Wednesday, November 30, 2011

சோழர்(வன்னியர்)

:பெரிய புராணத்தில் உள்ள கூற்றுவ நாயனார் புராணம்: கூற்றுவ நாயனார் புராணத்தில் பாடல்கள் 3,4,5 இவற்றை கவனிக்கவும்.


பாடல் 3:

வென்றி வினையின் மீக்கூர
வேந்தர் முனைகள் பலமுருக்கிச்
சென்று தும்பைத் துறைமுடித்துச்
செருவில் வாகைத் திறங்கெழுமி
மன்றல் மாலை மிலைந்தவர்தம்
வளநா டெல்லாங் கவர்ந்துமுடி
ஒன்றும் ஒழிய அரசர்திரு
வெல்லாம் உடைய ராயினார்.

கருத்து: வெற்றி பெறும் செயல் மேன்மேல் பெருக, தும்பைப் பூவைச் சூடி, மன்னருடன் செய்யும் போர்கள் பலவற்றையும் கண்டு அப்போர்த் தொழிலின் நிறைவாக வெற்றி அடையும் வகையில் வாகை மாலையோடு பொருந்திய மணமுடைய மலர் மாலைகளையும் சூடி, அவ்வேந்தர்களின் வளநாடுகளை எல்லாம் கையகப்படுத்தி, மன்னர்க்குரிய முடி ஒன்று தவிர, மற்ற செல்வங்கள் எல்லாவற்றையும் அவர் உடையவர் ஆனார்.

பாடல் 4:

மல்லல் ஞாலம் புரக்கின்றார்
மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழந் தணர்தம்மை
வேண்ட அவருஞ் செம்பியர்தம்
தொல்லை நீடுங் குலமுதலோர்க்
கன்றிச் சூட்டோம் முடியென்று
நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா
டணைய நண்ணுவார்.

கருத்து: செழுமையான இவ்வுலகத்தைக் காக்கின்றவராய், நவமணிகளையுடைய பெரிய முடியைச் சூட்டுவதற்காகத் தில்லை வாழ் அந்தணர்களை வேண்ட, அவர்கள் சோழர்களின் தொன்று தொட்டு வரும் குல முதல்வருக்கு அல்லாமல் மற்றவர்க்கு முடி சூட்ட மாட்டோம் என்று கூறி, சேர மன்னரின் மலை நாட்டை அடைவாராய்,

பாடல் 5:

ஒருமை யுரிமைத் தில்லைவாழந்
தணர்கள் தம்மில் ஒருகுடியைப்
பெருமை முடியை யருமைபுரி
காவல் பேணும் படியிருத்தி
இருமை மரபுந் தூயவர்தாம்
சேரர் நாட்டில் எய்தியபின்
வரும்ஐ யுறவால் மனந்தளர்ந்து
மன்று ளாடுங் கழல்பணிவார்.

கருத்து:

கூத்தப்பெருமானிடத்து ஒரு நெறிய மனங் கொண்ட தில்லைவாழ் அந்தணர்கள், பெருமை கொண்ட அம் மணிமுடியைத் தங்களுக்குள் ஒரு குடியினர்பால் அருமையாய்க் காவல் செய்யும்படி வைத்து, இரு மரபும் தூயவரான அவர்கள், சேர நாட்டை அடைந்த பின்பு, கூற்றுவனார் தமக்குற்ற ஐயப்பாட்டினால் உள்ளம் தளர்ந்து, தில்லையம்பலத்தில் ஆடும் இறைவரின் திருவடியைப் பணிவாராய்,

---------- ---------- --------

களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் சிதம்பரம் பகுதியில் ஆட்சியாளாராக விளங்கியவர்கள். நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாக பிச்சாவரம் பகுதியில் ஆட்சி செய்தவர்.இவர்கள் "சோழனார்" என்று அழைக்கப்பட்டனர்.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பிச்சாவரம்(பித்தர்புரம் என்பதே சரி) பகுதியை ஆண்ட விட்டலராயச் சோழனார் இம்மரபினர் ஆவார்.இவரைக் குறித்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இம்மரபினர் முடி சூடிக்கொள்வதற்கு முன்பு அபிஷேகம் செய்யப்பெற்று தில்லை நடராசரின் திருநீற்றைப் பெற்று அங்குள்ல பஞ்சாக்கரப் படி மீதமர்ந்து பட்டம் புனைந்துகொண்டு தில்லையில் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லறம் புரிந்தனர். இந்தச் செய்தி திருக்கை வளம் என்ற நூலில் காணப் பெறுகிறது.

இந்நூலை இயற்றியவர் கூடல் இருவாட்சிப் புலவர் என்பவர். இவர் அரியலூர் மன்னரான விஜயரங்க ஒப்பிலாத மழவராயர் அரசவையில் இதனைப் பாடினார்.

இவ்வாறு பாடப்பெற்ற இம்மரபினர் சோழனார் என்றும் தில்லைச் சோழர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இம்மரபினரில் ஒருவர் பெயர் : புலிக்குத்திப் புலிவாயில் பொன்னூஞ்சல் ஆடிய வீரப்ப சூரப்பச் சோழனார்.

தில்லை வாழ் அந்தணர் முடியெடுத்துக் கொடுக்க சைவ வேளாளர் ஒருவர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.இவ்வாறு பிச்சாவரம் சோழனாருக்கு முடி சூட்டும் வேளாளர் சோழ மன்னர்களின் அமைச்சராக இருந்தவரின் வழி வந்தோர் எனக் கூறுவர்.

இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

பிச்சாவரம் குறுநில மன்னர் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் திருமணம் சிதம்பரத்தில் நடைபெற்றதையும், இம்மன்னருக்குத் தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றதையும் 24/ 8 /1943 - இல் வெளிவந்த ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த மன்னர் 19/8/1943 - இல் முடி சூடித் திருமணம் செய்துகொண்டதைப் பாராட்டுவதற்காக சிதம்பரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்தச் செய்தி 16/10/1943 - இல் வெளிவந்த சுதேசமித்திரன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

தில்லையில் நடராசர் திருமுன் முடி சூடும் உரிமை சோழர்க்குரியது. வேறு எந்த அரச மரபினரும் இந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பது தேற்றம்.
அத்தகைய உரிமையை பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் மட்டும்தான் பெற்றிருந்தனர்.


இவர்கள் சோழர் பரம்பரை என்பதால் இந்த முடி சூடும் உரிமை பெற்றிருந்தனர்.

பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் வன்னிய குலத்தினர் ஆவர்.

வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :


வன்னிய இனம் ஒரு போர்க்குடி என்பதை நீங்கள் அறிவீர்கள்.இன்று உள்ள நமது சமுதாய நிலையும் அறிந்ததே. ஆனால் தமிழரசர் ஆட்சி வீழ்ந்த பிறகும் நமது மக்கள் எத்தகையோராய் இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக ஒரு செப்பேட்டினை பற்றி இங்கு கூறுகிறேன்.


"சித்தாண்டபுரம் செப்பேடு" எனக் குறிப்பிடப்படும் இச் செப்பேட்டைப் பற்றி விரிவாக விளக்கம் கொடுத்தவர் நமது இன சரித்திர ஆசிரியர் "கல்வெட்டுச் செம்மல்" திரு.நடன்.காசிநாதன் அவர்கள்.

வன்னிய கவுண்டர்களின் வீரத்தையும்,துணிவையும் இச்செப்பேடு உணர்த்துகிறது.இதில் உள்ள சில சுவையான சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு:
"சிறுதலை பூண்டியிலிருந்து ஒலகளந்த கவுண்டனும் யேகாம்பிறி கவண்டனும் ரண்டு பேரும் மேர்க்கே யேரி வறச்சே சிங்கிரி பட்டி கணவாயிலே நூரு வேடராகிறவர்கள் வந்து மறிச்சிக் கொண்டபோது ஒலகளந்தா கவுண்டனும் யேகாம்பிரி கவுண்டனும் இவர்கள் ரண்டு பேரும் அவர்கள் மேல் சண்டைகள் செய்து அவர்களில் நாலு பேரை வெட்டித் துறத்திவிட்டு அப்போ ஆலம்பாடி வந்து சேந்து அந்தக் கோட்டையில் வீட கட்டிக்கொண்டு நிலையாயிறுந்தார்கள்.அப்போ ஆலம்பாடி கோட்டையிலிறுக்கப்பட்ட யிறுப்பாளிநாயக்கன் நீங்களாரென்று கேட்டான் நாங்கள் படையாச்சிகளென்று சொன்னார்கள் ஆனால் நம்பள் பக்கத்திலெ யிறுங்கோளென்று சேத்திக்கொண்டான்"

மற்றொரு பகுதி:
"உலகளந்தா கவண்டனும் ஏகம்பிரி கவண்டனும் ஆலம்பாடி நாட்டையாண்டு கொண்டிருக்கும் காலத்தில் பெரியப்ப நாயக்கன்,சின்னப்ப நாயக்கன்,பாலப்ப நாய்க்கன் இவர்கள் வந்து என்களுக்கு வர்த்தனை உங்கள் வீட்டுக்கு ரண்டு பணம் குடுக்கவேண்டுமென்று கேட்டார்கள்.அதுக்கவர்கள் நாங்கள் குடுக்குறதில்லை யென்றார்கள்.நாங்கள் விடுகுறதில்லை என்றார்கள் இவர்கள்.ஆடு மாட்டை கொள்ளை ஓட்டினார்கள் அவர்களில் பத்து வேடரை வெட்டிக் கொள்ளையே திருப்பிக்கொண்டார்கள்.

செகதேவராயரண்டை போனார்கள்.பாலப்ப நாயக்கன் எங்கள் வர்த்தனையைக் கேட்டோம் என்று சொன்னான்.ஏகாம்பிரி கவுண்டன் நாங்கள் வன்னிய வம்ஷம் அப்படி கொடோமென்றோம்.எங்கள் ஆடுமாடெல்லம் கொள்ளையிட்டார்கள் நாங்கள் அவர்களை பத்துப்பேரை வெட்டி கொள்ளையை திறுப்பிக்கொண்டோமென்றான்.
செகதேவராயர் வேடர் கையில் 100 பொன் அபுறாதமாக வாங்கிக்கொண்டு நீங்கள் சவுரியவான்களென்று மெச்சி உங்களுக்கு கென்னா வெகுமானம் வேணுமென்றார் அப்போது ஏகாம்பிரி கவுண்டனெங்களுக்கின்ன சாதி அதிகாரம் வேணுமென்று கேட்டார்கள்"

விளக்கம்:

சிறுதலைப்பூண்டி என்ர இடத்திலிருந்து உலகளந்தா கவுண்டர், ஏகாம்பர கவுண்டர் என்ற வன்னியர் இருவர் மேற்கு நோக்கி செல்கையில் அவர்களை ஒரு கணவாயினருகே நூறு வேடர்கள் வழி மறிக்கின்றனர்.ஆனால் இவ்விருவரும் அவ்வேடரோடு போரிட்டு அவர்களில் நான்கு பேரைக் கொன்றனர்.இதனைக் கண்ட அந்த வேடர் கூட்டம் சிதறி ஓடிவிட்டது.இதன் பிறகு இந்த வன்னிய கவுண்டர் இருவரும் ஆலம்பாடி எனும் ஊரில் குடியமர்ந்தனர்.
ஆலம்பாடி பகுதியை அப்போது ஆட்சி செய்த (தெலுங்கு) இறுப்பாளி நாயக்கன் என்பவன் இவர்களை பற்றிக் கேள்விப்பட்டு இவர்களிடம் யாரென்று கேட்டபோது தாங்கள் படையாட்சிகள் என்று அந்த இரு வன்னியரும் கூறினர்.நீங்கள் எங்களுக்கு உறுதுணையாயிருங்கள் என்று அவர்களை இறுப்பாளீ நாய்க்கன் சேர்த்துக்கொண்டான்.

ஆலம்பாடி நாட்டில் உலகளந்தா கவுண்டன்,ஏகாம்பர கவுண்டன் இருவரும் தலைவர்கள் என்ற நிலையில் வலுவுடன் இருந்தபோது (தெலுங்கு) நாயக்கராட்சியின் பிரதிநிதிகளான பெரியப்ப,சின்னப்ப,பாலப்ப நாய்க்கன்கள் இவர்களிடம் வரி கேட்டனர்.கொடுக்கமாட்டோம் என்று மறுத்தனர் வன்னியர்கள்.
வரி கொடுக்க மறுத்ததால் நாய்க்கர் தமது ஆட்களுடன் வன்னியருடைய ஆடு.மாடுகளை ஓட்டிச் செல்லத் தொடங்கினர்.சினமுற்ற வன்னியர் நாய்க்கர் ஆட்களோடு போர் செய்து அவர்களில் பத்து பேரை வெட்டிக்கொன்று தமது ஆடு மாடுகளை மீட்டுக்கொண்டனர்.

இரு தரப்பினரும் பெருமன்னனான செகதேவராயரிடம் சென்று முறையிட்டனர்.பாலப்ப நாய்க்கர் தரப்பினர் இவர்கள் வரி கொடுக்கவில்லை என்றனர்.ஏகாம்பர கவுண்டர் நாங்கள் வன்னியர் குலம் என்பதால் வரி கொடுக்க மறுத்தோம்.எங்கள் ஆடு,மாடுகளை கவர்ந்து செல்ல முயன்றதால் அவர்கள் ஆட்கள் பத்து பேரை வெட்டிக்கொன்றோம் என்றனர்.வழக்கை விசாரித்த செகதேவராயர் பாலப்ப நாய்க்கர் தரப்பிற்கு நூறு பொன் அபராதம் விதித்து பின்னர் ஏகாம்பர கவுண்டர் தரப்பை பாராட்டி உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று வினவ அதற்கு அவர்கள் எங்களுக்கு எங்கள் இன ஜாதி தலைமைப் பொறுப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
நண்பர்களே இந்த செப்பேட்டில் ஏகாம்பர கவுண்டர் உள்ளிட்ட பல வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் அதில் உள்ள மற்றொரு 

முக்கிய செய்தி:

ஒரு தேரோட்டத்தின்போது வன்னியர் தங்கள் விருதுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று வலங்கை ஜாதிகளைச் சேர்ந்தோர் மறித்து பிரச்சினை செய்ய வன்னிய கவுண்டர்கள் தம்மைத் தடுத்த வலங்கை ஜாதியாரை அடித்து துரத்தி தேரோட்டத்தை நடத்தினர்.

வன்னியர் புராணம் :




உலகில் புராணம் கொண்ட ஒரே இனம் வன்னியர் இனம் மட்டுமே . வன்னியர் புராணம் என்பது ஸ்ரீ வீர ருத்ர வன்னிய மகாராஜாவின் தோற்றத்தை பற்றி கூறும் நூல் . இந்த ருத்ர வன்னியரின் வழி வந்தவர்களையே வன்னியர் என்கிறோம் .
 இந்நூல் சுந்தர பாண்டிய மன்னரின் முன்னிலையில்  சைவ ஸ்ரீ வீர பிள்ளை அவர்களால் எழுத பெற்றது .சமஸ்கிருத நூலான “அக்னி அல்லது “அக்னேய புராணத்தில்“ இருந்து தமிழில் மொழி பெயர்க்க பட்டது .இந்நூல் ஹிந்து மதத்தின் 18 புராணங்களில் ஒன்றாகும் .இந்த புராணத்தில் வரும் அனைத்து செய்திகளும் சீர்காழியின் அருகே உள்ள வைதீஸ்வரன் கோவிலின் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது . 
 ஸ்ரீ வீர ருத்ர வன்னிய மகாராஜா, சம்பு மகரிஷி நடத்திய யாகத்தில் பிறந்ததை பற்றி கூறுவதால் இந்நூலை சம்பு மைந்தர் காப்பியம் என்றும் அல்லது வன்னியர் புராணம் என்றும் அழைக்க பெற்றது . வன்னி என்றால் அக்னி எனப் பொருள் படும் .

புராணம் :

தூர்வாசகர் முனிவருக்கும் கஜமோஹினிக்கும் இரண்டு அசுர குழந்தைகள் பிறந்தனர் .அவர்களின் பெயர் "வீல்வலன் " மற்றும் "வாதாபி". இவர்களின் தாயாரான கஜமோஹினி என்பவள் முருகபெருமானால் வதம் செய்யப்பட்ட சூறபத்மனின் இளைய தங்கை ஆவாள் .

வில்வலனும் வாதாபியும் அகஸ்திய முனிவரை துன்புறுத்த ஆரம்பித்தனர் .இதனால் கோபம் அடைந்த அகஸ்தியர் வில்வலனை விழுங்கி விட்டார் . உடனே வாதாபி சிவனை நோக்கி தவம் இருந்து பல சக்திகளையும் பெற்றான் .அந்த வலிமையின் மூலம் , தெற்கு கடற்கரையின் மைய பகுதியில் அமைந்திருந்த ரத்னபுரியை அரசால ஆரம்பித்தான் .பின்னர் மாயனின் மகளான சொக்க கன்னியை மனந்தான் . இவன் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியர், வாதபிக்கு துணை இருந்தார் .பின்னர் வாதாபி தேவர்களை மிகவும் துன்புறுத்த ஆரம்பித்தான் . இதை கண்ட நாரத முனி , சிவபெருமானிடம் தேவர்களின் இன்னல்களை கூறினார் .அதே சமயம் தேவர்களை காக்க சம்பு மகரிஷி , சிவபெருமானை நோக்கி யாகம் ஒன்றை நடத்தினார் . அப்பொழுது சம்பு மகரிஷிக்கு சிவபெருமான் அருள் பாவித்து, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஒரு நெருப்பு(வன்னி) துளியை அந்த யாகத்தில் விழ செய்தார் . 

யாகத்தில் விழுந்த அந்த நெருப்பில் இருந்து , வெள்ளை குதிரையில் கையில் வாளுடனும் , தலையில் ராஜ க்ரீடத்துடனும் வந்தான் ஒரு வீரன் . அவர்தான் “ஸ்ரீ வீர ருத்ர வன்னிய மஹாராஜா ”.

சிவபெருமானும் , தாய் பார்வதியும் தேவேந்திரனின் இரண்டாம் மகளான மந்திர மாலையை திருமணம் செய்து வைத்தார்கள் . மந்திர மாலை என்பவள் திரு முருகபெருமானின் மனைவியான தெய்வயானியின் தங்கையாவாள்.

இவர்களுக்கு நான்கு வீர ஆண்மகன்கள் பிறந்தார்கள் . அவர்களின் பெயர் “கிருஷ்ண வன்னியர் ,பிரம்ம வன்னியர், அக்னி வன்னியர் ,சம்பு வன்னியர்“ ஆவார்கள் .

இவர்களுக்கு காந்தா(சுஷீலா) என்னும் துறவியின் நான்கு மகள்களையும் திருமணம் செய்தார்கள் . அவர்களின் பெயர் “இந்திராணி , நாரணி ,சுந்தரி ,சுமங்கலி ஆவார்கள் .

அசுரனுடன் போர் :

சிவபெருமானின் அறிவுரைப்படி அசுரன் வாதாபியை வதம் செய்ய ருத்ர வன்னியர் , சிவபெருமான் அளித்த தம் படையுடன் தெற்கு நோக்கி சென்றார் .அங்கே உள்ள துர்க்கா பரமேஷ்வரியின் கோவிலுக்கு சென்று ,போரில் தமக்கு துணையாக இருக்குமாறு வணங்கினார் . அதற்க்கு ஆசி தரும் விதமாக, துர்க்கையின் பூத படையும் வன்னியருடன் வந்தது . அந்த படையையும் அழைத்துகொண்டு ருத்ர வன்னியர் கடற்கரையை நெருங்கும் போது , கடல் தானாக வழி விட்டது .அப்பொழுது அவர்களுடன் சென்ற ஒரு நாயால் ,அந்த கடற்கரையை தாண்ட இயலவில்லை .அதனால் அந்த நாய் மீண்டும் வன்னியரின் அரண்மனைக்கே திரும்பியது .

ருத்ர வன்னியரும் அவரது படையும் ரத்னா புரியை அடைந்த உடன் ,அசுரன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தர எண்ணினார் வன்னியர். நாரதரை அசுரன் வாதாபியுடன் சமாதானம் பேச அனுப்பினார். ஆனால் அது தோல்வியிலே முடிந்தது . அதன் விளைவு , வன்னியர் படைக்கும் அசர படைக்கும்  மிகப்பெரிய போர் உருவாயிற்று . 

அசுரர்களின் குலதெய்வமான காளி அம்மன் ,அசுரர்களுக்கு துணையாக இருந்தால் . மிக உக்கிரமாக நடந்த அந்த போரின் முடிவில் , ருத்ர வன்னியரின் கையால் அசுரன் வாதாபி கொல்லப்பட்டான் . பெண்கள் உட்பட அனைத்து அசுரர்களும் , வன்னியர் படையால் வதம் செய்யப்பட்டனர் . இருப்பினும் சுக்ராசாரியாரின் யோசனைப்படி ,நான்கு அசுர பெண்கள் மட்டும் மனித வடிவில் இருந்தனர் . இவர்களை கண்ட வன்னியர்கள் , இந்த பெண்கள் மனித குலத்தவர்கள் என்று நினைத்து வன்னியர்கள் ,அவர்களை வதம் செய்யாமல் தங்களோடு தம் அரண்மனைக்கு அழைத்து சென்றனர் . 

போர் முழுமையாக முடிந்தவுடன், துர்க்கையை தரிசித்து விட்டு ருத்ர வன்னியரும் அவரது படையும் தமது இருப்பிடத்திற்கு வந்தனர் .     
தம் இருப்பிடத்திற்கு வந்த ருத்ரா வன்னியர் அதிர்ச்சிக்கு உள்ளானார் . கடலை தாண்ட முடியாமல் வீட்டிற்கு வந்த நாயை கண்ட , ருத்ர வன்னியரின் மருமகள்கள் போரில் வன்னியர் படை வீழ்ந்தது என நினைத்து தங்கள் கணவர்மார்களும் மடிந்திருப்பர் என்று நினைத்தும் தீயை மூட்டி அதில் உடன் கட்டை ஏறி தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர் .
பிறகு , ருத்ர வன்னியரின் நான்கு வீர திருமகன்களும், தாங்கள் அழைத்து வந்த மனித உருவில் இருந்த அந்த நான்கு அசுர பெண்களையும் காந்தர்வ திருமணம் செய்து கொண்டு ,அவர்களோடு வாழ ஆரம்பித்தனர் .

வன்னியர்கள் ஆளும் நிலப்பகுதி :

சிவபெருமானும் , நாராயணனும் ருத்ர வன்னியரிடம் “சம்பு பகுதியை ஆட்சி செய்யுமாறு  கூறினர் . அதுபோல வடக்கே “பாலாறு வரை பிரம்ம வன்னியரிடமும் ,பெண்ணையாறு வரை கிருஷ்ண வன்னியரிடமும் , அங்கேருந்து வடக்கே “காவேரி வரை சம்பு வன்னியரிடமும் , தென்மேற்கு பகுதியை அக்னி வன்னியரிடமும் ஆட்சி செய்யுமாறு கூறினர் .
அதன் பிறகு , ருத்ர வன்னியர் மற்றொரு மகனை பெற்றார்  . அவர் பெயர் “சந்திர சேகர மகாராஜன் . ருத்ர வன்னியர் ,தம் ஆட்சி பொறுப்பை தமது மகன்  சந்திர சேகர மகாராஜனிடம் கொடுத்து விட்டு , தேவேந்த்ரனின் அழைப்பை ஏற்று இந்திர லோகத்திற்கு சென்றார் .

குறிப்பு :
Mr. Stuart  adds that" this tradition alludes to the destruction of the city of Vapi by Narasimha Varma, king of the Pallis or Pallavas." Vapi, or Va-api, was the ancient name of Vatapi or Badami in the Bombay Presidency. It was the capital of the Chalukyas, who, during the seventh century, were at feud with the Pallavas of the south.
"The son of Mahendra Varman I," writes Rai Bahadur V. Venkayya, "was Narasimha Varman I, who retrieved the fortunes of the family by repeatedly defeating the Cholas, Keralas, Kalabhras, and Pandyas. He also claims to have written the word victory as on a plate on Pulikesin's * back, which was caused to be visible (i.e., which was turned in flight after defeat) at several battles. Narasimha Varman carried the war into Chalukyan territory, and actually captured Vatapi their capital.

This claim of his is established by an inscription found at Badami, from which it appears that Narasimha Varman bore the title Mahamalla. In later times, too, this Pallava king was known as Vatapi Konda Narasingapottaraiyan. Dr. Fleet assigns the capture of the Chalukya capital to about A.D. 642. The war of Narasimha Varman with Pulikesin is mentioned in the Sinhalese chronicle Mahavamsa. It is also hinted at in the Tamil Periyapuranam. The well-known saint Siruttonda, who had his only son cut up and cooked in order to satisfy the appetite of the god Siva disguised as a devotee, is said to have reduced to dust the city of Vatapi for his royal master, who could be no other than the Pallava king Narasimha Varman

Like Vanniyars, Rajputs also called themselves as AgniKulaKshatriya and they are following the Same Agni Puranam as their Myth.Even some Gujarati comunities called themselves as Vaniya.


  

Tuesday, November 29, 2011

சம்புவராயர்

சுந்தர சோழன் காலத்தில் (கி.பி 10 ஆம் நூற்றாண்டு) 'ஓமயிந்தன் முந்நூற்றுவன் பள்ளியான கரணமாணிக்கம்' என்பான் சம்புவராயர் குல முன்னோடி.இவன் பள்ளி குலத்தவன்.இவன் குறுநிலத் தலைவன் ஆவான்.( South Indian Inscriptions - Vol 7, no.500)

இவனுக்குப் பிறகு அறியப்படும் குறுநிலத்தலைவன் செங்கேணி சாத்த நாலாயிரவன் எனும் கரிகாலச்சோழ நாடாள்வான்:இவனது கல்வெட்டுக்கள் திண்டிவனப் பகுதியான கிடங்கலில் காணப் பெறுகிறது.இவன் சோழ மன்னரான அதி ராஜேந்திரன் காலத்தில் குறுநில மன்னனாக் ஆட்சி செய்தவன்.(ARSIE,1902,no.227, S.I.I.Vol 7, No. 854)


சம்புவராய மன்னனாகிய ஓய்மா நாட்டு முந்நூற்றுப் பள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் எனும் ராஜேந்திர சோழ சம்புவராயன் என்பான் கி.பி 1128 வாக்கில் ஆட்சி செய்த குறு நில மன்னனாவான். இக்குறு நில மன்னனின் பத்து கல்வெட்டுகள் கி.பி 1123 ஆம் ஆண்டு முதல் கி.பி 1174 ஆம் ஆண்டு முடிய எழுதப் பெற்றிருக்கின்றன.

வேலூர் மாவட்டம் திருவல்லம்(ARE 232 of 1921),வாயலூர் (ARE 422 of 1922), காஞ்சி மாவட்டம் மதுராந்தகம்(ARE 400 of 1922), திருவண்ணாமலை மாவட்டம் சீயமங்கலம்(ARE 63 of 1900),மடம்(ARE 234 of 1919, 238 of 1919, 252 of 1919 and 100 of 1939-1940),தேவனூர்(ARE 298 of 1929 and 302 of 1929),திருக்கழுக்குன்றம்(ARE 126 of 1932-33) ஆகிய இடங்களில் இவ்வரசனுடைய பத்து கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன.

இந்த சம்புவராய மன்னர்கள் பள்ளி குலத்தவர் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப் படுகின்றனர். இவர்கள் சுந்தரச் சோழன் ஆட்சி காலம் முதல் விஜய நகர வேந்தர் படையெடுப்பு வரை தொடர்ந்து தொண்டை மண்டலப் பகுதி ஆட்சியாளர்களாகவும் , குறு நில மன்னர்களாகவும் விளங்கினர். விஜய நகர வேந்தர் படையெடுப்பின் போது முழுவுரிமை பெற்ற மன்னர்களாய் விளங்கினர். 

இம்மன்னர்கள் கல்வெட்டுக்கள் மூலம் இவர்கள் பள்ளி குலத்தவர் என்பதை அறியலாம்.தமிழக வரலாற்றாசிரியர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். சம்புவராயர் குறித்த வரலாற்று நூல்களும் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இவர்கள் வன்னியர்(பள்ளி) குலத்தவர் என்று கூறுகின்றன.
சம்புவராய மன்னர்கள் வன்னியர் குலத்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.

சோழர் காலத்தில் அவர் சிற்றரசராய் தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி செய்தோர் வன்னியரே என்பது உறுதி.

சம்புவராயர்கள்
கி.பி.1340
சம்புவராயர்கள் சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராசகம்பீர இராச்சியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராசராசசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராசகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.
கி.பி.14
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம் வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க் குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதர்வு பெற்றவர்கள். இவர்களின் நாணயங்கள் " வீரசெம்பன் குளிகைகள்" என அழைக்கப்பட்டன. தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். "அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தார்கள்".
ராஜ கம்பீர சம்புவராயர் - கி பி 1236 - 1268
மண் கொண்ட சம்புவராயர் - கி பி 1322 - 1337
ராஜ நாராயண சம்புவராயர் - கி பி 1337 - 1373
மூன்றாம் ராஜ நாராயண சம்புவராயர் - கி பி 1356 - 1375

உடையார்பாளையம்&பிச்சாவரம் ஜமீந்தார்கள்:


வன்னியர்களுக்குள்ள பட்டப்பெயர்களுள் உடையார் என்பதும் ஒன்று.உடையார் மட்டுமல்ல முதலியார்,  தேவர் போன்ற பட்டங்களும் வன்னியருக்குண்டு.

உடையர் என அழைக்கப்படுவோரெல்லாம் உடையார் இனம் எனக் கூறமுடியாது. உடையார்பாளையம்,அரியலூர் இவ்விரண்டும் வன்னியராண்ட சமஸ்தானங்கள்.வரலாற்று நூல்களும் உடையார்பாளையம் ஜமீந்தார்களை வன்னியர் என்றே கூறுகின்றன.

சில ஆதாரங்கள்:

1.பிச்சாவரம் ஜமீந்தார்கள் வன்னியர் குலத்தினர்.
தற்போதைய ஜமீந்தார் திரு.சிதம்பரநாத சூரப்ப சோழனார்.

இவரது பெற்றோர்கள்: தந்தை -திரு.ஆண்டியப்ப சூரப்ப சோழனார்.

தாய் - திருமதி.ஜலகந்தி ஆயாள்

இப்போதைய ஜமீந்தாரின் தாயாரான திருமதி ஜலகந்தி ஆயாள் அவர்கள் உடையார்பாளையம் ஜமீந்தார் திரு. கச்சி பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார் அவர்களின் மகளாவார்.

பிச்சாவரம் ஜமீந்தார்கள் பெண் கொடுப்பதும்,பெண் எடுப்பதும் வன்னியர் குல ஜமீந்தார்கள் குடும்பத்திலிருந்துதான்.இது நெடுங்காலமாக இவர்கள் கடைபிடித்துவரும் வழக்கம்.


2.உடையார்பாளையம் ஜமீந்தார்களின் நில விற்பனை ஆவணங்களில் இவர்கள் "வன்னிய ஷத்திரிய ஜாதி,சிவமதம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

3.சில நூல்களில் இவர்கள் சிங்கக் கொடியுடைய பிரம்ம வன்னியர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.(Brahma Vanniyar with a lion flag)

4.உடையார்பாளையம் சமஸ்தானத்தின் 24 ஆவது ஜமீந்தார் திரு. கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார் என்பவர் தமது மரபு வழிப் பட்டியலை தயாரிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அப்படியலில் இவர்கள் வன்னியர் குலத்தில் தோன்றியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


"The Udayarpalayam zamin family took its origin from Vanniya kulam(the family of the god of fire)"

இறுதி ஆதாரம்:

தற்போதைய உடையார்பாளையம் ஜமீந்தாரான திரு.பெரிய குழந்தை ராஜா காலாட்கள் தோழ உடையார் அவர்கள் இன்றும் பழைய ஜமீன் மாளிகையில் வசித்துவருகிறார்.இவர் வன்னியர் இனத்தவர் என்றே சில வரலாற்றாசிரியர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடிருக்கிறார்.

இவருக்கு ஆறு மகன்கள். திரு.ராஜ்குமார்,திரு.பழனியப்பன்,திரு.சத்
தீஷ்குமார், திரு.ஜெயகுமார்,திரு.விஜயகுமார்,திரு.பரணீஸ்வர சிவகுமார், திரு.நந்தகுமார் என்பவர்களாவர்.இவர்கள் அனைவரும் தம்மை வன்னியர் இனத்தவராகவே கூறியுள்ளனர்.

எனவே உடையார்பாளையம் ஜமீந்தார்கள் வன்னியர் குலத்தவர் என்பதே உண்மை.














வன்னிய இரட்டை அரசர்கள் காந்தவராயன் & சேந்தவராயன் :


செங்கற்பட்டு மன்னன், கலம்பக புகழ்ப் கொண்ட காந்தவராயனுக்குச் சிலை அமைக்கவேண்டுமென பல்லாண்டுகளாக மக்கள் கூறி வருகின்றனர். உவமை கவிஞர் சுரதா "வன்னிய வீரன்" என்ற தலைப்பில் காவியம் எழுதி உள்ளார். அவ்வரசனை பற்றிய வரலாறு.

செங்கற்பட்டிற்க்கு அருகாமையில் திருவிடைச்சுரத்தினை காந்தவராயன், சேந்தவராயன் என்ற இரட்டை வன்னியக்குல பள்ளி மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஏறக்குறைய
கி பி 1520 இல் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அவர் கட்டளைக்கு இணங்க மறுத்து வணங்கா முடியர் ஆயினார் இரட்டையர்.

வரி தர மறுத்த மன்னர்களின் மணி முடியை அடக்கிய கிருஷ்ண தேவராயருக்கு இவர்கள் அடங்காது சிம்மா சொப்பனமாக விளங்கி வரி தராதது மனதில் மருட்சியை உண்டாக்கியது.

தென் வடக்காக 1149 அடி, கீழ் மேற்காக 2000 அடி, அலங்கச் சுவர் அகலம் 20 அடி, இதற்க்கு 30 அடி அகழி சூழ் கோட்டை, இக்கோட்டைக்குள் ஓர் உள் கோட்டை. உள்கோட்டையும் அரண்மனையும் மலை மேல் அமைத்து ஏட்டில் எழுதவென்னா ஆற்றலோடு ஆண்டு வரும் வன்னிய மன்னராகிய நம்மிடம் அந்நியன் வரி கேட்பதாவது, நாம் கொடுப்பதாவது என ஆர்ப்பரித்தனர். கிருஷ்ண தேவராயர் இரட்டையார் மேல் பெரும் படையை ஏவினார், மடை திறந்த வெள்ளம் என மாற்றான் அனுப்பிய படைகள் காந்தவராயன் இருக்குமிடம் தெரியாது கலங்கினார்.

போர் முனையில் காற்றென விரையும் போர் புறவியேறி காட்டாறு விரைவிலே கலக்கி, கிருஷ்ண தேவராயர் படையை முறியடித்து போர் கொடி உயர்த்தினான் புலி மறவன் காந்தவராயன். கிருஷ்ண தேவராயர் படை நான்கு திங்கள் முற்றுகையிட்டும் என்ன? ஆந்திரம் தமிழின் அடி வீழ்ந்தது. வன்னியரை அவர் தம் ஆட்சியை பொறாத அந்நிய முதலியின் சொல்படி உய்யாள்வான் என்ற பாளையக்காரன் கிருஷ்ண தேவராயன் ஆணைப்படி ஆறு மாதம் போரிட்டும் வீறு காணாது தோல்வியை தழுவினான்.

வன்னியரின் வெற்றியை பொறுத்து கொள்ள முடியாத அந்நிய முதலி, மன்னன் கிருஷ்ண தேவராயனிடம் ஒரு சூழ்ச்சி மூட்டையை அவிழ்த்தான். அதற்க்கு பதிலாக ஒரு பொன் முடிப்பும் பெற்றான். வெருகூர் நோக்கி சென்ற குப்பாச்சி என்ற ஆடல் மகளை அழைத்து வந்து கிருஷ்ண தேவாராயனிடம் விட்டான். காந்தவராயன் தலையை எனக்கு கொண்டு வந்து தந்தால் பதினாயிரம் பொன் பரிசு ! இயலுமா? என்றான் கிருஷ்ண தேவராயன். சரி என்றால் குப்பாச்சி. காந்தவராயனிடம் சென்றாள், வாள் முனையில் வெல்ல முடியாத அவன் ஆண்மையை விழி முனையில் மயக்கத்தில் ஆழ்த்தி, வாயில் அமுதம் கையில்
கனிச்சாற்றொடு நஞ்சு கலந்து, காந்தவராயனுக்கு தந்தாள் அந்த வஞ்ச மகள்.

இறந்த காந்தவராயனின் மணி முடியை துண்டித்து கையில் எந்தி கிருஷ்ண தேவராயனின் மெய் சிலிர்க்க அவன் காலடியில் கிடத்தினான். போலி வெற்றி பெற்ற கிருஷ்ண தேவராயன் புன்னகை பூத்தான்.

கருகியது காந்தவராயன் ஏற்றிய மறம், கன்னி தமிழ் இரட்டையரின் கலம்பக கொண்ட மாவீரன் காந்தவராயனின் சேந்த மேனியை செந்தணல் தழுவியது. ஒப்பந்த படி ஒரு பதினாயிரம் பெற்றாள். தலை தந்த வேசிக்கு விலை தந்தான் கிருஷ்ண தேவராயன். அவன் ராஜதந்திரி. 

வீர புகழ் சுமந்த காந்தவராயனின் முடிவு சேந்தவராயன் உடலின் செங்குருதி கொதித்து கொப்பளித்தது. இடியோசை கேட்ட நாகமென அண்ணன் மடிந்த அவலத்தால் மண்ணில் வீழ்ந்து மயங்கினான், துவண்டான், துடித்தான், பதறினான்.

சபதம் மேற்கொண்டான் சேந்தவராயன். கிருஷ்ண தேவராயன் மேல் போர் தொடுத்தான். குகையை விட்டு பழியொழிக்க புறப்படும் சிங்கம் போல் புறப்பட்டு சென்று கிருஷ்ண தேவராயனின் படைகளை கண்ட துண்டமாக்கி எண்டிசையும் சிதறி ஓட முறியடித்தான் அந்த வன்னிய மாவீரன். சதியால் தன் அண்ணன் காந்தவராயனை கொன்ற ஆடல் அழகி குப்பாச்சியையும் அவள் உறவுகளையும் கொன்று அவர்கள் தலைகளை ஏரியில் மிதக்க விட்டான் சேந்தவராயன். பிணா ஊர் என்றும் ஏரிக்கு பிணா ஏரி என்றும் இன்றும் பெயர் வழங்குகிறது. அவள் இருந்த இடம் குப்பாச்சி மேடு என்று இன்றும் வழங்குகிறது.


திருவிடைச்சுரத்தில் இன்றும் அந்த வன்னிய அரசர்களின் கோட்டை இருக்கிறது.

  நன்றி : பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்

கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி:


முன்னொரு காலத்தில் கொல்லி மலையையும், அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் வல்வில் ஓரி என்பவன் ஆண்டு வந்தான். அறிவிலும், செல்வத்திலும், ஈகைக் குணத்திலும் சிறந்து விளங்கிய வள்ளல் பலருள் ஓரியும் ஒருவன். அவன் ஈகையில் சிறந்து விளங்கியது போலவே வீரத்திலும் சிறந்து விளங்கினான்.


இவன் அம்பு எய்தால் குறி தவறுவதில்லை. அவன் வைத்திருந்த வில்லும் வலிமை வாய்ந்தது. கூர்மையான அம்புகளும் அவனிடத்தில் எப்பொழுதும் இருக்கும். அதனாலேயே அவனுக்கு "வல்வில் ஓரி' என்ற பெயரும் ஏற்பட்டது. அவனிடம் விரைந்து செல்லக் கூடிய திறமையும், அழகுமுடைய குதிரையொன்றும் இருந்து. அந்தக் குதிரையின் பெயரைச் சொன்னாலே பகைவர்கள் அஞ்சும் அளவுக்கு இருந்தது. இவ்வாறு பல வகையிலும் புகழ் பெற்று விளங்கினான் ஓரி. கொல்லிமலை இயற்கை அழகு வாய்ந்தது. அழகிய பூக்களும், காய்களும், கனிகளும் நிரம்பி வழியும். எங்குப் பார்த்தாலும் தேன் கூடுகள் குடம் போல தொங்கிக் கொண்டிருக்கும். அருவிகளின் சலசலத்த ஓசை கேட்கும். மலையிலே வந்து படியும் மேகத்தைக் கண்டு மயில்கள் தோகை விரித்தாடும். இத்தகைய அழகு கொழிக்கும் மலை நாட்டை வல்வில் ஓரி ஆண்டு வந்தான்.


குடி மக்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்தான். அவர்களுக்கு பல வகையிலும் ஏற்படக் கூடிய கேடுகளை எல்லாம் நீக்கி, ஒரு குறையுமில்லாமல் காத்து வந்தான். அவனுடைய ஈகை குணத்தைக் கேட்டு புலவர்களும், பாணர்களும், கூத்தர்களும் எப்பொழுதும் வந்து கொண்டிருந்தனர். ஓரியும், வருபவர்களுக்கெல்லாம் யானையும், குதிரையும், மற்ற செல்வங்களையும் கொடுத்து சிறப்பித்தான்.


ஒரு நாள் வேட்டையாடுவதற்காக வில்லையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டு காட்டிற்குச் சென்றான். ஓரிடத்தில் திறமையும் இருந்தது, வலிமை வாய்ந்த வில்லும், கூர்மையான அம்பும் இருந்தது. காட்டிற்கு வந்த ஓரியின் கழுகுக் கண்கள் சுற்றும் முற்றும் பார்த்தன. ஒரே அம்பினால், பல உயிர்களையும் வீழ்த்த வேண்டுமென்ற ஒரு புதிய ஆவல், அவன் மனதில் எழுந்தது. அதனால், தக்க சமயத்தை எதிர்நோக்கி சுற்றி சுற்றி வந்தான். அவன் எதிர்பார்த்த சமயமும் அவனுக்குக் கிடைத்தது.


ஓரி, சிறிது தொலைவிலே மலைபோல நடந்து வரும் மதயானை ஒன்றைக் கண்டான். அதனைக் கண்டதும் அம்பு தொடுத்தான் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அதற்கும் அப்பால் கொடிய புலியொன்று உலவிக் கொண்டு இருப்பதைப் பார்த்தான். அதையும் அவன் மனதில் நினைக்கவில்லை, புலிக்கும் அப்பால், மரங்களுக்கு இடையில் மறைந்து மறைந்து துள்ளியோடும் புள்ளிமானைக் கண்டான்.


புள்ளிமானுக்கும் அப்பால் கறுப்பு நிறத்தில் பன்றி ஒன்று எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தது. பன்றிக்கு சிறிது தொலைவிலே உடும்பு ஒன்று அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. இவையெல்லாம் ஓரியின் பார்வையிலே பட்டு விட்டன. கண் மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் ஓரியின் வில்லிலிருந்து கூரிய அம்பு ஒன்று புறப்பட்டது. அது எதிரே கண்ட அனைத்து மிருகங்களின் உடல்களிலும் சென்று பாய்ந்து கடைசியில் உடும்பின் உடலில் பாய்ந்து நின்றது. ஓரியின் வில்லாண்மைக்கு இது ஒரு சான்றாகும்.


ஒரே அம்பைக் கொண்டு ஒரே முறையில் ஐந்து உயிர்களைக் கொன்ற ஓரியின் வில்லாண்மையை அவ்வழியே வந்த வன்பரணர் என்னும் புலவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால், அவர் ஏற்கனவே ஓரியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாரே தவிர, அவனை நேரில் பார்த்ததில்லை. தம் எதிரில் நிற்பவன் வேடனாக இருக்குமோ என்ற ஐயம் ஒரு பக்கம் இருந்தது. இன்னொரு பக்கம் அவன் ஓரியாகவும் இருக்கலாம் என்று சந்தேகமும் ஏற்பட்டது. அவனே தன்னை அடையாளம் சொல்வதாக இல்லை. எனவே, ஒரு தந்திரம் செய்தார்.


தம்முடன் வந்த பாணர்களையும், கூத்தர்களையும் பார்த்து சொல்வது போல பேசினார். ஒரே சமயத்தில் ஒரே அம்பினால் ஐந்து உயிர்களையும் கொன்றவன் வேடனாக இருக்கலாமோ? அவைகளை விலைக்கு விற்பதற்காக வேட்டையாடி இருக்கிறானோ அல்லது அருவி பாயும் கொல்லிமலை தலைவனாகிய ஓரியாக இருக்கலாமோ? யார் என்றே சரியாக அறிய முடியவில்லையே? ஆனால், இவன் தோற்றத்தைக் கொண்டு பார்த்தால் ஓரியாகத் தான் இருக்க வேண்டும். எதற்கும் உங்கள் வாத்தியங்களை மீட்ப்பாருங்கள், ஓரியின் புகழைப் பாடுவோம்.

வன்பரணர் அவ்வாறு பேசிய உடனே ஓரி வழிக்கு வந்து விட்டான். அதற்கு மேல் அவன் செய்கை அவரைப் பேச விடவில்லை. தன்னுடைய பெயரைக் கூறியதும் நாணி நின்றான். உடனே தான் கொன்ற மானின் இறைச்சியைப் பதப்படுத்தினான். புலவர்க்கும் மற்றவர்க்கும் கொடுத்து அவர்களை தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றான். வேண்டாமென்று சொல்லும் வரையிலும் பொன்னும் மணியும் வாரி வழங்கினான். ஓரியினது ஈகையைக் கண்டு அவர்கள் திகைத்துப் போயினர்.


இவ்வாறு தன்னை பாடி வந்தவர்க்கும், நாடி வந்தவர்க்கும் பொன்னும் பொருளும் கொடுத்ததோடு, யானைகளையும் பரிசாகக் கொடுத்தான். வாரி வழங்க வழங்க அவனது செல்வம் வளர்ந்ததே தவிர சிறிதும் குறையவில்லை. "நப்பாலத்தனார்' என்னும் புலவர் அவனிடத்தில் அளவற்ற செல்வம் குவிந்திருந்தது என்று சொல்லியுள்ளார்.


"கழைதின் யானையார்' என்னும் புலவர் அவனது ஈகைப் பெருமையை மனமாரப் பாராட்டியுள்ளார். உலகத்து உயிர்களை எல்லாம் வளர்ப்பது நீராகும். நீர் இல்லாவிட்டால் உயிர்கள் வாழ இயலாது. அப்படிப்பட்ட உண்ணும் நீரைப் போல ஓரி வழங்கினான் என்று பாராட்டினார். ஈகையிலும், செல்வத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய ஓரியின் புகழ், புலவர்களாலும் பாணர்களாலும் கொல்லிமலைக்கு அப்பாலும் பரவியது. கொல்லிமலையின் செழிப்பும், ஓரியின் புகழும் பேரரசன் ஒருவனைப் பொறாமை அடையச் செய்தது.

"பெருஞ்சேரல் இரும்பொறை' என்னும் சேர மன்னன், கொல்லி மலைமேல் கண் வைத்திருந்தான். அவனது பொறாமை, ஓரியின் நேர்மையான ஆட்சியை மறைத்தது. அவனை விட பெரிய அரசன் என்பதையும் மறந்தான். எந்த வழியிலாவது கொல்லிமலையை தனக்கு சொந்தம் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவன் கண் முன் நின்றது.

ஓரியோ சிற்றரசன், பேரரசனாகிய தான் நேருக்கு நேர் நின்று போரிடுவது நன்றாக இராது என்று சேரன் எண்ணினான். ஓரிக்கு பகைவர் யார் இருக்கிறார் என்று எண்ணியபோது, திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி நினைவுக்கு வந்தான். அவன் தன் ஊருக்கு அழைத்து விருந்து உபசரித்து தனது கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பாக உணர்த்தினான்.


மலையமான் திருமுடிக்காரியும் ஓரியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேரன் மறைமுகமாக உதவிய படைகளின் துணை கொண்டு, ஓரி மீது போர் தொடுத்தான். ஓரியும் அவனைச் சார்ந்த வீரர்களும் தங்கள் வீரத்தைக் காட்டி அறியாமல் ஓரி இறுதி வரையிலும் போரிட்டான். அவர்களது பெரும் போரினிடையே, அம்பு ஒன்று ஓரியின் மார்பில் பாய்ந்தது. வந்தவரை வரவேற்றுப் போற்றிய வள்ளல் ஓரி மடிந்தான். கொல்லிமலையும் சேரனது கைக்கு மாறியது. ஓரியின் பிரிவு இரவலரை எல்லாம் துன்பத்தில் ஆழ்த்தியது என்பதனை சொல்லவும் வேண்டுமோ?

============================================================
ஓரி, மலையமான் மற்றும் சேரனும் வன்னியர்கள் தான்

நம் மக்களே நம் மக்களை வீழ்த்திய கதை பல உண்டு...இன்றும் அது தான் நடந்து கொண்டு இருக்கிறது...