்கம் வகித்தவர்.     


செய்தியை அளித்த கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி .

அய்யா மாணிக்கவேலு நாயக்கர்






அய்யா மாணிக்கவேலு நாயக்கர் அவர்கள். 1952 பொது தேர்தலில் வன்னியர் வலிமையை படையாட்சியார் போல உலகிற்கு உணர்த்தியவர். வட ஆற்காடு மாவட்டங்களில் பல இடங்களில் இவரின் கட்சி வெற்றி பெற்றது.  தேர்தல் முடிந்து மூன்று மாதங்களாக ஆட்சி அமைக்க முடியாத காங்கிரெஸ் கட்சி இவர் தந்த ஆதரவில் தான் முதன் முதலில் ஆட்சி அமைத்தது. ராஜாஜி அவர்கள் முதல்வர் ஆக இவரே காரணமாக அமைந்தார். தமிழக மேல்சபை தலைவராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.    


M. Alagappa Manickavelu Naicker (December 14, 1896 – July 25, 1996) or simply, M. A. Manickavelu was an Indian politician of the Indian National Congress. He served as the Minister of Revenue for the Madras state from 1953 to 1962. He also served as a member of the Rajya Sabha from 1962 to 1964. During 1964-70 he as the Chairman (presiding officer) of the Tamil Nadu Legislative Council

Early life


Manickavelu was born to M. Alagappa Naicker on December 14, 1896. Alagappa Naicker belonged to the numerically strong Vanniyar community of North Tamil Nadu. Manickavelu graduated in arts and proceeded to qualify as a lawyer. Manickavelu entered politics early in life and became a member of the Swarajya Party faction of the Indian National Congress. In 1926, he was elected to the Madras Legislative Council.


Manickavelu served as a member of the Madras Legislative Council from 1926 to 1937. In 1951, he founded the Commonweal Party which represented Vanniyar interests in Chingleput and North Arcot districts. In 1951, he contested in the 1951 elections, the first held in independent India as a candidate of the Commonweal Party, and was elected to the assembly once again. Naicker was appointed Minister of Land Revenue and served from 1953 to 1962. When Rajagopalachari stepped down as Chief Minister and was succeeded by Kamaraj, Naicker dissolved the Commonweal Party and merged his organisation with the Indian National Congress. He served as a member of the Madras Legislative Assembly till 1962 when he was elected to the upper house of India's Parliament, the Rajya Sabha. He served as a member of the Rajya Sabha from 1962 to 1964.



செய்தியை அளித்த கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி .

ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர்








சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்க்கரை சாலையில் மிகவும் ரம்மியமாய் கடற்கரையை பார்த்து கொண்டே செல்லும் வகையில் இருக்கும் ஆயிரம்காணி நிலத்திற்கு சொந்தக்காரர் வன்னியகுல க்ஷத்ரிய சமுதாயத்தில் உதித்த திரு. ஆளவந்தார் நாயகர் அவர்கள்.

வைணவத்தில் ஈடுபாடு கொண்டு பிரம்மச்சரியத்தை கடைபிடித்த இவரின் சமாதி இவரின் நிலத்திலேயே இருக்கிறது. தற்போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு இவரின் அறக்கட்டளை நிலமே பயன்படுத்த படுகிறது. நெமேலி மற்றும் பட்டி புலத்தில் இவரின் நிலங்கள் உள்ளது. மற்றொரு பகுதி நிலம் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் நாட்டிய பள்ளி கட்டிக்கொள்ள இந்து அறநிலைய துறை ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையில் இருந்து பெற்று தந்திருக்கிறது.

ஆளவந்தார் நாயகர் அவர்களின் ஜீவ சமாதியும் ஆலயமும்

திருமணம் செய்து கொள்ளாத நாயகர் அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு ஜீவா சமாதி ஆகிவிட்டார். அவரின் நிலத்திலேயே அவருக்கு ஆலயம் இருக்கிறது.

இவருடைய பிறப்பு : 1835

இறப்பு ; 8 . 8 . 1914

ஊர் : கோவளம்

தந்தை : வேங்கடபதி நாயகர்

தாயார் : அகிலாண்டம்மாள்

இயற்பெயர் : தம்பிரான்

சொத்துக்கள் : 1039.27 ஏக்கர்

அனைத்து சமுதாய மக்களுக்கும் தான் சம்பாதித்த பணத்தில் உதவிகள் செய்த நாயகரின் புகழ் வான் உள்ளவரை நிலைத்திருக்கும்


செய்தியை அளித்த கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி .

இந்திய விடுதலை போராட்ட வீரர் "சர்தார்" அதிகேசவலு நாயக்கர்






இந்திய விடுதலை போராட்ட வீரர்  "சர்தார்" அதிகேசவலு நாயக்கர் 

இந்திய தேச விடுதலைக்காக 11 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். காந்திஜி அவர்களிடம் "சர்தார்" பட்டம் பெற்ற  வன்னியகுல க்ஷத்ரியர் காந்திஜியின் வரிகொடா இயக்கத்தில் பங்கு கொண்டதால் சென்னையில் இருந்த தனது பலகோடி மதிப்பிலான சொத்துக்களை ஆங்கில அரசு கைப்பற்றியபோதும் தொடர்ந்து செயல்பட்டவர். காந்திஜி, திலகர், பாரதியார் போன்றவர்களை அழைத்து சென்னை மெரீனா கடற்கரையில் சுதந்திர போராட்ட எழுச்சி மாநாடு போட்டவர். இன்றும் மெரினாவில் இருக்கும் திலகர் திடல் கல்வெட்டில் இவர் பெயர் இருக்கிறது. 




செய்தியை அளித்த கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி .


"வரலாற்று புலி" தி.வை. சதாசிவ பண்டாரத்தார்












"வரலாற்று புலி" தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தமிழ் வேந்தர்கள் வரலாற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தகுந்த
ஆதாரங்களுடன் தந்திருக்கிறார். சோழ மன்னர்களின் வாரிசுகள் சிதம்பரம் அருகில் பிச்சாவரத்தில் இருக்கிறார்கள் என்று கூறியவரும் இவரே. 

இவரின் நூல்கள் பலரால் பாராட்டபட்டிருகிறது. "பண்டாரத்தார்" பட்டம் கொண்ட வன்னியகுல க்ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தவர்.
    
"வரலாற்று புலி" தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தமிழ் வேந்தர்கள் வரலாற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தகுந்த
ஆதாரங்களுடன் தந்திருக்கிறார். சோழ மன்னர்களின் வாரிசுகள் சிதம்பரம் அருகில் பிச்சாவரத்தில் இருக்கிறார்கள் என்று கூறியவரும் இவரே. 

இவரின் நூல்கள் பலரால் பாராட்டபட்டிருகிறது. "பண்டாரத்தார்" பட்டம் கொண்ட வன்னியகுல க்ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தவர்.   


செய்தியை அளித்த கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி .